நமதூர்க்கு முதன் முதலில் இந்த பள்ளிக்கூடம் எப்படி வந்தது ? , இதற்காக அந்த கால கட்டத்தில் முயற்சி மேற்கொண்டவர்கள் யார் ? யார் ? இந்த பள்ளி வந்த வரலாறு தெரிந்தால் இளைய சமூக்கத்திற்கு கொஞ்சம் பகிருங்கள் .
Masoor Salahudeen கொடிக்காணி அப்பாத்தான் இந்தப்பள்ளியை உருவாக்கினார். தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை மடத்திற்க்கு சமர்பித்துவிட்டு அதர்க்கு பகரமாய் முகைதீன்புரத்தில் 15 ஏக்கர் நிலத்தை மடத்தில் இருந்து வாங்குகிறார். அதில், ஆண்கள் பாடசாலை, பொட்டப்பள்ளிக்கூடம், மருத்துவமனை இவைகளை மக்களுக்கு அற்பணித்த மாமனிதர் அந்த கொடிகாணி அப்பா
Min Bazeeஆண்கள் பாடசாலை, பெண்கள் பள்ளிக்கூடம், மருத்துவமனை இவைகளுக்கு தன் பெயர் வைபதையும் விரும்பாதவர்
Masoor Salahudeenபைத்துஸ்ஸலாம் பள்ளிக்குக்கூட அவர் பெயரை வைக்க விரும்பாதவர்.
Mohammed Meera Sahib Sahibநம்து ஊர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் களக்காடு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பாடசாலை ( தற்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளது) நமது ஊரில் முன்னாள் இருந்த ஆரம்ப சுகாதரா நிலையம் ஆகியவை யாவும் அவர்கள் நன்கொடையாக வழங்கிய இடத்தில்தான் கட்டப்பட்டது என்று கேள்விபட்டிருக்கிறேன். தகவல் சரியானதாக இருப்பின் அதனை உறுதி செய்யுங்கள் சலாகுதீன் காக்கா.
Masoor Salahudeenகளக்காடு பஞ்சாயத் பள்ளியைத்தான் அந்த காலத்தில் பொட்டப்பள்ளிக்கூடம்னு சொல்லுவாங்க. விடுபட்டது பெண்கள் உயர்நிலைப்பள்ளி.
Mohamed Hasanஅல்ஹம்துலில்லாஹ் , அறிந்த பல அறிய தகவல்களை கூறியதற்கு நன்றி . பெரும்பாலும் நம் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் நமது முன்னோர்கள் அரும்பாடு பட்டு கல்விக்கான பல சேவைகள் செய்து உள்ளார்கள் ஆனால் கால போக்கில் அதன் தடம் தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது . கிழக்கரையில் உள்ள ஹமீதியா பள்ளி இப்படி ஆரம்பிக்க பட்டு பின் அரசாங்கத்தால் எடுக்க பட்டுவிட்டது பின் மாபெரும் முயற்சிக்கு பின் முஸ்லிம் management க்கு கீழ் கொண்டு வர பட்டது .
நமதூரிலும் elementry ஸ்கூலில் ஆரம்பத்தில் இஸ்லாமிய முறைப்படி வெள்ளி சனி என்று விடுமுறை விட்டு கொண்டு இருந்தார்கள் . பின் 90களில் அது சனி ஞாயிறு ஆக மாற்ற பட்டது .
நம்மால் மீண்டும் முஸ்லிம் management பள்ளியாக மாற்ற முடியுமா என்று எனக்கு தெரியவில்லை .ஆனால் குறைந்த பட்சம் இது நம்மவர்களால் உருவாக்கபட்ட பள்ளி என்று ஒரு நினைவு சின்னமோ அல்லது நுழைவாயில் வளைவோ அவர்களின் பெயர் பொரிக்க பட வேண்டும் நாளைய சமுதாயம் அறிவதற்கு .
ஆனால் வாழ்ந்து சென்ற அவர்கள் எந்த பெருமையும் இன்றி எந்த காலகட்டத்திலும் தன் பெயரை நிலை நிறுத்தாமல் சென்று விட்டார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்
Masoor Salahudeenபொட்டை பள்ளிக்கூடம் ஒரு படைப்பு நயத்தோடும் கட்டிடக்கலையோடும் கட்டப்பட்ட கட்டிடம். அந்த கட்டிடம் ஏன், எதற்க்கு இடிக்கப்பட்டது? புரியாத புதிர்.