symbicort generic alternative symbicort generic name piemontelab.com symbicort generic canada "பைக்' இல்லாதவனை "சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழலாம்-- இரா.செந்தில்குமார்
நவம்பர் 15,2011,00:00 IST
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி, மரத்தின் மீதேறி வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டு நடக்கையில், எக்கச்சக்கமாக எள்ளி நகைத்த வேதாளம்,
"என்னடி மீனாட்சி "இன்னோவா' என்னாச்சு
பெட்ரோலு விலையேறிப் போயாச்சு
காலு ரெண்டும் காராக ஆச்சு''
என்று கம்பீரமாய் பாட, கடுப்பில் முறைத்தான் விக்கி.
"கோவிச்சுக்காத நண்பா, காரை காணோம்ன்ன உடனே பாட்டுப் பாடத் தோணுச்சு அது தப்பா? காருல போற உனக்கே பெட்ரோல், டீசல் ஊத்தி கட்டுபடி ஆகலேன்னா, கஞ்சிக்கே சிங்கியடிக்கிற நாங்க என்னத்தப் பண்ணுவோம்? பெட்ரோல் விலையக் காரணம் காட்டி, உப்பு, புளி, மொளகாய்ல இருந்து ஊறுகா பாட்டில் வரைக்கும் அத்தனையும் வெலை ஏறிப்போச்சு நண்பா.
குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக் குடுத்து ஓட்டு கேட்ட "கை', இன்னைக்கு கோவணத்துக்கே வேட்டு வெக்கத் தொடங்கிருச்சு. தஞ்சாவூரு பொம்மையப் புடிச்சு தலைமையில உக்கார வெச்சா நாடு, நடுத்தெருவுலதான் நிக்கும்ங்கறதுக்கு மின்மோகன் ஆட்சிதான் மிகச்சிறந்த உதாரணம்ன்னு ஜனங்க பேசிக்கறாங்க.
இப்ப எல்லாம், டூ வீலருக்கு பெட்ரோல் போட்டு ஓட்டுறதே "இன்டர்நேசனல் டூர்' போக ஆசைப்படுறது மாதிரி "காஸ்ட்லி' சமாச்சாரம் ஆகிபோச்சு. ஊரெல்லாம் அல்லெடுத்து "இனிசியல் பேமென்டு' கட்டி, பேங்க்காரங்க போடுற சேவைக் கட்டணம், சேமியா பொட்டலம், அஞ்சு "இன்ட்ரஸ்ட்டு', அநியாய "இன்சால்மென்ட்டு' அத்தனைக்கும் "ஓகே' சொல்லி வண்டிய எடுக்கறவனுக்கு இதெல்லாம் கட்டுபடியாகுமா?
இத்தனை கஷ்டத்துல வண்டிய எடுத்துட்டு, கஞ்சிக்கு வழியில்லாட்டியும் "டியூ'வை மட்டும் கரெக்ட்டா கட்டுறாங்க ஜனங்க. இல்லேன்னா, அதிகாலை அஞ்சு மணிக்கு வந்து வண்டிய "அபேஸ்' பண்ணீருவாங்க. "டியூ' கட்டாம வண்டிய மிஸ் பண்ணுனவனை, ஊருகாரனுகாரங்க மட்டுமில்ல அவனோட ஊட்டுக்காரம்மா கூட மதிக்கறதில்லை.
இவ்வளவு கஷ்டப்பட்டு வண்டி வாங்கணுமான்னு நீ கேக்கலாம். என்ன பண்ணுறது? நம்ம இளவட்டப் புள்ளைங்க எல்லாம், "பைக்' இல்லாத பையனை "சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழுந்தறலாம்ன்னு நெனைக்கறாங்க. பைக் இல்லாம சைட் அடிக்க முடியாது; காசு இல்லாம காதலிக்க முடியாதுங்கற சூழல்ல பசங்க என்னதான் பண்ணுவாங்க?.
"அட்டு பிகரை' மடக்கக் கூட "அப்பாச்சி' வேணும்; ஊரே பாக்கற பிகரை மடக்க "யூனிக்கார்ன் 'ஆவது வேணும் நண்பா. "டூ வீலர்' இல்லாம கனவுல கூட "டூயட்' பாட முடியாதுன்னா, கடன்பட்டாவது வண்டி வாங்கித்தான ஆவாங்க?. அப்படி வாங்குனாலும் வருஷத்துக்கு ஒரு தடவை கூட வண்டிய மெயின்ல ஓட்ட முடியறதில்லை. பெட்ரோல் விலை ஏர்றதைப் பாத்தா இனி ரிசர்வுல ஓட்டுறது கூட ரிஸ்க் ஆயிரும் போல.
இதனால, நம்ம பசங்களோட "டூவீலர் கனவு' "டூயட் கனவு' ரெண்டுமே "டூமில்' ஆகிறதைப் பாத்தா மனசுக்கு கஷ்டமா இருக்கு நண்பா. இந்த விஷயத்துல யாரைக் குத்தம் சொல்றது? இதுக்கு சரியான பதில் தெரிஞ்சும் சொல்லுலேன்னா உன் தலை வெடிக்கும்,'' என்றது வேதாளம்.
"குரங்கைப் புடிச்சு ரோட்டுல வித்தை காட்டுனா கூட "புளூ கிராஸ்'ல இருந்து "ஏன்?'னு கேப்பாங்க. "பட்' சிங்கத்தைப் புடிச்சு சீட்டுல உக்கார வெச்சு வித்தை காட்டுறாங்க; ஜனங்க ஏன்னு ஒரு வார்த்தை கூட கேக்கலையே. இப்ப சொல்லு குத்தம் யாரு மேல? வழியில போற கார்பென்டரைக் கூப்புட்டு "என் வாயில ஒரு ஆப்பு வெய்'யின்னு சொன்ன கதையா, எல்லாத்தையும் தானா தேடிக்கிட்டு குத்தம் சொல்ல எவன் கிடைப்பான்னு அலையக் கூடாது. சரியா ஆடாதது, சிங்கத்தோட குத்தம் மட்டுமில்லை. ரிங் மாஸ்டருக்கும் அவனைச் சுத்தி நின்னு கை தட்டுற ஜனங்களுக்கும் அந்த குத்தத்துல பங்கிருக்கு.
அதே மாதிரி, ஆசைப்பட்டதை அடைய தகுதிய வளர்த்துக்கணுமே தவிர கடனை வளர்த்துக்க கூடாது. கடனை வாங்கி வீட்டை நெறைக்கறது; அதைக் கட்டுறதுக்காக வாழ்க்கைய வெறுக்கறது, இது தேவையா? விளம்பரங்களைப் பாத்து மனசு ஏங்குனா, அது முதல் தப்பு. "ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்'னு ஓய்ஞ்சு போறது ரெண்டாவது தப்பு. வாழ்க்கை முறைய மாத்திக்க வருமானத்தை கூட்டணுமே தவிர கடனைக் கூட்டக் கூடாது. இப்ப நான் யாரைக் குத்தம் சொல்றேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்,'' என்றான் விக்கி.
விக்கியின் இந்த பதிலால் அவன் மௌனம் கலைந்தது; விழி பிதுங்கிய வேதாளம் பறந்தது.
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=602 |