Posted by Hassan Abdul Kader
(hasan) on 8/22/2009
|
|||
திரிபோலி:கடுமையான புற்று நோயைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து சிறையிலிருந்து விடுதலைச்செய்யப்பட்ட லோக்கர்பி விமான விபத்திற்கு காரணமான குற்றவாளி என்று கருதப்படும் அப்துல் பாஸித் அல் மக்ராபிக்கு திரிபோலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லிபியா மற்றும் ஸ்காட்லாந்து கொடிகளை ஏந்திய நூற்றுக்கணக்கான நபர்கள் திரிபோலி விமான நிலையத்தில் மக்ராபியை வரவேற்றனர். கடுமையான ப்ரோஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோயைத்தொடர்ந்து மனிதநேய அடிப்படையில் மக்ராபியை கிரிநோக் சிறையிலிருந்து ஸ்காட்லாந்து அதிகாரிகள் விடுவித்தனர். சிறையிலிருந்து வெளியே வரவும், வாழ்வின் எஞ்சிய காலத்தை சொந்தநாட்டில் கழிக்கவும் வாய்ப்பு கிடைத்தது ஆசுவாசமளிப்பதாக மக்ராபி கூறினார். 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி 270 பேரின் மரணத்திற்கு காரணமான விமானவிபத்தில் மக்ராபி குற்றவாளி என்று ஸ்காட்லாந்து நீதிமன்றம் 2001 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.ஆனால் மக்ராபியின் தரப்போ மக்ராபி குற்றமற்றவர் என்றும் விசாரணை கேலித்தனமானது என்றும் கூறியிருந்தது.1986 ஆம் ஆண்டு அமெரிக்கா திரிபோலியின் மீது நடத்திய குண்டுவீச்சிற்கு பதிலடியாகத்தான் இந்த விமான விபத்து நடந்ததாக அன்று குற்றச்சாட்டு எழுந்தது.பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை புறக்கணித்துதான் ஸ்காட்லாந்து மக்ராபியை விடுவித்தது. குற்றவாளியான மக்ராபிக்கு ராஜவரவேற்பு அளிக்கப்பட்டதற்கு பிரிட்டன் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதேவேளையில் லோக்கர்பி விமானவிபத்தின் உண்மையான விபரங்கள் வெளிவராமலிருக்கத்தான் தந்திரமாக மக்ராபியை விடுதலைச்செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக அப்பீல் செய்யப்பட்டால் மக்ராபி நிரபராதி என்று தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதால் அமெரிக்காவும்,பிரிட்டனும் சேர்ந்து முயற்சி மேற்க்கொண்டு மக்ராபியின் விடுதலைக்கு உதவியதாக லண்டனில் வசிக்கும் லிபியாவைச்சார்ந்த எழுத்தாளரும்,அரசியல் விமர்சகருமான ஜமால் கமாத்தி கூறுகிறார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |