01-09-1955 முதல் 30-04-1975 வரை நடைபெற்ற அமெரிக்கவியட்நாம்யுத்தத்தில் அமெரிக்கா படு தோல்வியடைந்தது. கிட்டத்தட்ட 19 வருட நேரடி யுத்தத்தில் அமெரிக்காவை_நிர்வாணமாக்கி ஓட விட்டது அதற்கு பிறகு அமெரிக்காவை தெறிக்கவிட்டது கொரோனா மட்டும்தான்.
உலகத்திற்கே தான் மட்டுமே தாதா என அறிவிக்காமல் அராஜகம் செய்து வரும் அமெரிக்காவை வியட்நாமில் விரட்டி விரட்டி அடித்தவர் ஹோச்சிமின்.
ஹோச்சிமின் குடும்பம் பிரான்சில் வசித்து வந்தது. அவரின் சகோதரர் பிரான்ஸ்-வியட்நாம் போரில் பிரான்சுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இது பொறுக்காத பிரெஞ்ச் அதிகார வர்க்கம் அவரை சுட்டுக்கொன்றது. அப்போது அங்கிருந்த ஹோச்சிமின்னை பார்த்து, 'இவனை பாத்தா இன்னும் ரெண்டு நாள்ல செத்து போற மாதிரி இருக்கான். இவனை கொல்லபுல்லட்டைவேஸ்ட் பண்ணக்கூடாது' என அலட்சியமாக விட்டுச்சென்றனர். அந்த அலட்சியம்தான் அமெரிக்காவுக்கு_ஆப்படித்தது.
துப்பாக்கியை நிறுத்தி வைத்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் தேகம்தான் ஹோ ச்சி மின்னுக்கு. ஆனால் ஆழ்ந்த_அரசியல் புலமையும்,நுண்ணறிவும், போர்த்தந்திரமும் கொண்ட காரணத்தால் வியட்நாம் படைகளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு தேடி வந்தது. களத்தில் நின்று மக்களை போரில் பங்கெடுக்க வைத்ததால் வெற்றியும் வசப்பட்டது.
7 மில்லியன் டன் எடையுள்ள குண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மீது வீசியது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசியது 2 மில்லியன் டன் குண்டுகள். மூன்று மடங்குக்கு மேல் வீசியும் வியட்நாமை அடிபணிய வைக்க முடியவில்லை அமெரிக்காவால்.
58,220 அமெரிக்கர்கள் வியட்நாம் யுத்தத்தில் கொல்லப்படார்கள். 1,50,000 பேர் காயம் பட்டார்கள். 21,000 பேர் நிரந்தரமாக கை,கால் உறுப்புகளை இழந்து சக்கர நாற்காலியில் வாழ்நாள் முழுக்க வலம் வந்தார்கள்.
ஹோ ச்சி மின், படை பலம் மிக்க அமெரிக்கராணுவத்தைவீழ்த்தியது எப்படி?.
தன் மக்கள் அனைவரையும் போராளியாக்கி களத்தில் விட்டார். லட்சக்கணக்கான மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் களத்தில் இறங்கி கொரொனாவுக்கு எதிராக போராடும் போது தொலைக்காட்சியில் மட்டும் மக்கள் முன் தோன்றும் அதிபரல்ல ஹோச்சிமின். மக்களோடு மக்களாய் கலந்து நின்றார். போர் புரிந்தார். வென்றார்.
மக்களை கை தட்டச்சொல்லவில்லை. வெளக்கு பிடிக்க விடவில்லை. விவசாயம் பார்க்கச்சொன்னார். மக்கள் விவசாயம் செய்தார்கள். அமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச்சுட்டார்கள். சுடுவற்கு விவசாயிகள் பயிற்சி பெற்று இருந்தார்கள்.
கெரில்லா யுத்தத்தில் ஹோ ச்சி மின் நிபுணத்துவம் கொண்டிருந்தார்.அமெரிக்கா விமானங்களில் இருந்து பாம் வீசும் போது பதுங்கு குழிக்குள் பதுங்குவர். பதிலுக்கு பாம்புகளை அமெரிக்க ராணுவ முகாம்களில் வீசுவார்கள். அலறி ஓடும் அமெரிக்கர்களை குறி வைத்து சுட்டு பரலோகம் அனுப்பி வைப்பார்கள் வியட்நாமியர்கள்.
விஷத்தவளைகளின் விஷம் தடவிய அம்புகள் பாய்ந்து நொடியில் உயிர் விட்ட அமெரிக்கர்கள் அநேகர். வியட்நாமின் அடர்ந்த காடுகள் கூட அமெரிக்கர்களுக்கு எதிராக சமர் புரிந்தது. அமெரிக்கர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை பார்த்து அமெரிக்காவில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பணிந்தது அமெரிக்கா.
சாமாதானம் பேச வந்த அமெரிக்க படைத்தளபதி மெடல்கள் பளபளக்க ராணுவ உடையில் மிடுக்காக வந்தார். ஹோ ச்சி மின் சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து லுங்கி கட்டிக்கொண்டு ஆயிரம் பொத்தல்கள் நிறைந்த பனியன் அணிந்து வந்தார்.
மாவீரர்களுக்கு_மரணமில்லை ! மக்களை மறந்த கயவர்கள் வாழ்ந்தும் பயனில்லை !! Sugumar Munirathinam
|