இனி பருவ மழை இல்லை புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள்
இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார் ஐயா நம்மாழ்வார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?
1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் என்னிடம், " இனி உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று சொன்னார் ".
ஏன் என்று கேட்டதற்கு, " உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை அரபிக் கடலிலிருந்து வருகிற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக கீழே இறக்குகின்றன. "
" அந்த மழை நீர் பூமியில் இறங்கி பின்னர் ஆற்று நீராக ஓடுகிறது. அந்த மலையில் உள்ள உயரமான மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரம் உள்ள ‘டீ’ தோட்டம் போட்டுவிட்டீர்கள். "
" உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு, அரபிக்கடலிலிருந்து வரக்கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. "
" அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவமழைக்கு வாய்ப்பே இல்லை’ என்றார். "
" அவர் சொன்ன நாளிலிருந்து உற்று கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதேதான் நடந்து கொண்டிருக்கிறது."
" நான் போகிற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தனை கட்டுரைகளிலும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை " என்று நம்மாழ்வார் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்
India Must Stop Deforesting Its Mountains If It Wants to Fight Floods (thewire.in)
 |