அவசியம் அறிவோமே அண்ணல்நபிமீது அழகியகாதல்..!
அண்ணல் நபி மீது அல்லாஹ்வின் அழகிய காதல்..!
அல்லாஹுதஆலா பெருமானாரை பெயர் சொல்லி அழைத்ததில்லை..! ::::::::::*:::::::::
"அல்லாஹுதஆலா குர்ஆன் ஷரீஃபில் ஒரு இடத்தில்கூட நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் )அவர்களை பெயர் சொல்லி அழைத்ததில்லை!"
யாஆதம்! 2:35 யாநூஹ்! 11:43 யா மூஸா! 27:10 யாயஹ்யா! 10:12 யா ஜகரியா 19:7 யா இப்ராஹீம் 37: 104 105 என்று எல்லா நபிமார்களையும் பெயர் சொல்லி அழைக்கிறான்.
ஆனால் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்கும்போது யாஅய்யுஹன் நபிய்யுஎன்று அழைக்கிறான்.

அண்ணாருக்கு வழிபடுபவர் அல்லாஹுக்கு வழிபடுவதற்கு சமம்..! مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார். அல்குர்ஆன் 4:80
அண்ணல்நபி அழைத்தால் அல்லாஹ் அழைப்பதற்கு சமம்..! يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை வாழ வைக்கிற காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள். அல்குர்ஆன் 8:24
இந்த வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் விளக்கம் சொல்லும் போது
அல்லாஹ்வும் ரஸூலும் அழைத்தால் என்ற வார்த்தை அரபி இலக்கணப்படி பன்மை ஆகும். اِذَا دَعَواكُمْ இதாதஃவாகும் என பன்மையாக தான் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் அல்லாஹ் اِذَا دَعَاكُمْ இதா தஆக்கும் என ஒருமையில் சொல்கிறான்.
அதாவது அல்லாஹ் தன்னையும், தன்ரசூலையும் இணைத்தே சொல்கிறான்.
"தன்னையும் தன் ரசூலையும் வேறுபடுத்தி பார்க்கா வேண்டாம்."
"அவர்களின் அந்தஸ்தை குறைத்து மதிப்பிட்டு சாதாரணமனிதரைப் போன்றுஎண்ணி விட வேண்டாம்.!" என்கிறான்.
அல்லாஹ்வ தொழுவதைவிட அண்ணல்நபியின் அழைப்பேமுக்கியம்..!
"ஒருதடவை சயீத் இப்னு முஅல்லா (ரலி) அவர்கள் தொழுது கொண்டு இருந்தார்கள்."
"அல்லாஹ்வின் ரசூல் அவரை அழைத்தார்கள் அந்த ஸஹாபி தொழுகையை முடித்து விட்டு வந்துபோது.."
அகிலத்தின் அருள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட (8:24) அல்லாஹ்வும் ரசூலும் அழைத்தால் என்ற இறைவசனத்தை ஓதிக் காட்டி
"நீங்கள் தொழுகையில் இருந்தாலும் நான் அழைத்தால் தொழுகையை விட்டு விட்டு வந்தே ஆக வேண்டும்.!" என்றார்கள். நூல்:- புகாரி
அண்ணலார் மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பதற்குசமம்..! وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
எவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உங்களிடம் வந்து மன்னிப்புக் கோரினால் ..
அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால்...
அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 4:64
உயிரைவிட மேலானநபி النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِیْنَ مِنْ أنفُسهِمْ (முஹம்மத்) நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார். அல்குர்ஆன் 33:06
அண்ணல்நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் )அவர்கள் மீது அல்லாஹ்வின் அழகிய காதல்...!
தவ்பா..! ஹஜ்ரத்நபிஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் தடுத்த கனியை சாப்பிட்டதால் 300ஆண்டுகளுக்கு பிறகுதான் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
ஆனால் நபிமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்உம்மத்துக்கு
الندم توبة (ابن ماجه 4252) அன்நத்மு தவ்பா
"செய்த பாவத்தை நினைத்து கவலைப் பட்டாலே அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்.!"
அல்லாஹ்வை பார்த்தல்..! ================== ஹஜ்ரத்நபிமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
ربي ارني انظر اليك قال لن تراني ரப்பி அரினீ அன்ளுரு இலைக்க கால லன் தரானீ
"யா அல்லாஹ்! நான் உன்னை பார்க்க வேண்டும் என்று கேட்டபோது...என்னைப் பார்க்கமுடியாது!"என அல்லாஹ்மறுத்து விட்டான். திருக்குர்ஆன்-(7:143)
ஆனால் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அல்லாவிடம் உன்னைப்பார்க்க வேண்டும் என கேட்கவில்லை."
