nifedipine pommade acheter nifedipine 20mg redirect acheter nifedipine 10mg
பிறையைப் பார்க்காமல் கணிக்கலாமா? ==================================== . ஹிந்து மதம், பௌத்த மதம், மற்றும் பண்டைக்கால அரேபிய இறை நிராகரிப்பாளர்களது மதங்கள் போன்ற அனைத்திலுமே பொதுவான ஓர் அம்சம் உள்ளது. . அது தான், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணிப்பதன் மூலம், பஞ்சாங்கம் தயாரித்து, அதன் மூலமே காலத்தை அளவிடும் நடைமுறை. . இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாற்றமாகப் புரட்சிகரமான புதியதொரு காலங்காட்டியை நபி (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் உலகுக்கு வழங்கினான். . அது என்ன புதிய காலங்காட்டி? . நேரத்தை அறிந்து கொள்வதற்கு சூரியனின் நேரடி இடப் பெயர்ச்சியும், நாள் / மாதம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு சந்திரனின் வேறுபட்ட தோற்றங்களும் / வடிவங்களும். . இந்தப் புதிய காலங்காட்டி, ஏனைய மதத்தவர்களது பஞ்சாங்கங்களைப் போலிருக்கவில்லை. . ஒரு வருடத்துக்கான மொத்த நாட்களையும் ஒரே கலண்டரில் கணித்து முன்கூட்டியே எழுதி வைக்கும் வழிமுறையை ஒழுத்துக் கட்டி, தூய சந்திர கலண்டர் (Pure Lunar Calendar) ஒன்றையே நபியவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கிச் சென்றார்கள்.
.
இந்தப் புதிய கலண்டர் மிகவும் எளிமையானது; படித்தவன், பாமரன் என்று பாகுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள வசதியானது. . பிறையைக் கண்களால் பார்த்து ஒவ்வொரு மாதத்தையும், நாட்களையும் தீர்மாணித்தல் என்பதே இந்த கலண்டரின் அடிப்படைத் தத்துவம். . இந்த இஸ்லாமிய கலண்டருக்கும், ஏனைய மதத்தவர்களது கலண்டர்களுக்கும் இடையிலிருக்கும் பிரதான வித்தியாசமே “கண்களால் பார்த்து முடிவெடுத்தல்” என்பதில் தான் தங்கியுள்ளது. . இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் அழகாகச் சொல்லிக் காட்டியுள்ளார்கள்: . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரழி) அறிவித்ததாவது: “நாம் உம்மி சமூகத்தவராக இருக்கிறோம். நாம் எழுதவும் மாட்டோம்; கணிப்பீடுகளை அறியவும் மாட்டோம். மாதம் என்பது இப்படியும், அப்படியும் இருக்கும்.” சில சமயம் 29 நாளாகவும், சில சமயம் முப்பது நாளாகவும் அது இருக்கும். ஸஹீஹுல் புகாரி 1913 . இந்த ஹதீஸ் நமக்கு முக்கியமாக உணர்த்தும் உண்மையே, “ஏனைய சமூகத்தவர்களது கலண்டர் போன்றது அல்ல நமது கலண்டர்; எம்மைப் போன்ற பாமரர்கள் கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது கலண்டர் எளிமையானது; நமது கலண்டரில் சிக்கலான கணிப்புகள் இல்லை. பிறையைப் பார்ப்பதில் மட்டுமே அது தங்கியுள்ளது” என்பது தான். . இவ்வளவு அழகாக இந்த ஹதீஸ் இந்த உண்மையைச் சொல்லும் போது, இன்று ஒரு சிலரோ மீண்டும் பழைய பஞ்சாங்க கலண்டருக்கே வந்த வழியில் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள். . எந்த ஹதீஸ் மூலம் நபியவர்கள் “நமது கலண்டர், கணிப்பீட்டின் அடிப்படையிலானது அல்ல; கண்பார்வையின் அடிப்படையிலானது” என்று சொன்னார்களோ, அதே ஹதீஸுக்கு இன்று இவர்கள் தலைகீழ் வியாக்கியானம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. . “அந்தக் காலத்தில் கணக்குப் பார்க்கத் தெரியாததால் தான் பிறை பார்க்கச் சொன்னார்கள். கணக்குப் பார்க்க தெரிந்திருந்தால் நபியவர்கள் அன்றே பிறையைக் கணித்திருப்பார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் அர்த்தம்” என்று மனோ இச்சை விளக்கம் கொடுக்கும் இந்தச் சாராரிடம் நான் கேட்க விரும்பும் எதிர்க் கேள்வி இது தான்: . கணக்குப் பார்க்கத் தெரியாததனால் தான் அன்று நபியவர்கள் பிறை பார்க்கச் சொன்னார்களென்றால், அதெப்படி மாதம் என்பது 29 நாட்கள் என்றும், பிறை தென்படவில்லையென்றால் 30 ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்கள்? அப்போ இது கணக்கு இல்லாமல் வேறென்ன? சமூகக் கல்வியா? கணக்குப் பார்க்கத் தெரியாத உம்மி சமூகத்துக்கு இந்தக் கணக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? . அதே போல் அக்காலத்திலும் நபி உட்பட ஏராளமான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்பவர்களாகத் தானே இருந்தார்கள்? கணக்குப் பார்க்கத் தெரியாமல் எப்படி வியாபாரம் செய்வது? குத்து மதிப்பாக கேனைத்தனமாகத் தான் அவர்கள் வாங்கி விற்றுக் கொண்டிருந்தார்கள் என்று தான் இவர்கள் சொல்ல வருகிறார்களா? . கணக்குப் பார்த்தலை மட்டுமா இந்த ஹதீஸில் சொன்னார்கள்? “நாம் உம்மி சமூகமக இருக்கிறோம்; நாம் எழுத மாட்டோம்” என்றும் தானே சொன்னார்கள்? . அப்போ இவர்கள் வாதப்படி அங்கு யாருக்குமே எழுதத் தெரியாது என்று தான் அர்த்தமா? அப்படியானால் குர்ஆனை யார் எழுதினார்கள்? வானத்திலிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து தான் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார்களா? . இவர்களது மனோ இச்சை வியாக்கியாணம், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றதென்பது இதிலிருந்தே புரிகிறதல்லவா? . பிறகு எதற்காக நபியவர்கள் “நாம் உம்மி சமூகமாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்? . உண்மையில் இதைக் கூறியதன் அர்த்தம், அவர்கள் எழுத வாசிக்க, கணக்குப் பார்க்கத் தெரியாததனால் தான் பிறை பார்த்தார்கள் என்பதற்காகவல்ல. . “ஏனைய காஃபிர் சமூகத்தவர்களைப் போல் நாம் காலத்தைப் பஞ்சாங்கம் போட்டுக் கணிப்பவர்கள் அல்ல; நமது நாட்காட்டி என்பது ஓர் உம்மி சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது; பாமரன் கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு இலகுவானது” என்பதை உணர்த்தத் தான். . பிறைக் கணிப்பீட்டாளர்களின் முதலாவது பித்தலாட்டத்துக்கான பதிலாக இதைக் கருதிக் கொள்ளலாம். . இன் ஷா அல்லாஹ் இன்னும் வரும். . - அபூ மலிக் |