ட்டதில் பிடித்தது
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட நிலப்பரப்புக்கு "தீபகற்பம்" என்று பெயர் . இந்தியாவும் ஒரு தீபகற்ப நாடு தான் இதை ஆங்கிலத்தில் " peninsula " என்று அழைக்கப்படுகிறது .உண்மையில் peninsula என்பது தான் தூய தமிழ் வார்த்தை இந்த வார்த்தை லத்தீனில் இருந்து ஆங்கிலம் சென்ற வார்த்தை . லத்தீனுக்கு இந்த வார்த்தை எப்படி வந்தது என்று அவர்களுக்கு தெரியாது . உண்மையில் ஒரு காலத்தில் உலகம் முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ் தான் . தமிழ் பேசியவர்கள் தான் உலகம் முழுக்க பரவி சென்றார்கள் .
பெண்ணின் சூல் என்பது தான் peninsula என்று மாறி இருக்கிறது . சூல் என்றால் கருப்பையை குறிக்கும் . பெண்ணின் கருப்பை வடிவத்தில் இருப்பதால் இந்த பெயர் வந்தது . லத்தீனுக்கும் மூல மொழி தமிழ் தான் . எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள நிலப்பகுதி "சினை peninsula " என்றே அழைக்கப்படுகிறது .சூலம் ( சூல்+அம் ) என்ற ஆயுதத்திற்கு ஏன் அந்த பெயர் வந்தது என்று புரிந்திருக்கும் மூன்று சூலம் உள்ள ஆயுதம் " திரி சூலம் " என்று அழைக்கப்பட்டது .
ஒரு மொழியில் வேர் சொற்கள் ( root words ) தான் முக்கியமானவை . வேர் சொற்கள் மூலமாக தான் மற்ற சொற்கள் வருகிறது .உலகத்தின் அனைத்து மொழிகளுக்கும் உள்ள வேர் சொற்களுக்கு மூலம் தமிழ் மொழி தான் என்பதை மொழி ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதி படுத்தி உள்ளார்கள் . எழுத்தின் மூலத்தை ஆராய்ச்சி செய்வதற்கு " etymology " என்று பெயர், அந்த வார்த்தையும் "எழுத்து மூலம் " என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான் . ( எழுத்து மூலம் = yetti moolam = etymology )
இஸ்ரேல் நாட்டின் சின்னமும் முருகனின் சின்னமும் ஒன்றாகவே உள்ளது . அவர்கள் அதை star of David என்கிறார்கள் . உண்மையில் முற்காலத்தில் மக்கள் இயற்கையை வணங்கினார்கள் மழையை , சூரியனை , தங்கள் இனத்தை பெருக்க உதவிய பால் உறுப்புகளையும் வணங்கினார்கள் ( லிங்க வழிபாடு கூட ஆண் பெண் உறுப்புக்கள் சேர்ந்த நிலையை தான் குறிக்கிறது ). முருகன் இனப்பெருக்கத்திற்க்கான கடவுளும் கூட அதனால் தான் கையில் வேல் உள்ளது . வேல் ஆணின் உயிரணுவின் வடிவத்தை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதம் . இனப்பெருக்கத்திற்கு உதவும் மரத்தை முருகன் + மரம் = "முருங்கை" மரம் என்கிறோம் .
முருகனின் சின்னத்தில் இரண்டு முக்கோணங்கள் உள்ளது . கீழ் பக்கம் கூரான முக்கோணம் பெண்மையை குறிக்கும் மேல் பக்கம் கூரான முக்கோணம் ஆண்மையை குறிக்கும் . David என்ற வார்த்தை தாவிது என்ற ஹீப்ரு மொழி வார்த்தையில் இருந்து வந்தது . தா வித்து என்ற வார்த்தை வித்தை தருபவன் என்று முருகனை குறிக்கும் அதாவது குழந்தை பேற்றை கொடுக்கும் கடவுள் என்று பெயர் . தாவித்து தான் தாவிது ஆகி David ஆகி இருக்கிறது .
முற்காலத்தில் சித்தர்களே நாட்டை ஆண்டார்கள். அரச மரத்தின் கீழ் சதுர் திதியில் ( அமாவசை பொர்ணமி கழித்து வரும் நான்காம் நாள் )ஊருக்கு வந்து மக்களை வழிநடத்தியதால் அவர்கள் அரசர்கள் என்று அழைக்க பட்டனர். அரச மரம் கீழ் ஆட்சி நடத்த பட்டதால் அதை "அரசாட்சி" எனப்பட்டது. அரசு+அங்கம் = அரசாங்கம் என்றவார்த்தையும் வந்தது.
