Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/15/2009
|
|||
வாஷிங்டன்:ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றியதால் மனோநிலை பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களுக்கு சிகிட்சையளிக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது அமெரிக்கா.
ஆரம்பத்தில் அமெரிக்க அரசு இதற்காக செலவிடும் தொகை 12 கோடி டாலர். அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து சிகிட்சையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீர்ர்களின் மனம் சம்பந்தமான நோயை கண்டறிவதற்கு 170 கேள்விகளைக்கொண்ட பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்துவர். இதனடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சிகிட்சையளிக்கப்படும். பரிசோதனை நடத்துவதற்கு 1500 நபர்களுக்கு மனநோயைப்பற்றிய வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
மனோநிலை பாதிக்கப்பட்டதால் தற்கொலைச்செய்யும் ராணுவவீரர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துவருவதே அமெரிக்க அரசு இத்திட்டம் துவக்குவதற்கு காரணம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தற்கொலைச்செய்பவர்களின் எண்ணிக்கை 214 என்று அதிகாரப்பூர்வ கணக்கீடு கூறுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தை பீடித்திருக்கும் மற்றொரு பிரச்சனை மதுபானம். முழுநேரமும் போதையிலிருப்பதால் ராணுவ வீரர்கள் பலரும் ராணுவ பணிக்கு லாயக்கற்றவர்களாக மாறியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கின்ற ராணுவவீரர்களுக்கு அதிகமான மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளது. எந்த நிமிடமும் கொல்லப்படுவோம் என்ற பீதி, பிஞ்சுக்குழந்தைகள் உட்பட அப்பாவிமக்களை சுட்டுக்கொன்ற நினைவுகள், சக ராணுவவீரர்களின் குண்டடிபட்டு அப்பாவி மக்கள் இறந்துபோகும் காட்சிகளுக்கு சாட்சியாகும் நிலை. இங்கெல்லாம் ராணுவ பணியாற்றுவது தேவையற்ற செயல் என்ற எண்ணம் ஆகியவைகள்தான் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மனோநிலை பாதிப்படைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சரியான முறையில் மனநோய் சிகிட்சை திட்டங்கள் இல்லாததுதான் இப்பிரச்சனை இவ்வளவு தீவிரமடைய காரணம் என்று பிரிகேடியர் ஜெனரல் ரோண்ட கோர்னம் கூறுகிறார். ட்ரமா ரிஸ்க் மானேஜ்மண்ட் (Trauma Risk Management) என்ற பெயரில் பிரிட்டீஸ் அரசு பிரிட்டன் ராணுவவீரர்களுக்கு இத்தகைய திட்டத்தை செயல்படுத்தியது. பிரிட்டனில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராணுவ்வீர்ர்களுக்கிடையேயான தற்கொலை எண்ணிக்கை மற்றவர்களோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ராணுவ பணியை தொடரும் வீர்ர்களுக்கு இந்த சிகிட்சை எந்த அளவு பலன் தரும் என்பதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |