UNBOWED - A Revolutionary Champion
முகம்மது அலி — ரிங்கிற்குள் ஒரு சாம்பியன். ரிங்கிற்கு வெளியே ஒரு குரல்.
முகம்மது அலி — 🥊 18 வயசுல ஒலிம்பிக் தங்கப் பதக்கம்… 🥇 22 வயசுல Sonny Liston-க்கு எதிரான வெற்றி… உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம்…
ஆனா, அவருடைய மிகப்பெரிய fight ரிங்கிற்கு வெளியே நடந்தது.
உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராக மட்டும் அவர் நினைவுகூரப்படவில்லை.
அமெரிக்காவில் இனவெறி கொடுமைகள் உச்சத்தில் இருந்த காலம்… சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய இஸ்லாமிய நம்பிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, Cassius Clay இஸ்லாத்தைத் தழுவினார்.
அதன்பிறகு, “Cassius Clay” என்ற பெயரை ஏற்க மறுத்தார்.
அது அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கருதி…
தன் பெயரை “Muhammad Ali” என்று மாற்றிக்கொண்டார்.
அந்த காலத்தில் அவருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர் Malcolm X.
அவர்களுடைய நட்பு, அலியின் சுயமரியாதை, கறுப்பின மக்களின் உரிமைகள் மற்றும் இனவெறிக்கு எதிரான அவரது குரலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அலி தனது புகழையும் குரலையும் தனக்காக மட்டும் பயன்படுத்தவில்லை.
இனவெறிக்கும், அநீதிக்கும் எதிராக வெளிப்படையாகப் பேசினார்.
வியட்நாம் போரில் கலந்து கொள்ள மறுத்தபோது, தனது உலக சாம்பியன் பட்டத்தையும் பாக்ஸிங் லைசன்ஸையும் இழந்தார்.
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் பாக்ஸிங்கிலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனா… தன்னோட கொள்கையை மட்டும் இழக்கவில்லை.
பின்னர், அவரது தண்டனை தீர்ப்பை அமெரிக்க Supre Court ஒருமனதாக ரத்து செய்தது.
மீண்டும் வந்தார். மீண்டும் சாம்பியனானார். மீண்டும் உலகையே வியக்க வைத்தார்.
அவருடைய resilience, courage, conviction and comeback இன்று வரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு motivational story.
அவர் ரிங்கில் ஒரு சாம்பியன்… ரிங்கிற்கு வெளியே ஒரு போராளி.
அவருடைய உடல் ரிங்கில் போராடியது. அவருடைய குரல், ரிங்கிற்கு வெளியே அநீதிக்கு எதிராகப் போராடியது.
அதனால்தான்… முகம்மது அலி ஒரு சாம்பியனைத் தாண்டி, ஒரு உலகளாவிய அடையாளமாக மாறினார்

 |