ஜப்பானைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் நிறுவனம் (AERWINS) ஒரு பறக்கும் பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த பறக்கும் பைக் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் பகுதியில் நடந்த வாகனக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் பைக்கிற்கு
ஹோவர்பைக்(Hover bike) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை ட்ரோன் போன்ற வடிவமைப்பில் தயாரித்துள்ளனர். ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.
மணிக்கு 99 கி.மீ வேகத்தில் பறக்கும். ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இந்த பைக்கின் சிறிய அளவை 2023-ல் அமெரிக்காவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் CEO, Shuhei Komatsu தெரிவித்துள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வாகனக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பறக்கும் பைக்கின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது