Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே...
Posted By:peer On 2/12/2012

acheter nifedipine 20mg

nifedipine lp 20 read here nifedipine topique

ஓதுற பள்ளில கம்சு ? ஆற்றில் காலை கடனை கழித்துக்கொண்டு அன்றைய பொழுதை கழிப்பதை பற்றி ? தெருவில் மணல் வீடு ? நவாப்பழம் அடிக்க வள்ளியூர் போவது ? அருணா தியேட்டரில் படம் ? ரிசல்ட் வரும் அன்று வீட்டில் அடி ?... உண்மையிலேயே அந்த நாள் நினைவுகள் எவ்வளவு பசுமையானவை. இப்போதும் மனது ஏங்குகிறது.

கசம் இப்போது இருக்கிறதா ?

- Alimalick Peermohamed

 

இன்று ஆறே இல்லை,மணல் இல்லை,கசம் இல்லை - Mohammed Meera Sahib

 

அஸ்ஸலாமு அலைக்கும்.
ரோட்டுப் பள்ளிக்கூடத்துக்கு மண் வைத்துவிட்டு, ஆற்றில் குளித்துவிட்டு, ஈரமான லுங்கியை பள்ளி விடுவதற்கு முன் காயப்போட்டு விட்டு, அவசர, அவசரமாக, வீட்டுக்குப் போனால், ம்மா பிரம்பை வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். என்னடா இது எப்படி வீட்டுக்குத் தெரிந்தது, என்று யோசனை செய்யும்போது, தெரிய வரும். யாரோ ஒரு அப்பா பார்த்துவிட்டு போட்டுக் கொடுத்தது. துணியைக் காயப்போடும் போது “ வண்ணான் சீலைக் காயாதே! என் சீலைக் காயு“ என்று பாடியதை மறக்க முடியுமா? - Mustafa Hasan Kamal

 

அது மட்டுமா,கள்ள குளி குளித்துவிட்டு தலைகாய மணலை தலையில் தேய்ப்பது,திருட்டு புகை பிடித்து அது தெரியாமல் இருக்க வாயில் புளிய மரத்தின் இலை,முள்ளு மரத்தின்கொழுந்து ஆகியவற்றை வாயில் தேய்ப்பது,தாளை சுருட்டி தம் அடித்து ஷேய்க் உதுமான் காகாவிடம் (மு முத்தவல்லி)அடிவாங்கிய அனுபவம் உண்டு.ரமலான் மாதம் 27 அன்று பள்ளிக்காக வீடுதோறும் பழம்,சக்கரை,முக்குடி பணியாரம் ஆகியவற்றை வாங்கி அதில் பாதி சாப்பிடுவது, பிலிம் வாங்குவது,MGR பிலிம் 5 பைசா,மற்றவை 3 பைசா இந்த விலை நிர்ணயம் செய்வது 8 வது தெரு அலியப்பா,அலிமாலிக் பீர்காகா(நினைவிருக்கா பீர்காக்கா) - Mohideen Sahib

 

கோவில் வாசலில் மீயான் சாரிடம் இங்லீஸ் டியூஸன்(இப்போதும் நமக்கு இங்லீஸ்னா தரிகிடதோம் தான் ) படிக்க அனுப்புவாங்க ,மாதா மாதம் டீயூஸன் பீஸை மட்டும் கொடுக்க போவேன் ,மத்த நாள்களில் ஆத்து பெரியா பாலத்துக்கு கீல ஓருத்தர் தோட்டம் போட்டு இருந்தார் அங்க போய் இருப்பேன் ,ஒரு முறை பாலத்தில் இருந்து என் காக்கா பார்த்து விட்டார்,வீட்டுக்கு போனதும் எங்க போய்டு வாரெனு காக்கா கேட்க நான் டியூஸன்னு சொல்ல விட்டாரு பாருங்க ஓரு அடி இப்போ நினைத்தாலும் காதுல கிங்ங்ங்ங்ங்ங்ங்ங்னு ஒரு சத்தம் வரும்.... Hameed Hamsha

 

ஹம்சாகாக்கா என்னை மயிலாடுதுறை மதரசாவில்சேர்க்க என்வீட்டில் தேடிக்கொண்டு இருக்கும்போதுஒளிந்துகொண்டுஇருந்தஎன்னை நீங்க.பீர்(கொசினி )கவன்னா(சூப்பி)பீர்(கறிக்கடை)கொல்லான்(ஆனப்புள்ள) வெள்ளைப்பாகாக்கா.சலாகுதியப்பா(ams)உதுமான்கனி (ஊத்து)எல்லோரும்சேர்ந்து புதுமனை பொட்டலில்இருந்தமுள்ளுகாட்டிலில்உள்ள கூடாரத்தில் இருந்தஎன்னை பிடித்து கொடுத்திற்களே ஞாபகம் இருக்கா? - Fariq Mohammad

 

