Posted By:peer On 10/17/2025 8:02:49 AM |
|
இதயத்திலிருந்து வெளியான இரங்கல் குறிப்பு...
சாலக்குடி அருகே சேனத்துநாடு மறைந்த முஸ்தபா மனைவி 89வயது ஹயருன்னிஸா நேற்று வஃபாத் ஆனார். அவரது மரணத்தையொட்டி மலையாள கதகளி கலைஞர், நடிகர்
ராமகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய இரங்கல் குறிப்பு வைரலாகி வருவதுடன்,சில வருடங்கள் முன்பு மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் வளர்ப்பு தாய் ஹயருன்னிஸா என்பதும் தெரிய வந்துள்ளது..
"" எங்கள் சிறுவயதில் யாருமில்லாத எங்களை ஆரத்தழுவி அரவணைத்தவர் ஹயருன்னிஸா உம்மா. எனக்கும் என் சகோதரர் மணிக்கும் வயிறு நிறைய உணவு தந்து ஆதரவு காட்டியுள்ளார்.
தங்களின் ஏழு பிள்ளைகளுடன் எங்கள் இருவருக்கும் ஒருபோல சினேகம் தந்து வளர்த்தவர் உம்மா. எனது சிறு பிராயத்தில் உம்மாவை சுற்றியே எப்போதும் இருப்பேன்.
ரேஷன் கடைக்கு செல்லும் போதும் சாலக்குடி சந்தைக்கு செல்லும் போது என்னையும் கையில் பிடித்தவாறு செல்வார் ஹயருன்னிஸா உம்மா..
உம்மாவின் மூத்த மகன் சைலாப்தீன் ஓட்டிய ஆட்டோ தான் கலாபவன் மணி முதன் முதலாக ஓட்டி பழகியது. மணி பின்னர் மிமிக்ரி கலைஞராக, சினிமா நடிகராக வலம் வந்தாலும் நாங்கள் எங்கு செல்லும் போதும் உம்மாவை சந்தித்து சொல்லி விட்டு போவதுண்டு.. அதுபோல நாங்கள் திரும்பி வந்தபிறகு எங்களை அழைத்து விபரங்கள் கேட்பார் உம்மா
எங்களை போற்றி வளர்த்த உம்மா மரணித்து விட்டார்...இனி யாரிடம் சொல்லி விட்டு பயணம் செய்வேன். குடும்ப உறவின் ஒவ்வொரு கண்ணியாக கழன்று செல்கிறது...""
என்று ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்..
ஹயருன்னிஸா உம்மாவுக்கு
அல்லாஹ் மஃபிறத் அருள்வானாக
நன்றி: Colachel Azheem
~~~~~~~~~~~~~
பாஜக வருவதற்கு முன் நாம் எல்லாம் இப்படி தான் இருந்துள்ளோம் என்று இவர்கள் வந்தார்களோ மக்களிடம் வெறுப்பை ஊட்டி பிரிக்க ஆரம்பித்தார்கள்...

|