Posted By:peer On 3/27/2020 9:12:59 PM |
|
தலைப்பு :
தொன்மை , பழமை , செழுமை , வளர்ச்சி , தோன்றல் , பெருக்கம் என அத்தனை சிறப்பு கொண்ட ஒரே மொழி என சான்று கொண்டு உயிர் வாழும் உன்னத மொழி .
எழுத்துக்கள் , சொற்கள் , சொல் வரிகள் என அனைத்தும் உயிர் , உணர்வில் இருந்து வெளிப்பட்டவை என்பற்க்கும், ஓர் எழுத்து சொல்லாகவும் , பல எழுத்துக்கள் ஒரு சொல் வடிவம் கொண்டு அவற்றிற்க்கு பொருள் எங்கனம் உட்டொதிந்து செயல் கொள்கிறது என்பதற்க்கு சான்று
இதை தொகுத்தவர்
திரு சாக்குவார் உசேன் கல்வி ஆசிரியர் ( தமிழ் ) சிங்கப்பூர் .
⚜ "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
⚜ தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
⚜ மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
⚜ சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
⚜ சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
⚜ 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
⚜ நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
⚜ வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
⚜ கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.
⚜ உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.
⚜ கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.
⚜ ஈராயிரம் ஆண்டுகள் (குறைந்த மதிப்பீடு அளவு) வாழ்ந்துகொண்டிருக்கும் மொழி என்றால் தமிழைக் ( அதன் இயல்பின்* _சிறப்பினை ) கொண்டாடுவோம்.*>√
⚜ வாழ்க தமிழ்!✍ |