Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய - 3 ஆம் பரிசு பெற்ற கட்டுரை
Posted By:jasmin On 1/25/2014 10:41:17 AM

naltrexone and naloxone difference

naltrexone and naloxone difference online
அஸ்ஸலாமு அலைக்கும்
 
நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கட்டுரையைத் தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். இந்தக் கட்டுரைப் போட்டிக்கு 20 கட்டுரைகள் வந்திருந்தன.
 
அன்புடன்
 
EMAN Charitable Trust
 
 

الرَّحِيمِ الرَّحْمنِ اللهِ بِسْمِ

உறவுகள்மேம்படசமுதாயம்சீரடைய

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

(அல் குர் ஆன் 4:36 )

முன்னுரை :

                        அனைத்து புகழும் அல்லாஹ்விற்க்கே உறித்தாகட்டும் அன்றாடம் Machine களோடும் Computer களோடும் உறவாடும் இன்றைய இயந்திர மனிதர்களுக்கு அவசியமான தலைப்பு நம் கட்டுரையின் தலைப்பு . நம்மை படைத்து பக்குவபடுத்திய அல்லாஹ் தன்னை வணங்குமாறு கூறும் மேற்கூறிய வசனத்தில் அதற்கடுத்ததாய் உறவுகளைப் பேனுமாறு கூறுகிறான் இதிலிறுந்தே உறவுகளின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர முடிகிறது. பிறந்த குழந்தை தன் ஆரம்ப பாடத்தை உறவுகளிலிருந்து கற்க ஆரம்பிக்கிறது. அன்பை கற்றுக் கொடுக்கும் தாய், அறிவை புகட்டும் தந்தை , விட்டு கொடுத்து வாழும் உடன் பிறப்புகள் , என தன் குடும்ப உறவுகளிலிருந்தே இந்த உலகத்தை புரிய ஆரம்பிக்கிறது . அல்ஹம்துலில்லாஹ் ! ஆனால் மாறிவரும் இன்றைய நவீன காலம் உறவுகளிடையே ஏற்படுத்திவிட்ட விரிசலையும் அதற்கு இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்ட தீர்வையும் இந்த கட்டுரையில் காண்போம் . இன்ஷா அல்லாஹ் !

 

பொருளுரை :

                        இன்றைய உறவுகளின் விரிசல்களுக்கு முக்கிய காரணங்கள்

1,         நவீன விஞ்ஞானத்தினால் மாறிவரும் உலகம்.

2,         பொருளாதாரத்தை தேடும் மனிதனின் பயணம்.

3,         உறவுகளிடையே புரிதல் இன்மை (Misunderstanding).

 

நவீனவிஞ்ஞானதினால்மாறிவரும்உலகம் :-

                        நவீன கருவிகளின் வசதிகளினால் (Mail , Message) தூரங்கள் குறைந்துவிட்டதோ என்னவோ? உறவுகளிடையே இடைவெளி அதிகமாகிவிட்டது உண்மை . அன்று நம் தாய்மார்கள் வானில் நிலா காட்டி சோறு ஊட்டினார்கள், ஆனால் இன்றைய குழந்தைகள் TV யிலும் Computer லும் Rhymes பார்த்து சாப்பிடுகின்றனர் , தாய் சொல்லி கதை கேட்ட குழந்தை இன்று தானே Laptop லும் Mobile லும் கதை கேட்க., தாய்க்கும் பிள்ளைக்குமான முதல் இடைவெளி இங்கிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. இதுவே இயற்க்கையான நிலவிலிருந்து இயந்திரமான Computer க்கும் இடையே பரிணாம வளர்ச்சியின் ஆதிக்க ஆரம்பம் . அன்று அக்கம் பக்கம் உறவுகளோடு தெருவில் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் .இன்று !

 வீட்டிற்குள் T.V யும் Laptop மாக ! விளைவு அறியப்படாத விஷயங்களும் புரியாத வயதில் தெரிந்து கொள்ள தூண்டபடுகின்றனர். அதனால் ஏற்படும் சமுதாய சீரழிவுகளை சொல்லி தெரியவேண்டியதில்லை . அன்றாடம் தொலைகாட்சியிலும் , செய்தித்தாளிலும் வரும் செய்திகள் இவற்றையே பிரதிபலிக்கின்றன , நவூதுபில்லாஹ் ! !

                        அடுத்ததாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் தந்தைக்கு அலுவலக வேலைகளையும் வீட்டிலேயே பார்க்க வசதியாக வந்துவிட்டது இன்று Smart Phone களின் ஆதிக்கம் . மனைவியோடும் , குழந்தைகளோடும் செலவிடவேண்டிய நேரத்திலும் I Phone லும் Laptop லும் செலவிடுகின்றனர். உறவுகளோடு உறவாட முடியாத மனிதர்கள் முகம் தெரியாத நபர்களோடு FACE BOOK ல் உரையாடுகிறார்கள் .  ஆனால் உறவினர்களிடமோ நேரமின்மையை காரணம் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;

                        ” ஒருவர் தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கபடுவதையும் வாழ்நாள் நீடிக்கபடுவதையும் விரும்புகிறவர் தம் உறவை பேணி வாழட்டும்”

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் – 4998

 

            ஆனால் உறவுகளோடு இனைந்து வாழாத மனிதர்கள் இன்று கருவிகளோடும் கணினிகளோடும் இனைந்து காலத்தையும் நம் உடல்நலனையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

 

 

 

பொருளாதரத்தைதேடிமனிதனின்பயணம் :-

 

            இன்றைய சூழலில் மனிதனின் வாழ்வில் பொருளாதாரம் முக்கிய அங்கமாகிவிட்டது. தேவைகள் நிறைவேறாத போது மனிதன் பொருளாதாரத்தை தேடி அலைய நேரிடுகிறது அதன் விளைவால் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பராமரிக்க படவேண்டிய வயதில் பெற்றோர், சகோதரரின் கவனிப்பற்ற உடன்பிறப்புகள் , தனிமைத்துயரில் மனைவி , தந்தையின் கண்டிப்பில்லாமல் குழந்தைகள்., என குடும்பமே சீர்குலைக்கப்படுகிறது இதனால் ஏற்படும் விளைவுகள் கொஞ்சமில்லை..!

 

            பெற்றோருக்கும் , மனைவிக்கும் இடையேயான கருத்துவேறுபாடு . அவனோ பிரச்சனைகளின் தீவிரத்தை அறியமுடியாத தொலைவில் ! இதனால் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பூதாகரமாகி பல இடங்களில் கணவன் – மனைவி இடையே மணமுறிவு வரை கொண்டு சென்று விடுகிறது. சில இடங்களில் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உறவுச்சிக்கல் ஏற்பட்டு அதனால் முதியோர் இல்லங்கள் இன்று பெருகி வருவதை காணமுடிகிறது .

            மனிதனின் முதல் உறவு கருவிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆம் ! தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என நபி (ஸல்) கூறினார்கள் . அப்படிபட்ட தாயை இத்தகைய பிரச்சனைகளால் தள்ளி வைக்க என்னுகிறார்கள் . பொருளாதார தேடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு உறவுகளின் உணர்வுகளை நிறைவேற்ற முடியாததால் தவறான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுத்து அதனால் சீரழிந்து கொண்டு இருக்கும் குடும்பங்களை இன்று நாம் கன் முன்னே கான்கிறோம் . தந்தை யின் கண்டிப்பில்லாமல் வளரும் குழந்தைகள் அதனையே தனக்கு சாதகமாக்கி இளம் வயதிலேயே சீர் கெட்டு போவதை காண முடிகிறது.

 

உறவுகளிடையேபுரிதல்இன்மை (Misunderstanding)

 

                         நபி (ஸல்) கூறினார்கள்  ” உற்றார் உறவினருக்கு செய்யும் சதக்காவின் நன்மையானது இரட்டிப்பாக கிடைக்கிறது ”

 

பொருளாதாரத்தை தேடி முன்னிலைக்கு வரும் மனிதன் தராதரம் (Status) பார்க்க ஆரம்பித்து விடுகிறான் . தன் நெருங்கிய உறவினரே தேவையுடையவராய் இருக்க எங்கேயோ இயங்கி கொண்டிருக்கும் இயக்கங்களுக்கு , அமைப்புகளுக்கு தனது பொருளாதாரத்தை வழங்கி தனக்கு பெருமையை யும் புகழையும் தேட விரும்புகிறான் . தன்னுடைய நெருக்கமான உறவுகள் கூட தூரமாக்கபடுகின்றன . முன்னேறிய மனிதன் தன்நிலைக்கு ஒத்தவர்களுடன் மட்டுமே உறவு பாராட்டுவது , சம்மந்தம் செய்து கொள்வது போன்ற செயல்களினால் தம் தாய் தந்தை யரின் உடன்பிறப்புகள் கூட அன்னியமாக்கபடுகின்றனர் . தன் குடும்பத்தில் தன்னை விட யார் உயர்ந்துவிட்டாலோ அங்கு பொறாமை குடியேறிவிடுகிறது . இதனால் உறவிகளில் ஏற்படும் விரிசலானது அடுத்த தலைமுறை களையும் பாதிக்கிறது . இப்படியே போனால் உறவு என்ற வட்டமானது   தாய்   à  தந்தை  à  குழந்தை  என்ற நிலைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சநிலை ஏற்படுகிறது . இன்று வீட்டிற்க்கு ஒரு குழந்தை , இரு குழந்தை என்ற நிலை ஏற்பட்டு வருவதனால் எதிர்காலத்தில் அடுத்த தலைமுறைக்கு “சின்னாப்பா” , “பெரியாப்பா” என்ற உறவுகளே தெரியாமல் போய் விடுமோ என்று அஞ்சத்தோன்றுகிறது . அன்று உறவினர் வீட்டில் திருமணம் என்றால் 4 நாட்களுக்கு முன்னரே சங்கமித்து வேலைகளையும் பங்கிட்டுகொண்டன உறவுகள் , இன்றோ மண்டபத்தில் கல்யாணம் - வலிமா விருந்து அதோடு விடை பெறுகின்றன உறவுகள் .,

 

நபி (ஸல் ) கூறினார்கள்.

