Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஆண்களின் உலகம்!
Posted By:Hajas On 6/21/2014 11:11:08 AM

buy amoxicillin from canada

amoxicillin prescription no insurance

prednisolon tabletta

prednisolon tabletta

ஆண்களின் உலகம்!
அண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்!
எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டு இருக்கிறது. இது முழுப் பொய் இல்லை. ஆனால், முழு உண்மையும் இல்லை.
ஊரில் நிலத்தை, நகைகளை அடகுவைத்து ஏஜென்ட்டிடம் பணம் கட்டி சிங்கப்பூரிலும், வளைகுடா நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வேலை பார்ப்பவர்கள் லட்சங்களைத் தாண்டுவார்கள். முதல் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து, வெளிநாடு செல்வதற்கு வாங்கிய கடனை அடைப்பார்கள். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து கோடாலித் தைலமும், சென்ட் பாட்டிலும் பரிசளித்துவிட்டு, மறுபடியும் ஃப்ளைட் பிடித்தால், அடுத்த இரண்டு வருட வருமானம் வீடு கட்டவே போதாது. அப்புறம் தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம் என முடித்து நிமிரும்போது, அப்போதுதான் உள்ளூரில் நல்ல விலைக்கு நிலம் விலைக்கு வரும். கடன் வாங்கி அதை வாங்கிவிட்டு, கடல் கடந்தால், அதற்கு இரண்டு வருடங்கள். இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து திருமணம் முடித்து, தாம்பத்தியம் நடத்தி வெளிநாடு போனால், சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கையில் முகத் தோல் தடித்து, கன்னக்கதுப்புகளில் முதிர்ச்சி படிந்து இருக்கும்!
இவை எவற்றையும் பாரமாகவும் துக்கமாகவும் எந்த ஆணும் நினைப்பது இல்லை. ஆனால், இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆணை விமர்சிக்கவும், ஒதுக்கித்தள்ளவுமான கருவியாக எல்லோரும் கைக்கொள்வது, அவனது ஒழுக்கத்தை. குறிப்பாக, 'சாராயம் குடிக்கின்றனர், சிகரெட் பிடிக்கின்றனர்’ என்பது. உண்மையில், இவை உடல்நலம் கெடுக்கும் தவறான பழக்கங்களே.
ஆனால், சமூகத்தில் ஓர் ஆணின் நல்மதிப்பை அளவிட இவற்றை மட்டுமே அளவுகோல்களாகக் கருத முடியாது. காஞ்சிபுரத்தில் இறைவன் சந்நிதியில் பெண்களுடன் சல்லாபம் நடத்திய தேவநாதனுக்கு சாராயம், சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. ஊரே சிரிக்கும் நித்யானந்தாவுக்கு டீ குடிக்கும் பழக்கம்கூட இல்லையாம். இந்த ஆண்களின் சமூக மதிப்பை எப்படி வரையறுப்பது?

முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ-யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையோ பேர்! படித்தவர்கள்தான் என்றாலும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறையில் கல்வி பெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள், நகரங்களில் தடுமாறித்தான் போகின்றனர். 21 வயதில் டிகிரி முடித்து வேலை தேடி வருபவர்கள், டெலி மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப், பி.பி.ஓ., என மெதுவாக மேலே ஏறி ஒரு நிலையை எட்டுவதற்குள் முன் நெற்றியில் முடி கொட்டிவிடுகிறது. இளமையின் எந்த சுகங்களையும் அனுபவித்திடாத முதல் தலைமுறை இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்! ''காலேஜ் முடிச்சதும் கஷ்டமோ, நஷ்டமோ... எல்லாப் பசங்களையும்போல ரெண்டு வருஷம் ஜாலியா சுத்திரணும்டா, அந்தந்த வயசுல அப்படி அப்படி இருந்திரணும். குடும்ப நிலைமைன்னு வேலைக்கு வந்தோம். எட்டு வருஷமாச்சு. நிமிர்ந்து பார்த்தா, நம்ம வயசு இருக்கும்னு நினைக்குற பசங்க சட்டுனு நம்மளை 'அண்ணா’ன்னு கூப்பிடுறானுங்க. தூக்கி வாரிப் போடுது. அவன் அந்தண்டை நகர்ந்த பிறகு, கண்ணாடி முன் கவலையா நிக்கச் சொல்லுது. என்னிக்காச்சும் ஒரு பொண்ணு, 'அங்கிள்’னு கூப்பிட்டுருமோன்னு பயமா இருக்கு!'' எனச் சிரிப்பவனின் பெயர் பிரவீன். தி.நகர் முருகன் இட்லிக் கடை வாசலிலோ, சரவணபவன் வாசலிலோ அவனை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். தடித் தடியாக டிக்ஷனரி விற்றுக்கொண்டு இருப்பான். மாதம் பிறந்தால் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. மூன்று இருக்கிறது பிரவீனுக்கு! இப்படிப்பட்ட பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்விக் கதை இருக்கும். அதற்குக் காரணம், குடும்பமாக இருக்கும். 'குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பது அல்ல... குடும்பத்தின் நிலை அறிந்து, அவர்களே தான் விரும்பிய பெண்ணிடம் காதலைச் சொல்வதுகூட இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாகச் சொல்வது இல்லை. காரணம், 'ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது. இணை, இணையாகச் சுற்றுபவர்களைக் காட்டிலும், இப்படி மனதுக்குள் கருகிப் போன காதல்களோடு, வேலை முடிந்த பின்னிரவில் முகம் அறியாப் பெண்களுடன் காதலும் காமமுமாகப் பேசித் திரியும் ஆண்கள்தான் எத்தனை, எத்தனை பேர்?! ஆண்கள் குடும்பத்தைப்பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நண்பர் களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகபட்சம், இரண்டாவது பியரில் 'ஒரு மேட்டர் மச்சான்...’ என மனசைத் திறந்து சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண் களேதான். சினிமாவில் சித்திரிப்பதுபோல, பெண்கள் அல்ல!
ஆனால், குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம் தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் தங்கள் நண்பர்களிடமே பகிர்கின்றனர்.
மேன்ஷன் போன்ற இடங்களில் ஆண்களின் உலகத்தை மேலும் நெருக்கமாக அறியலாம். ஏதேதோ திசையில் இருந்து ஓர் அறையில் அறிமுகம் இன்றி வந்து தங்கும் இளைஞர்களுக்கு இடையேயான நட்பின் அடர்த்தி, கூடக் குறைய இருக்கலாம். ஆனால், யார் ஒருவரும் மற்றவர்களைச் சாப் பிடாமல் தூங்கவிடுவது இல்லை. மாசக் கடைசியில்கூட, 'உனக்கு இதே வேலையாப் போச்சுடா!’ எனத் திட்டிக்கொண்டேயாவது ஒரு முட்டை பரோட்டா பார்சல் வாங்கி வந்துவிடுவார்கள்.
இப்போது நிறைய ஐ.டி. இளைஞர்கள் இரவையும் பகலையும் கடந்து வேலை பார்க் கின்றனர். அதிக சம்பளம், அதை அவர்கள் செலவழிக்கும் விதத்தால் வீட்டு வாடகை உயர்வு போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம். ஆனால், அவர்களை வீடும் உறவும் உண்மையில் பணம் காய்க்கும் எந்திரமாக அல்லவா பார்க்கின்றன. ஐ.டி. இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறை, வீட்டுக்கும் உறவு களுக்கும் கலாசாரரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், அவர்கள் ஈட்டும் அதிகப் பணமே அதற்கான அங்கீகாரமாக மாறுகிறது.
