உதுமானிய கிலாஃபத்தின் உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் #ஸிமம்_தஃப்தரி.
வசதி படைத்த உதுமானிய குடிமக்கள் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் கடைகளுக்குச் சென்று இந்தக் கணக்குப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஏழை மக்களின் கடன்களைப் பார்வையிடுவார்களாம். ஏழைகளின் கடன்கள் அனைத்தையும் இவர்களே செலுத்திவிடுவார்களாம்.
இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு என்னவென்றால் இந்தக் கடன்களை அடைத்தது தாங்கள்தாம் என்பது அந்த ஏழைகளுக்குத் தெரியக்கூடாது என்று சொல்லிவிடுவார்களாம்.
கடனைச் செலுத்த முடியாதவர்கள் தர்மசங்கடமான நிலைக்கோ வெட்கத்திற்கோ ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்கள். இரகசியமாகச் செய்யப்படும் தர்மங்களுக்கு இஸ்லாம் இயம்பியிருக்கும் இமாலயச் சிறப்புகளை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்திருந்ததாலேயே இந்த ஏற்பாடு.
இந்த உன்னதப் பாரம்பரியத்தை இன்றும் துருக்கியர்கள் தொடர்கிறார்களாம்.