Posted By:peer On 3/27/2020 9:03:15 PM |
|
நம் தமிழ் மொழியின் சொற்கள் எப்படி பிறமொழி சொற்களாக ( இவை தமிழ் சொற்கள் என்று ) பயன்படுத்துகிறோம் எப்படி எல்லாம் உணர்வின்றி நாம் கண்மூடி ஏற்றுக்கொண்டு மாற்றி மொழிகிறோம் ( சொல்கிறோம் ).
குடமுழுக்கை-- கும்பாபிஷேகமாக்கி அருள்மிகுவை-- ஸ்ரீயென ஆக்கி கருவறையை--- கர்ப்பகிரகமாக்கி நீரை--- ஜலமாக்கி தண்ணீரைத்--- தீர்த்தமாக்கி குளியலை---- ஸ்நானமாக்கி அன்பளிப்பை--- தட்சணையாக்கி கதிரவனை--- சூரியனாக்கி வணக்கத்தை---- நமஸ்காரமாக்கி ஐயாவை--- ஜீயாக்கி நிலத்தை--- பூலோகமாக்கி வேளாண்மையை--- விவசாயமாக்கி மழையை--- வருணணாக்கி வேண்டுதலை--- ஜெபமாக்கி தீயை-- அக்னியாக்கி குண்டத்தை--- யாகமாக்கி காற்றை--- வாயுவாக்கி விண்ணை-- ஆகாயமாக்கி பூவை--- புஷ்பமாக்கி பூசனையை--- பூஜையாக்கி முறைகளை--- ஆச்சாரமாக்கி படையலை--- நைவய்தியமாக்கி திருமணத்தை--- விவாகமாக்கி பிள்ளைப் பேறை--- பிரசவமாக்கி பிணத்தை--- சவமாக்கி மக்களை--- ஜனங்களாக்கி உணர்வற்றதை--- சடமாக்கி ஒன்பதாம் நாளை-- நவமியாக்கி பத்தாம் நாளை--- தசமியாக்கி பிறந்தநாளை--- ஜெயந்தியாக்கி பருவமடைதலை---- ருதுவாக்கி அறிவைப்---- புத்தியாக்கி ஆசானைக்--- குருவாக்கி மாணவனை--- சிஷ்யனாக்கி அறிவியலை--- விஞ்ஞானமாக்கி படிப்பித்தலை----- அப்பியாசமாக்கி பள்ளிகளை--- வித்யாலயமாக்கி அவையை--- சபையாக்கி கலையை---- சாஸ்திரமாக்கி இசையை--- சங்கீதமாக்கி ஓவியத்தை---- சித்திரமாக்கி ஆடலை--- நடனமாக்கி ஆடையை---- வஸ்திரமாக்கி அழகை--- சுந்தராக்கி முகத்தை--- வதனமாக்கி முடியை---- கேசமாக்கி உறக்கத்தை---- நித்திரையாக்கி உண்மையை---- சத்தியமாக்கி நல்லதை---- புண்ணியமாக்கி கெட்டதை----- பாவமாக்கி கொடையை----- தர்மமாக்கி அமிழ்தை---- அமிர்தமாக்கி நஞ்சை-- விஷமாக்கி சான்றை--- ஆதாரமாக்கி பெரியதை--- மஹாவாக்கி சிறியதை--- சோட்டாவாக்கி செருப்பை--- ரட்ஷையாக்கி ஊர்வலத்தை----- உற்சவமாக்கி பயணத்தை---- யாத்திரையாக்கி உலகத்தை---- லோகமாக்கி மாட்டைக்---- கோமாதாவாக்கி மூத்திரத்தை--- கோமியமாக்கி நலம்-- -சே-ஷமமாக்கி திரு ஸ்ரீயாக்கி திருவில்லிபுத்தூர்-- -- ஸ்ரீவில்லிபுத்தூர் என்னைச்--- சூத்திரனாக்கி உன்னைப் பஞ்சமனாக்கி....???
முழுவதும் தமிழ் மொழி சொற்கள் பயன்படுத்தாது. தாய்மொழி தமிழ் என்று ஏதும் அறியாது ஒலி எழுப்புகிறோம்
தமிழுக்கு வந்த (நாம் தந்த) சோதனை(வேதனை)
புரிதலுக்கும் உணர்தலுக்கும் இது வழியாக அமைய விருப்பம் . பகிர்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
நன்றி |