Posted By:peer On 3/27/2020 9:07:27 PM |
|
உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !
(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று (௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று (௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று (௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று" (௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்" (௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்" (௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று" (௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று" (௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று" (௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று" (௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"
|