தமிழில் டைப் செய்ய - Tamil Typing
நிறைய சகோதரர்களுக்கு தமிழில் எழுத/டைப் செய்ய எந்த மென்பொருள் உபயோகிப்பது என்பது குழப்பமாக இருக்கலாம்!. கீழ்காணும் மென்பொருள் உபயோகித்துப் பார்த்து உங்களுக்கு வேண்டியதை நிறுவிக்கொள்ளலாம்!
1) NHM Writer - என்.எச்.எம் எழுதி (நல்ல தெரிவு)
2) அழகி தமிழ் மென்பொருள் (நல்ல தெரிவு)
3) முரசு அஞ்சல்
4) Google Transliteration
5) எ-கலப்பை
6) குறள் தமிழ் எழுதி
1. என்.எச்.எம் எழுதி:
விண்டோஸ் இயங்குதளத்தில் XP, Vista, Windows 7 செயல்படக்கூடியது. டவுன்லோட் செய்து Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். நகல் (Copy/Paste) செய்து ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. நிறுவிய பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். இது பல ( applications : MS office, notepad, IE explorer and so on) பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.
டைப் செய்ய ஒலிப்பு முறையை (Alt+2) பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்
உயிரெழுத்துக்கள்: அ = a, ஆ = aa அல்லது A, இ = i , ஈ = ii அல்லது I உ = u , ஊ = uu அல்லது U
எ = e , ஏ = ee அல்லது E , ஐ = ai, ஒ = o , ஓ = oo அல்லது O , ஔ = au
மெய் எழுத்துக்கள்: க் = k அல்லது g, ங் = ng, ச் = s அல்லது c , ஞ் = nj அல்லது X , ட் = d அல்லது t , ண் = N, த் = th, ந் = w , ப் = p அல்லது b, ம் = m , ய் = y , ர் = r , ல் = l , வ் = v, ழ் = z , ள் = L , ற் = R, ன் = n
ஆய்த எழுத்து : ஃ = q
கிரகந்த எழுத்துக்கள்: ஜ் = j, ஷ் = Z அல்லது sh, ஸ் = S, ஹ் = ன் , க்ஷ் = ksh, க்ஷ் = ksh, ஸ்ரீ = sr
உயிர்மெய் எழுத்துக்கள்: க = க்+அ = ka , கா = (க்+ஆ) =kA அல்லது kaa , கி = (க்+இ) = ki , கீ = (க்+ஈ) = kii அல்லது kI , கு = (க்+உ) = ku கூ = (க்+ஊ) = kU அல்லது kuu, கெ = க்+எ = ke , கே = (க்+ஏ) = kE அல்லது kee, கை = க்+ ஐ = kai, கொ = (க்+ஒ) = ko, கோ = க்+ஓ = koo அல்லது kO, கௌ = (க்+ஔ) = kau
2. அழகி மென்பொருள்:
அழகி தனக்கென்றே சில சிறப்புகளைக் கொண்டுள்ளது!.
SAT Transliteration: 'aditya' என்று டைப் செய்தாலே 'ஆதித்யா' கிடைத்து விடும்!; 'aadhithyaa'என்று டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை! 'vanakkam' என்று டைப் செய்தே 'வணக்கம்'பெற்று விடலாம்!; 'shift+n' உபயோகித்து 'vaNakkam' என்று டைப் செய்யத் தேவையில்லை! 'doctor' என்று டைப் செய்தே 'டாக்டர்' (அல்லது 'மருத்துவர்'! - பயனரின் விருப்பத்திற்கேற்ப) பெறலாம். SAT குறித்து முழு விவரங்கள் அறிய, http://azhagi.com/sath.html சென்று பார்க்கவும்.
Dual Screen Transliteration: உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டு,அழகியின் திரையை இரண்டாய்ப் பிரித்து, மேல் திரையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய,அதற்கேற்ற தமிழ் உரை உடனுக்குடன் கீழ் திரையில் காணும்படி செய்யலாம்.
Reverse Transliteration: 'மாற்று ஒலிபெயர்ப்பு' - ஏற்கெனவே தமிழில் தட்டச்சு செய்து வைத்திருக்கும் உரைகளுக்கு மீண்டும் அதன் இணையான ஒலியியல் ஆங்கிலம் பெறுவது. உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) இங்கே சொடுக்கவும். மேலும் விளக்கங்கள் படிக்க, இங்கே சொடுக்கவும்.
Auto-Transliteration: 'தானியங்கி ஒலிபெயர்ப்பு' - நீங்கள் ஏற்கெனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம்: வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில்'ஒலிபெயர்க்கலாம்'. மீண்டும் தட்டச்சிட வேண்டியதில்லை. உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) இங்கே (http://www.azhagi.com/autot.html) சொடுக்கவும். மேலும் விளக்கங்கள் படிக்க, இங்கே (http://azhagi.com/help/azpowerautotransliteration.html)
.
Pop-up Transliteration: திறந்து வைக்கப்பட்டிருக்கும் எந்த செயலியின் (any open application) கோப்பிலுள்ள ஆங்கில உரையின் இணையான தமிழ் ஒலியியல் உரையையும், ஒரு பட்டனைத் தட்டியே ஒரு தனி பாப்-அப் விண்டோவில் பார்க்கலாம்.
Auto-Insertion: அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
Word Count: தமிழில் 'சொல் எண்ணிக்கை'.
3. Google Transliteration : புதிதாய் எழுதுபவர்களுக்கு மிகவும் எளிதானது. இணையத்தில் அப்படியே தமிங்கிலீஷில் டைப் செய்யலாம் அல்லது, டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம்! (ன/ண, ல/ள/ழ வேறுபாடுகள் கண்டறிவது மிகவும் கடினமானதால் கூடுமானவரை தவிர்க்கவும்!) டைப்/டவுன்லோட் செய்ய டைப்/டவுன்லோட் செய்ய http://www.google.com/transliterate/
|