Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மன அமைதியும் ஒரு அருட்கொடையே
Posted By:peer On 4/11/2026 7:05:15 AM

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை தங்களது தோழர்களிடையே இருந்தபோது, அவர்கள் செல்வத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்."

உண்மையான விசுவாசியின் பண்புகள்:

  • உங்களுக்கு ஒரு நோய் வந்தால், நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு ஒரு அருட்கொடை (நன்மை) கிடைத்தால், நீங்கள் நன்றி செலுத்துபவராக இருக்க வேண்டும்.
  • உங்களுக்குப் பிரியமான ஒருவரை நீங்கள் இழந்தால், இறைவனின் நாட்டம் என்று அவனிடமே ஒப்படைத்துவிட வேண்டும்.
  • உங்களது வாழ்வாதாரம் (ரிஸ்க்) நெருக்கடியானால், கண்ணியமிக்க இறைவன் ஏதோ ஒரு ஞானத்திற்காகவே அதைத் தடுத்திருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
  • ஒரு அழகான வீட்டைக் கண்டால், அதன் உரிமையாளருக்காக அபிவிருத்தி (பரகத்) வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும்.
  • ஒரு ஆடம்பரமான காரைக் கண்டால், பொறாமை கலந்த பார்வையுடன் பார்க்காமல், அதன் உரிமையாளருக்கு இறைவன் நற்பேற்றை (தவ்பீக்) வழங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
  • ஒரு தம்பதியினரிடையே அன்பையும் நெருக்கத்தையும் கண்டால், அவர்களுக்கு அந்த அன்பை இன்னும் அதிகமாக்க இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
  • உங்களைத் தவிர மற்றவருக்கு ஒரு வேலை (உத்தியோகம்) கிடைத்தால், அதில் அவருக்கு உதவி செய்யுமாறு இறைவனிடம் வேண்ட வேண்டும்.

பிறர் மீது அன்பு கொள்வது என்பது ஒரு சிறந்த போராட்டமாகும் , அது அனைவராலும் முடிந்துவிடாது.

நீங்கள் எப்போது இப்படியான மனப்பக்குவத்தைப் பெறுகிறீர்களோ, அப்போது துயரங்கள் உங்களைப் பாதிக்காது.

ஏனெனில், உங்கள் சொர்க்கம் உங்கள் இதயத்திற்குள்ளேயே இருக்கிறது!

رسائل من النبي صلى الله عليه وسلم أدهم شرقاوي

தமிழில் : ஆவூர் இஸ்மாயில் ஹஸனீ






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..