புதுபொண்ணுமாப்பிள்ளையை மறுவீட்டுக்கு கூட்டிட்டுபோகவரும் சக்கடாவண்டியின் முன்னாடி உள்ள கோஸ் பெட்டியில் உட்கார இடம்பிடிக்க சக்கடா வண்டிகாரருக்கு யாருக்கும் தெரியாமல் கல்யாணவீட்டிலுள்ளவர்களிடம் ஊழல்செய்து வெத்தலை பையை எடுத்து லஞ்சமாக கொடுக்க ஊழல் செய்ததைவிட "ஸ்பெக்ட்ரம்ஊழல்" எல்லாம் ஒரு ஊழலாங்க.....டம்மிஊழல்.. -  - Fariq Mohammad

 

டிபி டிபி வாட் கலர், 6ம் பெருனால்(காட்டு பள்ளி)... காக்கா கல்யனா வீட்டு "எடுப்பு சோரு" எல்லோரும் மறந்து விட்டீர்கள். - Imaran Hussain

 

டிபி டிபி வாட் கலர் நு ஒரு விளையாட்டு ..... இதுல ஒருதர் நின்னு கும்பளா இருக்கறவங்கள்ட்ட கேக்கனும் அவரு சொல்ற கலர் எங்க இருக்கோ அத போய் தொடனும் யார் தொடாம நிக்கிறாங்களோ அவங்க அவுட்..... இதுல இப்ப நினைச்சாலும் சிறிக்கிற சம்பவம் (சம்பவத்தில் வரும் பெயர்கள் மாற்றபட்டுள்ளது) இப்டிதான் ஒரு நாள் ராத்திரி நாங்க எல்லாம் வெளாடிட்டு இருக்கோம் டிபி டிபி வாட் கலர்...... நாங்க கேக்க நம்ம ஆளு மீரான் இருக்கானே வழக்கமா இதுல வீட்டு பெயிண்ட் கலர் கிரில் கலர் அங்க நிக்கிற கார்,பைக் கலர் இப்டிதான் சொல்வாங்க ஆனா அவன் யாருமே எதிர் பாக்காத ஆமினா கண்ணா தாவனி கலர் நு சொல்ல நாங்க எல்லாம் கண்னாவ பாத்து ஓட கண்ணா என்னென்னே புரியாம அவங்க எழுந்து ஓட ஹா ஹா ஹா ...... ஒரு வழியா கண்னா தாவனிய புடிச்சி அவுட் ஆவாம தப்பிச்ச திருப்தி மறக்கவே முடியாது  - Althaf Ali M

 

‎1957 ஆக இருக்கவேண்டும். எங்கள் வீடு 7வது தெருவில். ரஞ்சன் நடித்த நீலமலை திருடன் என்ற படம் தடிசாயபுக்கு சொந்தமான ராஜா டாக்கீஸில். (தற்போதைய செலெக்ட் சப்பல்) வாப்பா, பெரியப்பாமார்கள் கொழும்பில். குடும்பத்தில் என் சமகால சகோதரர்கள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டார்கள் என்னை தவிற. முஹம்மது முஹைதீன் பெரியப்பா வீட்டு காக்கா பொட்டி சாஹிபு. இவர் குடும்பத்தின் தாதா. குடும்பமென்ன; ஊருக்கே தாதா. தாதாவிடம் நான் புறக்கனிக்கப்பட்டதை முறையிட்டேன். கவலப்படாதடா; இன்னிக்கி இரண்டாவது ஆட்டத்திற்கு கூட்டி போகிறேன் என வாக்களித்தான். ஓலையிலான கீத்து கொட்டகை. கொட்டகைக்கு பின்னால் கூட்டி சென்றான். ஓலை சுவற்றில் ஒரு ஆள் போகும் அளவுக்கு ஒரு பொந்தை போட்டான். பின்னர் ஒரு பாலர் பாடம். பொந்தின் வழியாக உள்ளே போ. மூத்திர கொட்டடியில் மூத்திரம் இருப்பதுபோல ஒரு பாவலா காட்டு. அப்புறம் உள்ளே வா. பாலர் பாடம் முடிந்த பின்னர் முதலில் நான் போகிறேன். என்னை பின் தொடர்ந்து வா என சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான். இது போன்ற சாகசங்கள் புரிவதில் அவன் வித்தகன். எனக்கு அதுதான் கண்ணி முயற்ச்சி. மாட்டிக்கொண்டேன். மேனேஜர் ரூமில் ஹவுஸ் அரஸ்ட். என் கைங்கறியம் என்னுடைய காக்காவும் ஹவுஸ் அரஸ்ட். மீட்பு பணிக்கு ஊரில் பெரிய தலைகள் யாரும் இல்லை. மனியாரப்பிள்ளை அலியப்பா மாமா (என் காக்கவோட தாய் மாமா) வந்து எங்களை மீட்டு சென்றார். - Masoor Salahudeen

 

ஃபேஸ்புக்கில் இருந்து தொகுத்த‌து...- பீர் முக‌ம்ம‌து




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..