Posted By:mbsheik143 On 1/18/2013 |
|
இதை படித்தவுடன் சிலருக்கு கோபம் வரலாம்..ஆச்சரியம் வரலாம்..
இரண்டுக்கும் நானே பொறுப்பு!
நபிகள் நாயகம் ஒருமுறை"நான் சொர்கத்தில் அதிகமாய் இருப்பவர்களாய் ஏழைகளை பார்த்தேன்"என கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன..
இது இஸ்லாமியர்கள் ஆகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று...
அதென்ன?ஏழைகளிடம்மட்டும் அப்படி என்ன ஸ்பெஸல்?
சத்தியமாக இருக்கிறது...எனக்குத்தெரிந்த ஒரு விசயத்தால் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..
தர்மம் செய்தல் என்ற விசயத்திற்கு வருவோம்...
ஒரு ஏழை மாதம் 1000 சம்பாதிக்கிறார் என கொள்வோம்..
அவர் அதில் 2 சதவீதம் தர்மம் செய்ய நினைக்கிறார்..அவர் 200 ருபாய் தர்மம் செய்தால் தன் கடமையை நிறைவெற்றி விட்டார்... அதற்கு மேல் தர்மம் செய்தால் அவர் மேலும் நன்மையை சம்பாதித்துக்கொண்டே போகிறார்...
ஒரு பணக்காரர் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறார்..அவர் 2 சதவீதம் தர்மம் செய்ய வேண்டுமானால் ஒரு லட்சத்திற்கு இரண்டு சதவீதம் 2000 கொடுத்தாகவேண்டும்.
அவர் கணக்கு போட்டு சரியாக கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை...
இப்போது யதார்த்த நிலைக்கு வருவோம்...
ஒருவர் பிச்சை கேட்க்கும்போது மேலே கூறிய ஏழை 200 கொடுக்கிறார்.
அவர் தன் கடமையை நிறைவேற்றி நன்மையை சம்பாதித்து விட்டார்..
அதே நபர் பணக்காரரிடம் பிச்சை கேட்க்கும்போது அவர் இதை பார்த்துவிட்டு கூடுதலாம் 300 சேர்த்து 500 கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம்!
இப்போது சொல்லுங்கள்..அதிகம் நனமையை சம்பாதித்தது,தன் கடமையை சரிவர நிறைவேற்றியது யார்?
ஏழையா?பணக்காரரா?
ஏழைக்கு 200 ருபா ய் கொடுப்பதற்கு கஸ்டம் என்றாலும் அவர் மறுமை வாழ்விற்க்காக அதை செய்கிறார் ..அதர்க்கு சாத்தியமும் அதிகம்...
இதே பணக்காரர் அதே நன்மை அடைய வேண்டுமானால் 2000 கொடுத்தாக வேண்டும்...
அவர் அதே 200 ஐ கொடுத்தாலோ அல்லது ஏழையை விட அதிகம் தர்மம் செய்வதாய் நினைத்துக்கொண்டு 500 ஐ கொடுத்தாலும் ஏழை பெறுகிற நன்மையை இவர் பெறவில்லை என்பது நமக்கு தெளிவாகும்..
இது ஒரு விசயம்...
பணம் அதிகம் இருக்கும்போது...இவ்வுலக வாழ்க்கைக்காக அதை செலவு செய்யவும்,தவறுகள் செய்யவும் வாய்ப்புகள் அதிகம்..
ஆனால் ஏழைக்கு அப்படி இல்ல.. நோன்பு வைத்து சாதாரண ஒரு மனிதன் அடையும் நன்மையை சோற்றுக்கு வழியில்லாத ஒரு ஏழை ஒரு சிறிய நன்மை செய்தால் அடைந்துவிடலாம்...
எனவே நன்மைகள் அதிகம் சம்பாதிக்க இதுபோல பல விடயங்களில் பணக்காரரைவிட ஏழைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே என் வாதம்..
இது என் ஊகமே தவிர வேறொன்றும் இல்லை...

|