Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/8/2009
|
|||
வாஷிங்டன்:ஃபலஸ்தீனர்களை கடத்திச்சென்று அவர்களின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேலின் அராஜகத்தை வெளிக்கொண்டுவந்த ஸ்வீடன் நாட்டுப்பத்திரிகையையும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வீடன் அரசையும் அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது. இஸ்ரேலின் இந்த கொடுங்கோன்மைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா இந்த செய்தியின் பின்னணியில் யூத விரோதம்தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு கமிஷன் தலைவரும், அமெரிக்க செனட்டருமான பென் கார்டின் கூறுகையில், ஆஃப்டன்பிளேடட் என்ற ஸ்வீடன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இனவெறிதான் முன்னிறுத்தப்படுகிறது என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஸ்வீடன் பத்திரிகையில் வந்த செய்திக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்வீடன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆஃப்டன் பிளேடட் பத்திரிகையில் சுதந்திர செய்தியாளரான டொனால்ட் போஸ்ட்ரம் They Plunder the organs of our sons என்ற செய்திக்கட்டுரையை வெளியிட்டிருந்ததற்கு இஸ்ரேல் அதிகாரிகள் அந்நாட்டு பிரதமரிடம் இச்செய்திக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டினர். ஆனால் ஸ்வீடன் பிரதமர் ஃப்ரட்ரிக் ரீன்ஃபெல்ட் பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறி இச்செய்திக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டார். செய்தி:தேஜஸ்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |