அஸ்ஸலாமு அலைக்கும்
நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரையைத் தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். இந்தப் போட்டியில் இரண்டு கட்டுரைகள் இரண்டாம் இடத்தை பிடித்தன. அதில் ஒரு கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைப் போட்டிக்கு 20 கட்டுரைகள் வந்திருந்தன.
அன்புடன்
EMAN Charitable Trust
بسم الله الرحمن الرحيم
உறவுகள் மேம்பட, சமுதாயம் சீரடைய
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) , காலத்திற்கும் நேரத்திற்கும் தகுந்த ஒரு தலைப்பை தெரிவு செய்த குழுவின் உறுப்பினர்களுக்கு நன்றி .
உறவுகள் மேம்பட , சமுதாயம் சீரடைய , இந்த இரண்டு விசயங்களும் ஒன்றை ஓன்று சார்ந்தது ,இந்த இரண்டு விசயத்தில் ஓன்று சரியாக இருந்தாலே போதும் மற்றொன்று தானாகவே சரியாகி விடும் .
உறவுகள் மேம்பட :
உறவுகள் மேம்பட என்ற விசயத்திற்கு போவதற்கு முன்னால் ஏற்கனவே உறவுகள் மேம்பட்ட ஒரு காலம் இருந்ததே அதே நினைவு கூற கடமைபட்டுள்ளேன்.
நம்மிடையே ஆன உறவுகள் அன்றைய காலத்தில் எவ்வாறு இருந்தது? பல நாட்கள் நான் பெரியம்மா என்று கூறி வந்த பெரியம்மா மார்களும் சாச்சி என்று கூறி வந்த சாச்சி மார்களும் எனக்கு தெரிந்த பின் தான் தெரிந்து கொண்டேன் அவர்கள் எல்லாம் என் தாயின் சாச்சி மகள்களும் பெரியம்மா மகள்களும் என்று.
ஆனால் இன்றைய கால கட்டமோ தன் சாச்சியின் கணவரின் பெயரும் தெரியாது பிள்ளைகளின் பெயரும் தெரியாது . அவர்களிடம் போய் அவர்களின் உறவுககாரரின் பெயர் சொல்லி கேட்டால் அவர்கள் சொல்வது " அவர்கள் எல்லாம் தூரத்து சொந்தங்க "
உண்மையில் அவர்கள் தூரத்து சொந்தங்கள் இல்லை நாம் தான் சொந்தங்களை விட்டும் தூரம் ஆகி விட்டோம்.
சுருங்கி விட்ட உறவுகள் :
யாருமே இல்லாத டீ கடையில யாருக்கு பா டீ ஆத்துற என்ற நிலைமைக்கு ஆகிவிட்டது நமது உறவுகள். உறவுகள் இருந்த தானே மேம்படுத்த முடியும் இங்கு தான் உறவுகளே இல்லையே என்ற நிலைக்கு போய் கொண்டு இருக்கிறோமே.
எனக்கு 1 பெரியம்மா 3 மாமா 2 சாச்சி என் மகனுக்கு 2 பெரியப்பா என் மகனுடைய மகனுக்கு ???????
கேள்விக்குறியான நிலையில் பரிதாபத்தின் உச்சத்தில் இன்றைய உறவு நிலை .
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற காலத்திலாவது அடுத்த தலைமுறைக்கு ஒரு மாமாவோ ஒரு மாமியோ ஒரு சித்தப்பாவோ ஒரு சித்தியோ மிஞ்சியது.
இன்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற காலத்தில் வாழ்கிறோம் இதில் எங்கு போய் மாமாவையும் மாமியையும் சித்தப்பாவையும் சித்தியையும் தேடுவது ?
அன்று 10 குழந்தைகள் 5 குழந்தைகள் இருக்கின்ற மக்கள் உறவுக்காரர்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால் உடனே போய் பார்பார்கள் ஆனால் இன்றோ ஒரு குழந்தை அதிகபட்சம் இரண்டு குழந்தை வைத்து கொண்டு வேலையும் நேரமும் சரியாய் இருக்கிறது எங்க போய் பார்க்க என்று புலம்புவதை பார்க்கிறோம்
இவ்வளவு சுருங்கிய காலத்திலும் நாம் உறவுகளை பேணுகிறோமா என்றால் மிக பெரிய கேள்வி குறி ????
காலம் எவ்வளவுக்கு எவ்வளவு சுருங்கி விட்டதோ நமது உறவுகள் அதை விட அதிகம் நமது உறவுகள் சுருங்கி விட்டது .
உறவுகளை பற்றி இஸ்லாம்:
நம்மை பற்றி ஏற்கனவே அறிந்ததுனால் தான் உறவு அல்லாஹ்விடம் இவ்வாறு முறையிட்டு இருக்கிறது
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""அல்லாஹு தஅலா படைப்பினங்களைப் படைத்தான். அவைகளைப் படைத்து முடித்தபோது அல்லாஹ்விடம் இரத்த பந்தம் நின்று, ""இது உறவை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவர் நிற்கும் சமயமாகும்'' என்று கூறி மன்றாடியது. அல்லாஹ் ""ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவர்களை நான் சேர்த்துக் கொள்வேன்; உன்னைத் துண்டிப்பவர்களை நான் துண்டித்துக் கொள்வேன் என்பதை நீ பொருந்திக் கொள்கிறாயல்லவா?'' என்று கூறினான். அதற்கு இரத்த பந்தம் "ஆம்!'' (நான் பொருந்திக் கொண்டேன்) என்றது. அல்லாஹ் ""அது உனக்குரியதாகும்'' என்று கூறினான்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)
இஸ்லாம் என்றுமே மறுமையின் வெற்றியே குறிக்கோளாக கொண்ட ஒரு மார்க்கம். ஆனால் இம்மையிலே மனிதன் அதிக அதிகம் ஆசை படும் ஆயுளும் செல்வமும் கிடைக்குமே என்றால் அது உறவுகளை பேணுவதில் மட்டும் தான் உள்ளது .
நபி (ஸல் ) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).
உறவுகளுக்கிடையே ஆன நமது தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?
பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் : நீ பேசினால் நல்லதையே பேசுங்கள் இல்லையேல் வாய் மூடி மௌனமாக இருங்கள் .
பிரச்சனைகள் ஏற்படும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
நபிகள் நாயகம் ( ஸல் ) கூறினார்கள் :
திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் மனிதர்களின் செயல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது மூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக் கொண்ட இருவரைத் தவிர.
சண்டைப் போட்டுக் கொண்ட இருவரில் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கொரி திருந்துகிறாரோ அவர் தன் நண்பரிடம் சென்று ஸலாம் சொல்ல வேண்டும். இப்படி அவர் நடந்து கொள்ளும் பட்சத்தில் அவருடைய நண்பர் அவரை (ஏற்க) மறுத்து விட்டால் - அவருடைய பொறுப்பு நீங்கி விடும். (அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை) மறுத்தவர் மீதே குற்றம் எஞ்சியிருக்கும்.
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள் : நன்மையான காரியங்களில் எதையும் நீங்கள் அற்பமாக கருதி விடாதீர்கள் நீங்கள் உங்கள் சகோதரனை பார்த்து புண் முறுவல் செய்வதும் ஒரு சதக்கா
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொ ருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.”
கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒரு நாள் திரும்பும்...
இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
பெரியவருக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சமுதாயம் மேம்பட
பொதுவாக சொல்வார்கள் படித்தால் சமுதாயம் முன்னேறி விடும் என்று . ஆனால் நிதர்சன நிலை என்னவென்றால் நான் வாழும் தெருவில் 10 வீட்டுக்கு 5 வீடு என்ற சராசரி அளவில் படித்த பட்டதாரிகள் இருகிறார்கள் .
படிப்பின் உச்சத்தை எட்டிய நிலையிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா என்று கேட்டால் அதே நிலைமை தான் இன்றும் உள்ளது .
இன்னும் சொல்ல போனால் பிந்திய நம் முன்னோர்களிடத்தில் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் விடும் வழக்கம் இல்லை .
தாய் தந்தையர்களை எதிர்த்து பேசும் வழக்கம் இல்லை . மாற்று மதகாரனோடு ஓடி போகும் வழக்கம் இல்லை .
ஆனால் மேற்சொன்ன எல்லா விசயங்களும் நாம் வாழும் காலத்தில் இருக்கிறது அதுவும் படித்தவர்கள் மத்தியில் குறிப்பாக ,அப்படியென்றால் எங்கே கோளாறு என்று அனைவரும் அறிய வேண்டும் .
இதற்கான மிக முக்கியமான கேடயமாகிய மார்க்கம் நம்மிடையே இல்லை .
இஸ்லாம் என்றுமே சமுதாய மேம்பாட்டில் அக்கறை கொண்டாதாகவே இருக்கிறது. நமது ஒவ்வொரு அமலையும் அதை நோக்கியே அமைய வலியுறுத்துகிறது .
ஏனைய மனிதர்களிடம் உண்மையான அன்பு செலுத்துதல்,
இளையவர்கள்பால் இரக்கம் காட்டுவது,
முதியவர்களை மதித்து நடப்பது,
துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, ஆறுதல் கூறுவது,
நோயுற்றோரை சென்று பார்ப்பது,
சகோதரத்துவத்தை உண்மையாகவே நிலைநாட்டுவது, சமுதாய ஒற்றுமை உடைந்திடாமல் பாதுகாப்பது,
அடுத்தவர்களின் உரிமைகள், உடமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்தல்,
சமுதாயம் – தனிமனிதன் என்ற வகையில் ஏற்படும் பரஸ்பர பொறுப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவையாகும்.
இது போன்ற விசயங்கள் அழ் மனதில் விதைக்க பட வேண்டும் .
நாம் இந்த தருணத்தில் செய்ய வேண்டியது என்ன ?
அல்ஹம்துலில்லாஹ் நமது ஊரில் கல்விக்காகவும் மருதுவத்திற்காகவும் பல அமைப்புகள் பல டிரஸ்ட்கள் முனைப்போடு ஆர்வம் காட்டுகின்றன.
நாம் முன்னவே சொன்னது போல் நாம் படித்த பட்டதாரிகளே உருவாக்குகிறோமே தவிர சமூக சிந்தனையுள்ள சமுதாயத்தை உருவாக்கவில்லை.
கல்வி சம்மந்தமாக பணி செய்யும் அமைப்புகள் அனைவரும் சேர்ந்து
முதற்படியாக இஸ்லாமிய sylabusஐ உருவாக்க வேண்டும் ஆரம்ப கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும் .
இஸ்லாமிய கல்வி கூடங்களில் தனிப்பட்ட ஒரு ஆசிரியரை நியமித்து கல்வி கூடத்தின் அனுமதி பெற்று நாம் பயிற்றுவிக்கலாம்
பள்ளி கோடை விடுமுறையில் short Time Course நடத்தலாம் . இவ்வாறு கோர்ஸ் பயில வர வரும் மாணவ மாணவிகளுக்கு வகுப்பு முடியும் போது தீனியாத் வகுப்பு நடத்தலாம் .
எல்லாம் வல்ல இறைவன் எம் சமூகத்தை சீர்கேடே விட்டும் தவிர்த்து சீர்மிகு சமுதாயமாக வாழ செய்வானாக
Name : Abu Mujahid
Eruvadi |