Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/8/2009
|
|||
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் FDI(Foreing Direct Investement) என்ற பத்திரிகை இந்த ஆண்டிற்கான Asian Personality Award என்ற விருதை குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திர மோடிக்கு வழங்கப்போவதாக அறிவித்தது. 2002 ஆம் ஆண்டு மோடி தலைமையில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தெருக்களில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன அழித்தொழிப்பிற்கு இரையானார்கள்.சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முஸ்லிம்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்திய தேசம் சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை கண்டிராத இந்த கொடூரத்திற்கு முக்கிய சூத்திரதாரி நரேந்திரமோடி என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமான உண்மை. கடந்த 7 வருடங்களாக இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியும் சட்டத்தையும் நீதித்துறையும் ஏமாற்றிவந்த மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் குஜராத் இனஅழித்தொழிப்பிற்கு காரணமான 64 நபர்கள் மற்றும் மோடியிடமும் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு(S.I.T) உத்தரவிட்டது. "மோடியின் கண்காணிப்பின் கீழில்தான் முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுப்படுகொலைகள் நிகழ்ந்தது.இவ்வளவு அக்கிரமங்கள் நிகழ்ந்தபிறகும் மோடி தொடர்ந்து குஜராத்தின் முதல்வராகத்தான் இருந்துவருகிறார். இந்நிலையில் விருதினை மோடிக்கு பதிலாக குஜராத் அரசிற்கு வழங்குவது என்பது ஹிட்லருக்கு பதிலாக நாசி இயக்கத்திற்கு விருது வழங்குவது போன்றதாகும்" என்று அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் ரஷீத் அஹ்மத் கூறுகிறார். மேலும் அவர் தெரிவிக்கையில், "2002 குஜராத் இன அழித்தொழிப்பில் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் முகாமில் அல்லலுற்று வருகின்றனர். இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிரான வழக்கில் மோடி தலைமையிலான குஜராத் அரசு தொடர்ந்து பலத்தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்" . 2005 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு குஜராத்தில் மோடி தலைமையிலான பாசிச பயங்கரவாதிகள் நட்த்தைய முஸ்லிம் இன படுகொலைகளை காரணம் காட்டி நரேந்திரமோடிக்கு விசா தர மறுத்தது.சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல்வாதிகள் மத ரீதியான பாரபட்சத்தை கைவிடாவிட்டால் மீண்டும் 2002 இனப்படுகொலை திரும்பவும் நடப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் இது இந்தியாவின் மத சகிப்புதன்மையற்ற நிலையை படம்பிடித்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளது. ஐ.நா சபையால் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைப்பற்றிய அறிக்கையை தொகுத்தளிக்க நியமிக்கப்பட்டுள்ள அஸ்மா ஜஹாங்கீர் கூறுகையில் 2002 குஜராத் படுகொலைகளுக்குபின் தொடர்ந்து நடைபெற்றுவரும் கடும் விளைவுகளை முஸ்லிம் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் தன்னிடம் பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். மோடி தலைமையிலான குஜராத் அரசு வெளிநாட்டு முதலீடுகளை கவருவதாக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட்டாலும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் டியொன்னே புன்ஷா மற்றும் தி மின்டின் ஸலீல் திருப்பதி ஆகிய பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமாக மேற்க்கொண்ட சுதந்திரமான ஆய்வறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால் குஜராத்தில் மோடி முதல்வராக பதவியேற்றபின்புதான் வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்திற்கு வருவதில் தொடர்ந்து சரிவை சந்தித்துவருவதாக குறிப்பிடுகின்றனர். இதனை அமெரிக்காவில் 10 கிளைகளைக்கொண்ட அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |