டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive.........இறுதி பாகம்.
by David Praveen
பாகம் 1, பாகம் 2, பாகம் 3,பாகம் 4, பாகம் 5
ஐந்து பெரும் உயிரின அழிப்புகளுக்கும் (mass extinctions) காரணமானது flood basalt. ஒருவகையான எரிமலை போன்றது இது. இது எரிமலைப் போன்று வெடித்து சிதறாது ஆனால் பல கிலோ மீட்டர்களுக்கு பூமியை பாளம் பாளமாக பிளந்துக்கொண்டு எரிமலை குழம்பு (lava) வெளியே வரும். Flood Basalt-லிருந்து அதிகளவில் carbon-di-oxide-வும் methane-வும் வெளியேறும். அதிகப்படியான கார்பன் மற்றும் மீத்தேன் வெளியேற்றம் பூமியின் வெப்ப நிலையை அதிகப்படுத்தும் என்பது நமக்கு தெரிந்த விசயம்தானே.
இப்படியான flood basalt (இந்த நெறுப்பு குழம்பு பூமிக்கு மேல் வந்ததும் பாறைபோல இறுகிவிடும். நம்முடைய மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பெறும்பாலும் இவைகளால் உருவானவைகள்தான்) ஒன்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியப் பகுதிகள் தொடங்கி மத்திய இந்தியப் பகுதிகள் வரை வெளிப்பட்டிருக்கிறது. ஐந்து பெரும் உயிரின அழிப்புகளில் ஒன்றிர்கு இந்தியாவில் வெளிப்பட்ட flood basalt-வும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அடுத்து Siberia பகுதியில் இப்படி ஏற்பட்டதற்கான தடயங்களும் இருக்கிறது.
Flood Basalt கார்பன் மற்றும் மீத்தேனுடம் சேர்த்து Sulfur-யையும் வளி மண்டலத்தில் பெறும் அளவில் கலந்துவிடும். இது அமில மழைக்கு வழி வகுக்கும். அமில மழை தொடங்குவது இரண்டாம் நிலைதான். Flood Basalt ஏற்பட்டதும் முதலில் நடக்கும் காரியம் வெப்ப நிலை உயர்வால் பனி உருகுவது. பனி உருகினால் என்ன நடக்கும் என்பதும் நமக்கு தெரிந்த விசயம்தான். பூமியின் வெப்ப நிலை உயர்வு கடலில் ஓயாமல் உலகைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் sea current conveyer belt-யை பாதிக்கும்.
மேலே நாம் பார்த்தது இயற்க்கையே உண்டாக்கும் செயல்பாடு. Flood Basalt தீடிரென்று பூமியின் மேற்பரப்பிற்கு ஏன் வருகிறது அத்தகைய நடவடிக்கை மீண்டும் எப்பொழுது நடைப்பெறும் என்பதெல்லாம் அறிவியலுக்கு இயற்க்கை காட்டும் கண்ணாம் பூச்சி ஆட்டம். பல கோடி ஆண்டுகளின் இடைவெளியில் இது தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை கிடைத்த தகவல்களைக்கொண்டு அடுத்து எத்தனை கோடி ஆண்டுகள் கழித்து மீண்டும் Flood Basalt வெளியே வரும் என்று கணிக்க முடியவில்லை.
ஆனால் அப்படியெல்லாம் கணிக்க அவசியமே இல்லாமல் Flood Basalt அதிகரித்துவிடும் புவி வெப்பத்தை மனிதன் ஏற்கனவே தூண்டிவிட்டுவிட்டான் அறிவியல் மற்றும் வளர்ச்சி என்கிறப் பெயரில். புகழ்பெற்ற Nature பத்திரிக்கையில் 2005 வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று மனிதன் தூண்டிவிட்ட Global Warming காரணமாக 2050-ஆம் ஆண்டிற்குள் பூமியிலிருக்கும் உயிரினங்களில் சுமார் ஒரு கோடி வகைகள் முற்றுமாக அழிந்துவிட்டிருக்கும் என்று கணித்திருக்கிறது. பூமியில் இருப்பதாக இதுவரை அறிவியல் கண்டுபிடித்திருக்கும் உயிரன வகைகளின் மொத்த எண்ணிக்கையே 1.6 கோடிதான். அதில் ஒரு கோடி அழிந்துவிடும் என்றால் விபரீதத்தை நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள். இது நடக்கப்போவது இன்னும் 35-யே வருடங்களில் என்பது நமக்கெல்லாம் கூடுதல் சிறப்பு.
அடுத்த 8 உலக கோப்பை கிரிக்கெட்ட ஆட்டங்கள் முடிந்துப் பார்த்தால் பூமியில் ஒரு கோடி வகை உயிரினங்கள் இருக்காது. அதாவது 60% உயிரினங்கள் இருக்காது. ஹூர்ரே கோக் எடு கொண்டாடு! மனித இன வளர்ச்சி என்கிறப் பெயரில் இந்த பூமியை நம்மோடு பங்குப்போட்டுக்கொள்ள எல்லா உரிமைகளும் கொண்ட உயிரினங்களை அழிப்பது எவ்வகையில் நியாயமான செயலாக இருக்க முடியும்? இந்த பூமியும் அதன் வளங்களும் மனிதனுக்கு மட்டும்தான் சொந்தம் அவைகளை மனிதன் எப்படி வேண்டுமானாலும் சூரையாடலாம் என்று மார்தட்டுவதற்குதான் நமக்கு ஆறாம் அறிவா? பூமியின் ஐந்தறிவுப் படைத்த மற்ற உயிரினங்கள் பிற உயிரினங்களுக்கு எத்தகைய தீங்கும் செய்யாமல் இருக்க நமக்கு ஆறாம் அறிவு இருந்தும் என்னப் பயன் வளர்ச்சி என்று மற்ற உயிரினங்களை அழித்ததைத் தவிர?
சரி டைனோசர் விசயத்திற்கு வருவோம் அப்பொழுதுதான் இந்த கட்டுரையின் தலைப்பிற்கு ஒரு அர்த்தம் கொடுத்ததாக இருக்கும். டைனோசர் என்று ஒரு விலங்கினம் இந்த பூமியில் இருந்திருந்தால் அவைகள் நிச்சயம் விண்கல் மோதலால் அழிந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதை பார்த்தோம். சொல்லப்போனால் டைனோசர் போன்ற உருவில் மிகப் பெரிய விலங்கினங்கள் பூமியில் தோன்ற ஊக்கியாகவே விண்கல் மோதல்கள் இருந்திருக்கின்றன என்பதையும் பார்த்தோம்.
உண்மையிலேயே பூமியில் டைனோசர்கள் இருந்தனவா? புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள் டைனோசர்களின் எலும்புகள் என்று நமக்கு காட்டும் படங்கள் ஒரு புறம் இருக்கட்டும் அந்த எலும்புகளைக் கொண்டு டைனோசர்கள் எப்படி அழிந்தன என்று இதுவரை எந்த ஒரு புதைப்படிவ ஆராய்ச்சியாளரும் நமக்கு விளக்கியபாடில்லை. ஏன் ஒருவரும் தெளிவாக விளக்கமாட்டேன் என்கிறார்கள்? ஏன் இந்த மெளனம்? இது இயலாமையின் காரணமான மெளனமா அல்லது கள்ள மெளனமா? இத்தைய மில்லியன் டாலர் கேள்விகளை உங்களுக்குள் எழுப்பிக்கொண்டே இந்த கட்டுரைக்கு சுபம் போடுகிறேன்.

|