ஆனால், ஐ.டி. வேலை எல்லோருக்கும் கிடைப்பது இல்லையே?! தமிழ்நாடு முழுவதும் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாகப் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரியில் படித்துவிட்டு வந்தார்கள்? 'இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச் சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தின வாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்கள். 'உன் வீட்டுக்காரர் எங்கே வேலை பாக்குறார்?’ எனக் கேட்டால், அவர்களின் மனைவிகள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர் கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாகத் தலை அசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.
கிருஷ்ணகுமார் என்ற நண்பருக்கு 35 தாண்டிய வயது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தில் இருந்து தினமும் சென்னை வடபழனிக்கு வேலைக்கு வருகிறார். வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள், அங்கே இருந்து கிண்டி வரை மின்சார ரயில், கிண்டி டு வடபழனி நகரப் பேருந்து... மாலை வீடு திரும்புகையில் இதே சுற்று பஸ்-டிரெயின்-சைக்கிள் என்பதாக முடியும். காலை 6 மணிக் குக் கிளம்பினால், இரவு வீடு திரும்ப 10 மணி ஆகும். உழைக்கும் எந்திரமாக மாறிவிட்டார். இரண்டு ரூபாய் அதிகம் என்பதனால், இஞ்சி டீ கூடக் குடிக்க மாட்டார்! டிராஃபிக் அதிக மாகி இருந்த நாள் ஒன்றில், என் வண்டியில் கிண்டி வரை வந்தார்.
தனக்கு ஒரே ஒரு தங்கை எனவும், அவளைத் திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கடுமை யான பிரச்னை எனவும் சொன்னார். நான் அதிகம் கேட்கவில்லை.
''ரொம்பப் பிரச்னை ஆயிடுச்சு சார். வேற வழி இல்லாம டைவர்ஸ் வாங்கினோம். ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு இப்போ தான் இன்னொரு பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சேன்!'' என்றவரிடம் பெரிய ஆசுவாசம் தெரிந்தது.
இந்த வயதில்தான் அவர் குடும்பப் பொறுப்புகளில் இருந்து விடுதலை ஆகியிருக் கிறார். ''நீங்க எதுவாச்சும் ஆகணும்னு ஆசைப்பட்டீங்களா?'' என்றேன். சிரித்தார். ''ஆசைக்கு என்ன சார், இப்போகூட ஆசைப்பட்டுக்க வேண்டியதுதான். ஆசைதானே?!''
உண்மையில் வரதட்சணை, வீண் ஆடம்பரம், நகைகளை வாங்கிச் சேர்ப்பது போன்றவை ஆண்களை நசுக்கிப் பிழிகிறது. அதற்கேற்ற வகையில் சம்பாதிக்க முடியாமல் போனால், வாழவே தகுதி இல்லையோ என அவர்களைக் குற்றவுணர்வு அடையவைக்கும் அளவில்தான் இருக்கிறது சூழல். நமது மோசமான குடும்ப அமைப்பு, உறவுகளாலும், அதைவிட அதிகமாக பணத்தாலும் பின்னப்பட்டு இருக்கிறது. அந்த பாரத்தை ஆண்கள் விருப்பப்பட்டு அல்ல, வருத்தப்பட்டே சுமக்கின்றனர்.
நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், ஊர் மெச்சும் வாழ்வு... இவை எல்லாம் தர முடியாத ஆண், தரக்குறைவானவன் என பொதுப் புத்தி நினைக்கிறது. கிடைக்கும் வேலையைச் சரியாகச் செய்து, வரும் வருமானத்தில் திருப்தியுடன் வாழ்வதை யாரும் விரும்புவதும் இல்லை, பரிந்துரைப்பதும் இல்லை!

ஆண்களை Victim-களாகச் சித்திரித்து அவர்களின் ஆதிக்கத்தன்மையை நியாயப்படுத்துவது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். மேற்சொன்ன ஆண் துயரங்கள் போன்றவை இன்னும் அதிக விழுக்காட்டில் பெண்களுக்கும் உண்டு. ஆணின் உலகை இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் புரிந்துகொள்வோம் என்பதே இந்தக் குரலின் அடிநாதம்!
- ஆனந்த விகடனிலிருந்து...
-பாரதி தம்பி

https://www.facebook.com/photo.php?fbid=660753540640837&set=gm.670615993007121&type=1

Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..