Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/15/2009
|
|||
பன்றிக்காய்ச்சல்(Swine flu) தடுப்பு நடவடிக்கைக்காக ஹஜ்ஜை தாமதப்படுத்துவது கூடாது:டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கவேண்டும் என்பதற்காக ஹஜ்ஜை தாமதப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று பிரபல மார்க்க அறிஞரும், சர்வதேச உலமாக்கள் சபை தலைவருமான டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கூறியுள்ளார். கத்தரிலிருந்து வெளிவரும் அல்வதன் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் அவர் கூறும்போது, "இந்த வருடம் ஹஜ் மற்றும் உம்ராவை பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பிற்காக தாமதப்படுத்தக்கூடாது" என்றார்.
ஆனால் மக்கள் நோய் பரவிவிடும் என்று பயந்தால்(contracting the virus) இந்த வருட ஹஜ் பயணத்தை தவிர்க்கலாம்.ஆனால் ஹஜ் கடமைகளை செய்வதை தள்ளிப்போடக்கூடாது. முஸ்லிம்கள் ஹஜ்ஜிற்காக செல்லும்போது கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.பன்றிக்காய்ச்சல் உலகமுழுவதும் பரவிய நோய்(Pandemic)அல்ல என்றும் கர்தாவி கூறினார்.
மேலும் பன்றிக்காய்ச்சலால் இறப்போரை உயிர்தியாகிகளாக கருத இயலாது என்றார்.ஆனால் உலக முழுவதையும் இந்நோய் ஆக்கிரமித்தால் அதன் மூலம் இறக்கும் முஸ்லிம்களை உயிர்தியாகிகளாக கருதலாம். ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவோர் முகமூடிகளை(mask)அணிந்துக்கொண்டு நிறைவேற்றவேண்டும். இஸ்லாம் சுயபாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நோய் அறிகுறிகள் இருப்பதாக யாராவது உணர்ந்தால் உடனடியாக அதற்கான சிகிட்சையை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி செயல்படுதல் வேண்டும். ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக நெரிசலை தவிர்க்கவும். சரியான நேரங்களை தேர்ந்தெடுத்து கிரியைகளை நிறைவேற்றுதல்வேண்டும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் மேலும் சுத்த்த்தை அதிகமாக கடைபிடித்தல் வேண்டும். சுத்தம் என்பது இஸ்லாம் கூறும் உபதேசங்களில் முக்கியமான ஒன்று இவ்வாறு கர்தாவி ஹாஜிகளுக்கு உபதேசங்களை வழங்கியுள்ளார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |