
காஸாவைச் சேர்ந்த ஒருவர் மார்க்க அறிஞரிடம் கேட்ட ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) குழந்தைகளுக்கு உணவை சமைக்க எரிவாயு சிலிண்டர் இல்லை. அருகில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரை எடுத்து பயன்படுத்தலாமா? ஆயுள் மீதமிருந்தால் திரும்ப கொடுத்து விடலாம் . ஆனால் அதற்கிடையில் ஷஹீதானால் இது ஒரு குற்றமாக கருதப்படுமா? அல்லது ஷஹாதத்திற்கு கிடைக்கும் நற்கூலியில் பாதிப்பை ஏற்படுத்துமா? Courtesy: Navas Jane
👆🏻👆🏻👆🏻
காஸா மக்களின் ஈமானோடு நமது ஈமானை உரசிப் பார்க்கவேண்டிய நேரம் இது.
சாவின் விளிம்பு நிலையிலும் ஷரிஅத் படி வாழ்க்கை இருக்கவேண்டுமென்ற அக்கறை அவர்களுக்கு....
அத்தியவாசமான நேரத்திலும், அவசரத்திலும், வேறு வழியில்லாத நிலையிலும் அடுத்தவர்களின் பொருளை எடுப்பதற்கு முன் என்னே ஒரு எச்சரிக்கையுணர்வு! சுப்ஹானல்லாஹ்..
அடுத்தவர்களின் பொருளை, பணத்தை, சொத்தை அநியாயமாக அபகரித்துவிட்டு எந்தவித குற்றவுணர்வுமில்லாமல் இருப்பவர்கள் நம்மில் எத்தனைபேர்?
கடன் வாங்கிவிட்டு அந்தக் கடனை கொடுக்கவேண்டுமென்ற எந்தவித உணர்வோ, கவலையோ இல்லாமல் இருப்பவர்கள் நம்மில் எத்தனைபேர்?
இம்மை மறுமை வெற்றியாளர்கள் யார்? நாமா, அவர்களா?
நம்மை நாமே உரசி பார்த்துக் கொள்வோம். மரணம் அவர்களை மட்டுமல்ல, நம்மையுமே எந்த நேரத்திலும் தழுவலாம்.

|