Posted by Kashif
(sohailmamooty) on 8/27/2009
|
|||
சோமாலியாவில் பாதிபேரும் பட்டினியில்:ஐ.நா
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சோமாலியாவிலுள்ள பாதிபேரும்(ஏறத்தாழ 37.6 லட்சம்பேர்)மனிதநேய உதவிகளை சார்ந்து வாழ்வதாக சோமாலியாவுக்கான ஐ.நாவின் உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு யூனிட்(Somalia Food Security and Nutrition Analysis Unit) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. வடக்கு மற்றும் மத்திய சோமாலியாவில்தான் இந்த பிரச்சனை அதிகளவில் உள்ளது.சோமாலியாவில் நடைபெற்றுவரும் மோதல்கள் மனிதநேய நடவடிக்கைகளை பாதித்துள்ளதாக S.F.S.N.A.U பகுப்பாய்வுத்தலைவர் சிண்டி ஹோல்மேன் கூறுகிறார். சோமாலியாவில் 5ல் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டை சந்திக்கிறது.ஒட்டுமொத்தமாக சோமாலியாவில் 3 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் காரணமாக மரணத்தின் பிடியை நோக்கிச்செல்கின்றனர்.இந்த வருடம் துவக்கத்தில் அகதிகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக(14.2லட்சம்)உயர்ந்துள்ளது.சோதனைக்குமேல் சோதனையாக சோமாலியாவின் மத்திய பகுதி வறட்சியின் பிடியிலும் சிக்கியுள்ளது.கடந்த சில வருடங்களாக மழை பெய்வது குறைந்ததின் காரணமாக இந்த வறட்சி ஏற்பட்டுள்ளது.சோமாலியாவின் 75 சதவீத மக்களும் மனிதநேய பிரச்சனையின் அவசர நிலையிலுள்ளதாக ஐ.நா வின் அறிக்கை கூறுகிறது.இவ்வேளையில் ஐ.நா பொதுச்செயலாளரின் சோமாலியாவுக்கான சிறப்பு தூதர் அஹ்மதோ அவுத் அப்துல்லாஹ் புனித ரமலானை முன்னிட்டு எல்லா சோமாலியா மக்களும் சமாதான முயற்சிகளில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.
http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_5860.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |