viagra prodej brno viagra prodej cena online Si Sulthan: ஒவ்வொன்னா போடுறதுக்கு பதிலா மொத்தமா போட்டுடுறேன்
Mohammed Meera Sahib:சுல்தான் காக்கா! இப்படி எல்லாத்தையும் ஒன்னாப்போட்டா எப்டி? நம்ம மக்கள் எல்லாம் சதாவதானிகளா? ஒரே நேரத்துல பல விஷயங்களை சொல்றதுக்கு..! எப்படியோ மொத்தமா போட்டுட்டீங்க!..ஒவ்வொன்னாவாவது சொல்லித்தானே ஆவனும்..!சுட்ட பனங்கிழங்கு, அவிச்சபனங்கிழங்கு, நெல்லிக்காய்..!அடுத்து என்னது சேறுகாயாட்டு ஒரு வகை பழம்..! கொய்யாப்பழம்..!மாழ்பழம்! சீதாப்பழம்..மீண்டும் கொய்யாப்பழம்...!
Mohammed Meera Sahib: நெல்லிக்காய் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஊர் வந்திருந்தபோது, நம்ம ஊர் பிரபல பண்ணை டிவிஎஸ் க்குச் சென்றிருந்தேன். நெல்லிக்காய் மரம் ஏராளமாக நட்டிருந்தார்கள். ஒரு நெல்லிக்காய் கிட்டத்தட்ட 150 கிராம் முதல் 180 கிராம் வரை எடையில் உள்ளது. நம்ம ஊரில் ஹைபிரிட் முறையில் விளைவிக்கப்படும் இந்த நெல்லிக்காய் அமெரிக்காவிற்க ஏற்றுமதி ஆகிறது என்று அங்கிருந்த விவசாய அதிகாரி சகோ. அஹமது (மதுரை) சொன்னார். 3 கிலோ வாங்கினேன். மொத்தமே 20 நெல்லிக்காய்கள்தான். அதில் நான்கைந்து நான் சவூதி ஆரேபியாவிற்கு எடுத்து வந்தேன். இங்குள்ளவர்களிடம் காடடினால் நம்புகின்றார்கள் இல்லை. நம்ம ஊர் மண்ணுல இத்தனை வளமான நெல்லிக்காய் என்பது நம் அனைவருக்கும் பெருமையான செய்திதான். இன்னும் இருக்கிறதோ தெரியவில்லை.
Si Sulthan: என் பக்கத்து ஸ்கூல் பிள்ளைகள் ஒரு நெல்லிக்காய் ஒரு ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுகின்றன
Alimalick Peermohamed: கடந்த மூன்று வருடமாக ரூபாய் படினஞ்சுக்கு ஒரு கிலோ விற்ற நெல்லிக்காய் இந்த வருடம் கிலோ ஆறு ரூபாய் தான்விற்கிறது. (எப்படி விவசாயம் செய்ய ? )
Alimalick Peermohamed: for both of meerasahib and sulthan: no rain, no current,con't get proper price, rapid increase of wages and cooli,more production,no buyer, lot of industrialist enter in to agriculture, we are very much suffer dears.
Alimalick Peermohamed: in our cultivation 6 to 8 AMLA = 1 KG. more then 800 trees, per pick , per tree 400 to 500 amlas, every 40 days harvest, only 3 months session. labour ; daily wages= 250/= women and 450/= man. monthly salery; 6000/=
Mohammed Meera Sahib: அஸ்ஸலாமு அலைக்கும் பீர்காக்கா! இந்தியாவில் மட்டுமில்லை. உலகில் உள்ள ஏராளமான நாடுகளில் உள்ள விவசாயிகளும் இதற்காகத்தான் உற்பத்தி செய்யத் தயங்குகிறார்கள். இதற்கு காரணம் தாங்கள் மேலே குறிப்ட்டதுதான். நீங்கள் எட்டு ரூபாய்க்கு விற்கும் நெல்லிக்காய் சவுதி அரேபியாவில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். உற்பத்தியாளர் விற்கும் விலையைவிட விற்பனையாளர் விற்கும் விலை 14 மடங்கு அதிகம். தற்போது விவசாயத்தில் இலாபம் பெறுவது இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும்தான். விவசாயிகள் இலாபம் பெற முடியாமல் போவதற்குக் காரணம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு பேரம் பேசி விற்க முடியாத சூழ்நிலை. எத்தனை நாளைக்குத்தான் வாழைக்காயையும் நெல்லிக்காயையும் பாதுகாப்பில் வைத்திருப்பீர்கள். வைத்திருந்தால் அழுகிவிடும். எனவே விளைந்தவுடன் விற்க வேண்டிய நிலை. இந்த இக்கட்டான நிலையை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் இடைத்தரகர்களும் மொத்த வியாபாரிகளும். இதெற்கெல்லாம் சரியான தீர்லுவு இஸ்லாம்தான். 'அநியானமான முறையில் அடுத்தவரின் பொருளை உண்ணாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. விலையை உயாத்திக் கேட்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனை அனைத்து மக்களும் கடைபிடித்தால் பிரச்னைகள் தீரும்.
Mohamed Mathar: மச்சான் இதை எல்லாம் பார்த்ததும் முப்பது நாற்பது வருடங்கள் முன்பு உள்ள நாபாகங்கள் வருகின்றன . இளமை ஊஞ்சல் ஆடுகிறது வாழ்த்துக்கள்
Mohammed Meera Sahib: மதார் மணிவிலாஸ் கடையில மசாலா போட்ட பொறிகடலை வாங்கித் திண்ணது - கண்பொத்தி அப்பா கிட்ட சவ்வு மிட்டாய் வாங்கித் திண்ணது - அவ்வப்போது வரும் நாவற்பழ வியாபாரிகளிடம் கொம்பம்பழம் வாங்கித் திண்ணது - அந்த பொட்டப்பள்ளிக்கூடத்தை சுற்றி நடந்தவைகள் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றது.
|