Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/2/2009
|
|||
ஆன்மாவை சுத்திகரித்து நம் ஆத்மீக வாழ்வை பலப்படுத்த ஆண்டிற்கொருமுறை நம்மிடம் வரும் கண்ணியமிக்க விருந்தாளி ரமலான்.
இந்த புண்ணிய மாதத்தை உலகில் வாழும் முஸ்லிம்கள் ஒரே முறையிலா பேணுகின்றார்கள்? பதில் இல்லை என்பதுதான்.வெளிநாடுகளில் ரமலான் விசேஷங்கள் பலவும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வெளிநாடுகளில் ரமலான் விசேஷங்கள் பற்றிய சிறியதொரு ஆன்மீக பார்வையை செலுத்துவோம். வடதுருவத்தில் ஐரோப்பிய பால்டிக் பிரதேசத்தின் ஸ்காண்டிநேவியன் நாடான ஃபின்லாந்தில் முஸ்லிம்கள் சூரியன் ஒளிவீசிக்கொண்டிருக்கும்பொழுதுதான் நோன்பை திறக்கிறார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.இன்னும் கேளுங்கள் சில சமயங்களில் அவர்கள் ஸஹ்ர் சாப்பிடுவது சூரியன் நடு உச்சியில் இருக்கும்பொழுது. காரணம் அப்பிரதேசத்தில் இரவு பகல் மாறி மாறி வருவதில்லை. வட துருவத்திற்கு மிக அருகிலிருக்கும் ஃபின்லாந்தில் கோடைகாலத்தில் பகல் 24 மணி நேரமும், குளிர்காலத்தில் இரவு 24 மணிநேரமும் நீடிக்கும்.சில வேளைகளில் கோடைகாலத்தில் 45 நாள்கள் இரவு ஏற்படாது. சூரியன் மறையாமல் 45 நாள்கள் நீடிக்கும்.குளிர்காலத்தில் 45 தினங்களும் இருளாகயிருக்கும்.இதற்கிடையேதான் அந்த நாட்டில் வாழும் 6 ஆயிரத்திற்குமேற்பட்ட முஸ்லிம்களுக்கிடையே ரமலான் கடந்து வந்தது. இரவுகள் இல்லாத தினங்களில் அவர்கள் குறைந்தபட்சம் அருகிலிலுள்ள முஸ்லிம் நாடான துருக்கியின் நேரத்தை கணக்கிட்டு பகல் நேரத்தில் நோன்பு திறக்கின்றார்கள்.இதனடிப்படையிலேயே நேரத்தை கணக்கிட்டு ஸஹ்ர் உணவும் உண்கின்றார்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |