Posted By:peer On 9/2/2020 12:44:48 PM |
|
ஒரு மூதாட்டி நடக்க முடியாத தள்ளாத வயது அவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை ... வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட நீதிமன்றத்தை நாடி புகாரளிக்க முடிவு செய்து மாவட்ட நீதிமன்றம் அலுவலகம் வருகிறார்.
படிகளில் ஏற முடியவில்லை படிகளில் அமர்கிறார் நடக்க இயலாமல் தகவல் டவாலி மூலமாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நீதிபதியுமானவருக்கு தகவல் செல்கிறது.
மாவட்ட ஆட்சியர் மாடியிலிருந்து இறங்கி வருகிறார் மூதாட்டி அமர்ந்திருந்த படிகளில் மூதாட்டி அருகே அமர்கிறார்.
அந்த இடம் நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை பரிவுடன் ஆரம்பிக்கிறது.
படிக்கட்டுகளே நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை ஆரம்பமாகிறது ஆட்சியர் ஆவணங்களை கேட்கிறார்
மூதாட்டியும் தனக்கு ஓய்வூதியம் கிடைக்காத ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கிறார். அந்த இடத்திலேயே உடனடியாக விசாரணை செய்து அந்த மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்க தீர்ப்பளிக்கிறார்.
குறிப்பு : இவர் மாவட்ட நீதிபதியும் கூட
மாவட்ட ஆட்சியர் பெயர் : அப்துல் அசீம்
மாவட்டம் : பூபால் பள்ளி
மாநிலம் : தெலுங்கானா
|