சவுதி ரியாத்தில் வேலை செய்யும் இடத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் தமிழகத்தை சார்ந்த ரவி ராமையன் என்பவர் உடல் பாதிக்கப்பட்டார் முறையான சிகிச்சையின்றி பாதிக்கப்பட்ட அவரை ரியாத்தில் செயல்படும் சமூக நல அமைப்பான இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் அவருடைய சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்து அவரை பத்திரமாக தாயகம் அனுப்பிவைத்தது.
இது பற்றி இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில் "கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு நஜ்ரானில் வீட்டு வாகனஓட்டுனர் வேலைக்கு வந்த கன்னியாக்குமரி மாவட்டத்தைச்சார்ந்த ரவி ராமையன் என்பவர் சவுதி முதலாளியிடம் வேலைப்பார்க்காமல் ஓடி வந்து ரியாதில் வீட்டுகட்டுமானப்பணிகள் வேலை செய்துவந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏணியிலிருந்து பெயிண்ட் அடிக்கும்போது தவறி கீழே விழுந்து விட்டார் இதில் அவரது கை மற்றும் இடுப்பு எழும்புகள் முறிவு ஏற்ப்பட்டு நடக்க உட்கார முடியாமல் அவதிப்பட்டுவந்தார் ரியாத் பத்ஹாவிலுள்ள ஷஃபா மக்கா பாலிகிளினிக்கில் தற்காலிக சிகிச்சையளித்து அவரது நண்பர்கள் ரூமில் தங்கவைத்துஇருந்தனர், அவரிடம் அக்காமா இல்லாததால் அவரை மேல் சிகிச்சைக்கு அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் அவரது நண்பர்கள் நம்மை ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் தொடர்புகொண்டு உதவும்படி கேட்டுக்கொண்டனர் நாமும் அவரது சவுதி முதலாளியை தொடர்பு கொண்டு பேசி அவர் ஊருக்கு செல்வதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துக்கொடுத்தோம் அதற்குண்டான தொகையினை (உரூஃப் திரும்பப்பெறுதல், மற்றும் இக்காமா அபராதத்தோடு புதுப்பித்தல் பாஸ்போர்ட்டில் எக்ஜிட் விஷா அடிக்க) அவரது நண்பர்கள் பழக்கப்பட்டவர்கள் மூலம் வசூலித்து சவுதி முதலாளியிடம் கொடுத்தோம் என்பதனையும் மேலும் அவர் தாயகம் செல்வதற்க்கு தேவையான விமான டிக்கட் தொகையினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தம்மை தொடர்பு கொள்ளும்படியும் கடந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தோம் ஆனால் அத்தொகை நமக்கு கிடைக்காதநிலையில் அவரது உடல்நலம் கருதி, அவரை தாமதிக்காமல் ஊருக்கு அனுப்பவேண்டும் என்பதால் நாம் நம்முடைய சொந்தப்பணத்தில் அவருக்குத்தேவையான டிக்கட் ஏர்இந்தியா வில் எடுத்து கடந்த 26 ஆகஸ்ட் 2009 அன்று தாயகத்திற்க்கு அவரை அனுப்பிவைத்தோம்". என்றார்.
இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் என்ற இந்த சமூக நல அமைப்பு பல்வேறு சமுதாய நலப்பணிகளையும்,சமுதாய தொண்டுகளையும் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.