சித்தர்கள் நாட்டை ஆண்டதால் ஆண்டி என்று அழைக்கபட்டனர். சித்தர்களை குறிக்கும் உருவக கடவுளே பிள்ளையார்.பின்பு துறவியாகிய ஆண்டி பிறரிடம் இரந்தே வாழ்வை நடத்தியதால் இன்று அந்த வார்த்தை பிச்சை காரர்களை குறிக்கிறது . ஆனால் ஐரோப்பாவில் Andy என்றால் உயர்ந்த ஆண்மையை குறிக்கும் . இரண்டு ஆண்டியும் ஒன்று தான் இங்கே பிச்சை காரர்களை குறிக்கும் ஆண்டி தான் அங்கே உயர்ந்த ஆண்மையை குறிக்கிறது . Andy என்று தொடங்கும் பெயர்கள் இன்றும் ஐரோப்பாவில் உள்ளது . பெண்களை ஆண்ட்ரியா என்கிறார்கள்.
திருமண நிச்சயத்தை Betrothal என்று இன்று ஆங்கிலத்தில் ஸ்டைலாக சொல்கிறார்கள் ஆனால் அது "பெற்றோர் ஒத்தல்" என்ற தூய தமிழ் வார்த்தை தான் ஆங்கிலமாக மாறி இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
சமஸ்கிரத்திற்கும் தமிழுக்கான சண்டை பல காலமாக நடக்கும் சண்டை . 4000 வருடத்திற்கு முன்பு வந்தவர்கள் ஆரியர்கள் ஆனால் அவர்கள் 11000 ஆண்டுக்கு முன்பு அழிந்து போன குமரிகண்டதில் இருந்து துருக்கி அருகே உள்ள அனதொலியாவிக்கு சென்ற யூதர்கள். பிறகு 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர் கணவாய் வழியாய் இந்தியா வந்தனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் . சிந்து சமவெளி நாகரிகம் கூட தமிழ் நாகரிகம் தான் அந்த நாகரிகத்தை அழித்தவர்களும் ஆரியர்கள் என்ற யூதர்கள் தான் . சமஸ்கிரத்திற்கு மூலம் கூட தமிழ் தான் .
உதாரணமாக அரசன் என்ற வார்த்தை ராசன் ஆகி வடமொழியில் ராஜா ஆகி இருக்கிறது . அவை , சபை ஆகி இருக்கிறது .அரசவை "ராஜ்யசபை " ஆன காரணம் புரிகிறதா . சமஸ்கிருதம் தமிழை விட பழைய மொழி என்ற பொய்யை ஹிந்தி பேசும் மக்கள் வாதிடுகிறார்கள் . ஹிந்தி சமஸ்கிருதத்தில் இருந்து வந்த மொழி என்பதால் இந்த பாசம் உள்ளது . 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இருந்தது என்பதற்கு கீழடியில் ஆதாரம் கிடைத்துள்ளது ஆனால் சமஸ்கிருதம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இதுவரை கிடைக்கவில்லை. கல்வெட்டு ஆதாரமோ அல்லது தொல்பொருள் ஆதாரமோ இல்லாத ஒரு மொழியை பழைய மொழி என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் தான் 200000 வருடத்திற்கு முன் தோன்றினான் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள் ஆனால் சென்னைக்கு 60km துரத்திலில் உள்ள கொசஸ்தலை ( கொற்றலை தான் இந்த கதி ஆகி இருக்கிறது ) ஆற்றின் அருகில் உள்ள ஆட்டரம்பக்கம் என்ற இடத்தில் 384000 ஆண்டு பழமையான கல் கருவிகள் கிடைத்திருக்கிறது . இது மனித வரலாற்றையே மாற்றப்போகிறது .
ஒரு இனத்தின் தொன்மைக்கு சான்றாக புதை பொருள் ஆதாரங்கள் வேண்டும் ஆனால் திட்டமிட்டே சம்ஸ்கிருத ஆதரவு மத்திய ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டில் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் . கீழடி , ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி முடிவுகளை அறிவிக்க கூட காலதாமதம் செய்கிறார்கள் . தமிழின் தொன்மை வெளிவர்கூடாது என்று முயல்கிறார்கள்.ஆனால் எவ்வளவு காலம் ஒரு பழைய மொழியின் வரலாற்றை மறைக்க முடியும் . உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிப்படும் .
வாழ்க வளமுடன்
|