Posted by Hassan Abdul Kader
(hasan) on 8/22/2009
|
|||
உலகளாவிய அளவில் வாழும் முஸ்லிம் சமூகம் இவ்வாண்டும் வழக்கம்போலவே ரமலானை துவக்குவதில் ஒன்றிணையவில்லை. உலகளாவிய அளவில் வாழும் முஸ்லிம்கள் ரமலானை துவங்கும் விபரம் வருமாறு:
ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை ரமலானை துவங்கும் நாடுகள்:துருக்கி (விஞ்ஞான கணக்கீட்டின் அடிப்படையில்)
துருக்கியை பின்பற்றும் நாடுகள்: கொஸாவா, மாஸிடோனியா, போஸ்னியா, ஹெர்சிகோவினா,செர்பியா,பல்கேரியா,மோன்டினீக்ரோ,அல்பேனியா, ஸ்லோவேனியா,ஜெர்மனி , ரஷ்யா, இத்தாலி,லிபியா,லெபனான் மற்றும் ஈராக்கில் வாழும் ஷியா முஸ்லிம்கள் ஐரோப்பிய ஃபத்வா மற்றும் ஆய்வுக்கான கவுன்சில் விஞ்ஞானக்கணக்கீட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை ரமலான் துவங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை தலைமையிடமாகக்கொண்ட ஹிஜ்ரா கமிட்டி ரமலான் வெள்ளிக்கிழமை துவங்குவதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 சனிக்கிழமை ரமலானை துவங்கும் நாடுகள்: சவூதி அரேபியா,கத்தார்,குவைத்,எகிப்து,பஹ்ரைன்,ஐக்கிய அரபு அமீரகம், சிரியா,லெபனான்,ஃபலஸ்தீன்,ஜோர்டான்,சூடான்,யெமன், ஈராக், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,மலேசியா,சீனா,சிங்கப்பூர், ஃபிரான்ஸ், பெல்ஜியம்,ஸ்பெயின்,ஸ்விட்சர்லாந்து,வடக்கு அமெரிக்க இஸ்லாமிக் சோசைட்டி, இந்தியாவில் கேரளா. பாகிஸ்தான்,இந்தியா,பங்களாதேஷ்,ஒமான்,மொராக்கோ,மாரிடோனியா ஆகிய நாடுகள் இன்று இரவு தான் பிறையை பார்த்து முடிவுச்செய்வதாக அறிவித்துள்ளன. முஸ்லிம் சமூகத்தில் பிறை கணக்கிடுவதற்கு தற்போது மூன்று விதமான அபிப்ராயங்கள் நிலவுகின்றன.1.பிறையை அந்த பகுதிகளில் பார்த்து முடிவுச்செய்வது 2.சவூதி அரேபியாவின் கருத்தை ஏற்றுக்கொளவது 3.விஞ்ஞான கணக்கீட்டின் அடிப்படையில் முடிவுச்செய்வது. இத்தகைய சூழலில் இந்த கருத்து வேறுபாடுகளை களைய உலகளாவிய அளவிலான முஸ்லிம் மார்க்க அறிஞர்களும்,முஸ்லிம் வானியல் ஆய்வாளர்களும் ஒன்றிணைந்து 3 தரப்பினரின் கருத்துக்களை ஆய்வுச்செய்து இறுதியான முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலகளாவிய அளவில் வாழும் முஸ்லிம்களின் விருப்பம். இதற்கான முயற்சியில் முஸ்லிம் சமூகத்தில் யார் ஈடுபடப்போகிறார்கள்? 0 கருத்துரைகள் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |