Posted by Kashif
(sohailmamooty) on 8/31/2009
|
|||
கஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால் மக்களை அழைக்கின்றோமோ அது இறைவனின் கொள்கை. இந்தக் கொள்கை ஈடிணையற்றது. நாம் சட்டமெனக் கூறுவது இறைவனின் சட்டமாகும். இந்த இறைவனின் கொள்கைக்கு, இந்த சட்டத் திற்கு இணையான ஒரு கொள்கையோ சட்டமோ உலகத்திலுமில்லை, வானத் திலுமில்லை.இன்று இந்த உலகம் இந்த சட்டத்திற்காகவும் இந்தக் கொள்கைக் காகவும் இந்த நீதிக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. இன்று நமது பாதை தெளிவாகிவிட்டது. சூழ்நிலையும் நமக்கு சாதகமாகவே இருக்கின் றது. போற்றத்தக்க விதத்தில் இந்தப் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொண்ட நாம் சுய நலமற்றவர்களாக, ஏன் இந்த உலகத்திலேயே எந்தக் கைமாறும் எதிர்பார்க்காதவர்களாக இருக்கின்றோம்.இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். நாம் இறைவனின் திருப்தியொன்றையே கைமாறாக எதிர்பார்க்கின்றோம். நாம் இறைவனின் நல்லடியார்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஒன்றையே நாடுகின்றோம். எமது உழைப்பும் வியர்வையும் இறைவனுக்காகவே. நாம் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றோம். அவனது உதவியை மட்டுமே நாடுகின் றோம். அவனுடைய உதவியைப் பெற்றுவிட்ட எம்மை இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் வெற்றி கொள்ள முடியாது. இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்௪) |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |