பெருங்கலவரம் ஒன்றில். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை.. மதங்களால் அடையாளமிட்டு அடக்கவோ எரிக்கவோ செய்தனர்.. அங்கு நாதியற்று நாற்றமெடுத்து கிடந்தது மரித்துப் போன மனிதம் மட்டும் ....... பதில் சொல் வண்புணரப்பட்டவள் எந்த மதத்தவள் எந்த இனத்தவள் என்றால் உன்னுள் இரக்கம் பிறக்கும்?? ....... தன்னினம் பார்த்து வரும் உன் கண்ணீர் அவர்கள் மேனியில் வழியும் குருதியின் வலியிலும் கொடியது. ..... உதிரத்துடனேயே உரமாகிப் போகிறேன் நான்.. வீரியமுள்ள விருட்சங்கள் இனியாவது முளைக்கட்டும் இத்தேசத்தில் ......
- ஏர்வாடி சிந்தா... |