ஆனால் நபியவர்கள் உம்முஹானி (ரலி) அவர்கள்வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது..."
ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி தூங்கிக் கொண்டிருந்த நபியவர்களை எழுப்பி மிஃராஜுக்கு அழைத்து சென்றுதன்னைக் காட்டினான்..!"
இதயம்..! ================== ஹஜ்ரத்நபிமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பிர்அவ்னிடம் சென்று ஏகத்துவ தீனின்பக்கம் அழைப்பு கொடுக்க சொன்னான்
ஹஜ்ரத்நபிமூஸா அலைஹிஸ்ஸலாம் தங்கள் இயலாமையை சொன்னபோது...
ரப்பிஷ்ரஹ்லீஸத்ரீ யா அல்லாஹ்! என் இதயத்தை விரிவாக்கி வை என்று கேட்க சொன்னான். திருக்குர்ஆன் (20:25)
ஆனால் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு الم نشرح لك صدرك அலம் நஷ்ரஹ் லக ஸத்ரக்... நாயகமே! உங்கள் இதயத்தை நாம் விரிவாக்கி வைத்தோம் என்கிறான். திருக்குர்ஆன் (94:1)
நபிநேசம்..! ================== ان كنتم تحبون الله... இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ.. அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பதாக இருந்தால்...
"என்னைதொழுங்கள் நோன்பு வையுங்கள் ஹஜ் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை"
ஃபத்தபிஊனி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைபின்பற்றி நடங்கள்"என்கிறான். அல்குர்ஆன் ( 3:31)
லைலத்துல்கத்ர்..! ================== பனூஇஸ்ரவேலரில் ஒரு மனிதர் ஆயிரம் போர்களங்களில் கலந்து கொண்டதை நினைத்து என் உம்மத்துக்கு அவ்வளவு வயதில்லையே என நபியவர்கள் கவலைப்பட்ட போது...
اِنّا اَنزلناه.. இன்னாஅன்ஜல்னாஹு சூராவை இறக்கி லைலத்துல்கத்ர் என்ற ஓர் இரவுமட்டும் தொழுதால்போதும் ஆயிரம் ஆண்டுகள் வணங்கியநன்மையை தந்துவிடுகிறேன்!"என அல்லாஹ் சொல்லி விட்டான்.
உன்ளுர்னா...! ================== நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யூதர்கள் ராஇனா என்று கிண்டலாக அழைத்தனர்.
அரபியில் ராஇனா என்பதற்குஇரண்டு அர்த்தம் உண்டு
1) எங்களை கவனித்து வழிநடத்துங்கள்! 2) ஆடுமேய்க்கும் இடையரே!
நபியவர்களை யூதர்கள் 2-வது அர்த்தத்தில் கிண்டலாக அழைத்தனர்
உடனே அல்லாஹுதஆலா குர்ஆன் ஆயத்தை இறக்கி விட்டான்.
ياايها الذين امنوا لا تقولو ا راعنا وقولوا انظرنا
ஈமான்கொண்டவர்களே என் ஹபீபாகிய நபியவர்களைப் பார்த்து ராஇனா என்று சொல்லாதீர்கள்.
உன்ளுர்னா (அன்புடன் பார்ப்பீர்களாக!) என்று சொல்லுங்கள். திருக்குர்ஆன் (2:104)
சாபம்...! ================== ஒருதடவை அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைபார்த்து அபூலஹப் தப்பன் லக யாமுஹம்மத் முஹம்மதே! நீ நாசமாக போக! எனசொல்லி மண்ணைவீசினான் (நவூதுபில்லாஹ்)
உடனே அல்லாஹுதஆலா தப்பத் யதா அபீலஹபிவ் அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமடைவதாக!என குர்ஆன்ஆயத்தை இறக்கிவிட்டான்.
அவன்தான் பைத்தியம்...! ================== ஒருமுறை நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைபார்த்து வலீதுப்னு முகைரா என்ற கொடியவன்
انت مجنون அன்த்த மஜ்னூன் நீங்கள் பைத்தியம் என்றான்.
உடனே அல்லாஹுதஆலா ما انت بنعمت ربك بمجنون
நாயகமே! நீங்கள் பைத்தியக்காரரல்ல அவன் தான் பைத்தியம் என ஆயத்தை இறக்கி விட்டான் (குர்ஆன்-68:2)
|