திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததருக்காக காத்திருக்கும் பரிசுக்குவியல்கள்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் மீது ஷுவை வீசியெறிந்த பத்திரிகையாளர் முன்ததர் அல் ஸைதிக்காக பரிசுக்குவியல்களும் வெகுமதிக்கான வாக்குறுதிகளும் காத்திருக்கின்றன.
அதிபரின் மன்னிப்பைத்தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததிருக்கு கார்களும், வீடுகளும், கோடிக்கணக்கான டாலர்களும் பரிசாக தருவதான வாக்குறுதிகளுடன் ஏராளமானோர் களத்திலிறங்கியுள்ளனர். வேறு சிலரோ தங்களுடைய பெண்மக்களையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர். முன்ததிர் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த ஸ்தாபனமான அல்பக் தாதிய்யாவின் உரிமையாளர் முன்ததிருக்காக கார் வாங்கியதுடன் ஒரு அழகான வீட்டையும் கட்டிவைத்துள்ளார். முன்பு முன்ததிரின் மருத்துவ செலவுகளையும் இத்தொலைக்காட்சி சானலே கவனித்துவந்தது. மொராக்கோவில் வசிக்கும் ஈராக்கைச்சார்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளை முன்ததிருக்கு திருமணம் முடித்துக்கொடுக்க தயார் என்று அறிவித்துள்ளதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியைச்சார்ந்த குடிமகன் ஒருவர் முன்ததிருக்கு ஒரு கோடி டாலர்(48கோடி ரூபாய்) தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஃபலஸ்தீன் பெண்கள் பலரும் முன்ததிரை திருமணம் முடிக்க தயாரென்றும் அவர் விடுதலையானால் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக தி கார்டியன் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜார்ஜ் w புஷ் தனது கடைசி பயணமாக ஈராக்கிற்கு வந்தபொழுது அதிபர் நூரிமாலிக்குடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அவ்வேளையில் ”நாயே இது உனக்கு விடைபெறும் நாளிற்கான பரிசு. ஈராக்கில் அநாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் விதவையாக்கப்பட்ட பெண்களுக்காகவும் இது”என்று கூறி ஷூவை கழற்றி புஷ்ஷை நோக்கி ஆவேசத்துடன் எறிந்தார். சிறையிலிருந்து விடுதலையானால் முன்ததிர் இனி பத்திரிகைத்தொழிலில் ஈடுபடமாட்டார் என்றும் அநாதை நிலையம் ஏற்படுத்தி அதில் அகதிகளாக்கப்பட்டோருக்கு நல்வாழ்வு அளிக்கும் பணியை மேற்க்கொள்வார் என்றும் அவருடைய சகோதரர்களான மைதம், வெர்கம் ஆகியோர் கூறியுள்ளனர். செய்தி:தேஜஸ்
http://palaivanathoothu.blogspot.com/
|