நமது ஊர் ஏர்வாடி
....................................... தமீம் உல் அன்சாரி
(பைத்துஸ்ஸலாம் பேஸ்புக் குழுமத்தின் கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)
என்ன பாய் ஊருக்கு கிளம்பியாச்சா .....
ஆமாங்க ஊர்ல சொந்தகாரங்க கல்யாணம் ,அதன் கிளம்பிட்டு இருக்கோம் .
அப்போ வர்றப்ப அல்வா கண்டிப்பா வாங்கிட்டு வரணும் !
பல அன்பு கட்டளைகளோடு, வீட்டை பூட்டி விட்டு நம்மை வெறிக்க நோக்கும் பார்வைகளை எதிர் கொண்டு சிரித்த முகத்தோடு பதில் சொல்லி ,ஒரு வழியாக திருநெல்வேலி பேருந்தில் அமர்ந்து பயணம் தொடங்கியாச்சு .....
எனக்கு சின்ன வயதாக இருக்கும் போதே வேறு ஊருக்கு வந்தாச்சு ...
ஆனால் ஊரை பற்றி அம்மா பேசாத நாளே கிடையாது....
போல மாடா,என்ன இருந்தாலும் ஊர் மாதிரி வருமா ?.....இது அம்மா ,
ஊருக்கு போனதும் ஆத்துல குளிக்கணும் ....இது வாப்பா ,
ஒரே எல்லாரையும் தேடுது மா ......இது கண்ணா ,
தெரு எல்லாம் சொந்தங்கள் ,வீட்டு பக்கத்தில் ஆறு ,நடு வீதியில் மரங்கள் , வீசும் மண் வாசம்....
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது நான் வளர்ந்த சேலத்திலும் வாழும் சென்னையிலும்..
நான் நன்றாக கவனித்து இருக்கிரேன் ,ஊருக்கு வந்தால் அம்மா மட்டும் எப்போதும் பறந்து கொண்டே இருப்பாள் .
சிரிப்பு கூட அழகாக இருக்கும் !,
கட்ல தெரு ,நடு தெரு,5-ம் தெரு ,7-ம் தெரு என்று பறந்து கொண்டே இருப்பாள் .
சேலத்தில் பார்க்க முடியாத சிரிப்பையும் பேச்சையும் இங்கு அவளிடம் நன்றாக பார்க்கலாம் .
பேசுவதற்கு சிறு வயது தோழிகள் ,நெருங்கிய சொந்தங்கள் என ,அம்மாவிற்கு லிஸ்ட் பறக்கும் .(கல்யாணத்திற்கு என்று சொல்லி வருவது ஒரு காரணமே)
ஒருவழியாக திருநெல்வேலி வந்து வள்ளி யூர் சேரும் போதே மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் களை கட்டும் .(பையில் பணம் நிறைய இருந்தாலும் அந்த மினிபஸ்சை மிஸ் பண்ண மனசு வந்ததே கிடையாது .......)
பச்சை பிள்ளையம்மா தர்கா வந்ததும் எனக்கு தன்னால் சிரிப்பு வரும், சின்ன வயசில் ஒரு முறை தனியாக அங்கு வந்து திரும்பி போக வழி தெரியாமல் விழித்த நாள் ,கட்டாயம் மறக்க முடியாது ...!
"அல்லாஹு ,ஊருக்கு வர இப்போ தான் வழி தெரிஞ்சதோ", அம்மாவிடம் முதல் கட்ட விசாரணை ,சிரிப்போடு இங்கேயே ஆரம்பமாகும் .
கீழ் வீட்ல கல்யாணம் தாத்தா அதன் வந்திருக்கோம் .....அழகான சிரிப்போடு பதில் சொல்வாள் .
எதிர் வீட்டில் யார் இருக்கிறார் என்பது கூட தெரியாத அப்பர்ட்மெண்ட் culture உள்ள சென்னை இல் வாழும் எனக்கு ,
ஊருக்கு வந்ததும் , எப்போமா ஊர்ல இருந்து வந்த என்று கேட்க்கும் கண்ணா களையும் ,சிரித்த முகத்தோடு சலாம் சொல்லி விசாரிக்கும் அப்பாக்களையும் பார்க்கும் போது தான் உண்மையான அன்பு எங்கு உள்ளது என்பது புரிகின்றது .
அவர்களிடம் பேசும் போது நம்மையும் அறியாமல் பேச்சின் சாயல் மாறும் நம் பதிலில் (ஊரின் பேச்சு தமிழிற்கு பொருத்தமாக ) .
உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் திருநெல்வேலி பேச்சு தமிழை அழகாக கண்டு பிடித்து விடலாம் ,இது தனகென்று ஒரு அழகிய ஓசையை பெற்றுள்ளது .
காலையில் பசி ஆறியாச்சா என்று மச்சி கேட்கும் போதுதான் தமிழ் ஐயா சொல்லி கொடுத்த நல்ல தமிழ் ஞாபகத்துக்கு வரும்,
நம் ஊரில் பலருக்கும் தெரியாது ,நாம் பேசுவது தொல்காப்பிய பைந்தமிழ் என்று...
பசி ஆரியாச்சா, புளி ஆனம்,கறி ஆனம் , அகப்பை , ஆனம் .....etc ,
இன்னும் பல வார்த்தைகள் ,
நான் 12 வது படிக்கும் போது என் தமிழ் ஐயா ஆச்சர்யத்துடன் சொன்ன தகவல்கள் இது .
"தொல்காபியத்தில் " பயன் படுத்திய வார்த்தைகள் இன்னும் திருநெல்வேலியில் பயன்பாட்டில் உள்ளதுன்னு பல வார்த்தைகளை குறிப்பிட்டு கூறினார் .
காலை உணவு இடியாப்பம் +கறி யாணம் - இந்த ருசி உலகின் எந்த மூலையிலும் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது ! ,
நமது ஊரில் வீடுகள் கட்டப்பட்டு இருக்கும் முறையே தனி அழகு ....
படி ,திண்ணை ( பிள்ளைகள் விளையாட ),
முன்வீடு (வெளி ஆட்களுடன் பேச ),
நடு வீடு ,கூடம் ,முற்றம் ,
பின் வீடு (பெண்களுக்காக ),
சமையல் கட்டு,தோடம் என வாழ்கைய ஒட்டி சரியாக வடிவமைக்க பட்ட வீடுகள் .
சின்ன வயதில் ஆத்துக்கு விளையாட போவதை தடுக்க,
கசத்தில் பேய் இருக்கும் என்று அம்மாவும் கண்ணாவும் பயபடுதியது ஞாபகத்துக்கு வந்தது ,
இப்போது ஆத்துக்கு போனால் சின்ன ஆச்சர்யம் ,கட்ல தெருவில் இருந்து 5-ம் தெருவிற்கு செல்லும் ஆற்று வழி,இக்கரையில் இருந்து அக்கறைக்கு பாலம் மூலம் இணைக்கப்பட்டு அழகாக இருந்தது ,
இனி ஆற்றில் பேய் இருக்கும் என்று பயபடுத்தும் கன்னாவிற்கு வேலை குறைந்தது என்று நினைத்து கொண்டேன்.
தெருவில் வந்து பார்த்தேன் கோலி,பம்பரம் ஆடும் சிறுவர்களை காணவில்லை
எல்லோரும் கிரிக்கெட் இற்கு மாறி இருந்தாரகள் ,
தொலைகாட்சியின் தாக்கத்தால் பேசும் தமிழில் மாற்றம் தெரிந்தது சிறுவர்களிடம் .
மாடியில் இருக்கும் நூல் ராட்டையும் ,அவள் வாப்பா (என் அப்பா ) அவளுக்கு வாங்கி கொடுத்த அந்த காலத்து குண்டு பர்மா பென்சில் ஐயும் அவள் இன்னும் பத்திரபடுத்தி வைத்திருப்பது எதற்கோ ?!
ஒரு வழியாக கல்யாணம் முடிய வலிமா வரை நம்பி ஆறு ,
பாண தீர்த்த அருவி என்று பார்த்து விட்டு ...
ஊரில் எல்லோருக்கும் கிளம்ப சலாம் சொல்லி விட்டு ,
சேலத்து நண்பர்களுக்கும் சென்னை நண்பர்களுக்கும் சாந்தி ஸ்வீட்சில் திருநெல்வேலி அல்வாவும், மஸ்கோதும் வாங்கி ஊருக்கு பஸ் பிடிச்சு திரும்பி வர்றப்ப அம்மா சொல்ற ஒரே டயலாக் .....
“அந்த மானம் கெட்ட ஊற (சென்னை ,சேலம் ) தூற தூக்கி போட்டுட்டு 5 வர்சதுல நம்ம ஊருக்கே வந்துடனும் வாப்போ..!”
- தமீம் உல் அன்சாரி அன்சாரி
ansardns@gmail.com
8438936681
No:5,katla theru,ervadi |