 

 "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது "உறவு' எழுந்து, (இறை அரிய ணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) "(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலி ருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்'' என்று கூறி (மன்றாடி)யது. அல்லாஹ், "ஆம்; உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?'' என்று கேட்டான். அதற்கு உறவு, "ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ், "அது உனக்காக நடக்கும்'' என்று சொன்னான் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்             : முஸ்லிம் 4994

 

 உறவிற்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் மேன்மையை பாருங்கள் . பதிலுக்கு பதில் உறவாடுபவர் உறவை பேணுபவரல்லர் ., வழிய சென்று உறவாடுபவரே உறவை பேணுபவராவார்

 

முடிவுரை:-

                        உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய நாம் என்ன செய்ய வேண்டும்.

 

1, தத்தமதுபொருப்பைஉனர்ந்துசெயல்படல்

 

நபி (ஸல் ) கூறினார்கள்.

 

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப் பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளி யாவான். அவன், தன் பொறுப்புக்குட் பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான்.

நூல்             : புஹாரி 2558

 

 

ஆகவே ஒவ்வொருவரும்  மறுமையில் தம் பொறுப்பு குறித்து விசாரிக்கபடுவோம் என்பதை உணர்ந்தாலே உறவுகள் மேம்படும் சமுதாயம் சீரடையும் இன்ஷா அல்லாஹ்.

 

2.நேரம்

                        நேரமும் நம்மிடம் ஒப்படைக்கபட்ட அமானிதமே.! உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில் அதிகமான பொருப்புகளை ஏற்று குறைவில்லாமல் நிறைவேற்றிய நமது முன்மாதிரியான இறைதூதர் (ஸல்) அவர்கள் ,  ஒரு சிறந்த வணிகராக, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுக்கு சிறந்த கணவராக , அல்லாஹ் வின் தூதராக ., போர் தளபதியாக ., சமுதாய தலைவராக ., ஆட்சியாளராக.. என்று இத்தனை பொருப்புகளையும் நிறைவேற்ற தங்களுடைய நேரத்தை எவ்வாறு சிறப்பாக பங்கிட்டார்களோ ., மேற்கூறியவற்றில் 10% பொறுப்பு கூட இல்லாத நாம் அதிகமாக கூறும் காரணம் “ நேரமின்மையே “ நம்மை நாமே பரிசீலித்துகொள்வோம் … இன்ஷா அல்லாஹ்…!!

 

3. மனம்விட்டுபேசாமை

 

                        உறவுகளுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமையே இன்று பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாய் இருக்கின்றன . அவைகள் தீர்க்கபடாமல் மனதிலே வைக்க படுவதனால் Depression (மன அழுத்தம்) BP என்று உடல்நிலை மட்டுமல்லாது மனநிலை யும் பாதிக்கபடுகிறது . பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவதனால் அதற்க்கு தீர்வு கிடைப்பதோடு உறவுகளும் பலப்படும் வாழ்க்கை வழமாகும்,

 

4, சுற்றுலாசெல்லுதல் .

 

                        உறவுகள் அனைவரோடும் இன்பச்சுற்றுலா ., இதனால் உறவுகளிடையே மனக் கசப்புகள் நீங்கி மகிழ்வோடு வாழ வழிவகுக்கும் . உறவுகள் மேம்பட தெளிவான பார்வைகள் வேண்டும் , தெளிவான பார்வைகள் அழகிய புரிதலை கொடுக்கும் , அழகிய புரிதல் மனிதநேயம் கொண்ட சமுதாயத்தை சர்வ நிச்சயமாய் ஈன்றெடுக்கும் இன்ஷா அல்லாஹ் .

அல்லாஹ் வின் அருளை பெறும் நோக்கத்தில் அமைதியாகவும் பொருமையாகவும் குர் ஆன் மற்றும் சுன்னா வின் அடிப்படையில் நடந்து உறவுகளை ஆதரித்து சமுதாயம் சீறடைய ஈருலகிலும் நாம் வெற்றி பெற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக … அமீன்.. !!!

 

            ” “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”

(அல் குர்ஆன் 3:8)

 

Mrs.Farina Althaf.

Abudhabi.





 

 




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..