1. அவன் நமக்கு செல்வத்தை அளித்ததால்? 2. அவன் நமக்கு ஆரோக்கியத்தை கொடுத்ததால்? 3. அவன் எங்களுக்கு சக்தி கொடுத்ததால்? 4. அவன் நமக்கு குழந்தைகளைக் கொடுத்ததால்? 5. ............?
இது அல்லாஹ் நம்மை நேசிக்கிறான் என்று அர்த்தமா? இல்லை
இறையை நேசிக்கும் பேரறிஞர் ஒருவர் சொன்னார்:
"நான் யோசித்தேன், அல்லாஹ் என்னை நேசிக்கிறானா"
எனவே, குர்ஆனில், அல்லாஹ் நேசிப்பவர்களை பற்றி அவன் குறிப்பிட்டுள்ள பண்புகள் என்ன என்பதைப் பார்ப்பதற்காக நான் தேடினேன்..
அல்லாஹ் "அல் முத்தகீன்" களை (பயபக்தியுடையவர்கள்) நேசிக்கிறான் என்று நான் கண்டேன்.
அதனால் "நான் துணிவு கொள்ளவில்லை அவர்களில் ஒருவராக என்னை கருதுவதற்கு"
அதனால் நான் தொடர்ந்து தேடினேன் ....
பின்னர் அல்லாஹ் "அஸ்-சாபிரீன்"களை (பொறுமையுடையவர்களை) நேசிப்பதை நான் கண்டேன். அதனால் நான் நினைவு கூர்ந்தேன்: "நான் எவ்வளவு பொறுமையில்லாதவனாக இருக்கிறேன்."
அதனால் நான் தொடர்ந்து தேடினேன் ....
பின்னர் அல்லாஹ் "அல்-முஜாஹிதீன்"களை (அவனது பாதையில் போராடுபவர்களை) நேசிக்கிறான் என்று நான் கண்டேன். அதனால் நான் நினைவு கூர்ந்தேன்: "நான் எவ்வளவு சோம்பேறி மற்றும் பலவீனமாக இருக்கிறேன் என்று."
அதனால் நான் தொடர்ந்து தேடினேன் ....
பின்னர் அல்லாஹ் "அல்-முஹ்ஸினீன்"களை (நன்மை செய்பவர்களை) நேசிப்பதை நான் கண்டேன். அதனால் நான் நினைவு கூர்ந்தேன்: "நான் அதிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறேன் என்று."
பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன்.
பின்னர் என் மனதில், அல்லாஹ் "அத்-தவ்வாபீன்"களை (பாவமன்னிப்பு தேடுபவர்களை) நேசிக்கின்றான் என்று எண்ணினேன். இது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பொருத்தமானது.
எனவே, "அஸ்தஹ்பிருல்லாஹ் வ-அதூபு இலைஹ்" என்று ஏராளமாக ஓத ஆரம்பித்தேன் மற்றும் என் அமல்களை சரி செய்ய ஆரம்பித்தேன்.
அதனால் அல்லாஹ் நேசிக்கும் ஒருவர்களில் நானும் ஒருவனாக ஆகி விடவேண்டும் என்பதற்க்காக.
நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு தேடி அல்லாஹ் நேசிப்பவர்களில் ஒருவனாக ஆகுவதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக...!!
ஆமீன். அல்லாஹூம்ம ஆமீன்.
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம். |