Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/15/2009
|
|||
புதுடெல்லி:போலி என்கவுண்டர் வழக்கில் நீதிமன்ற செயல்பாடுகளை சீர்குலைக்க குஜராத் மோடி அரசு நடத்தி வரும் முயற்சிகளை பற்றி அறிக்கை அளிக்க மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் குஜராத் அரசுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் ஒருபகுதியாகத்தான் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வஹன்வதியிடம் மத்திய சட்ட அமைச்சர் அறிக்கையை கேட்டிருக்கின்றார்.
அஹ்மதாபாத்தில் நடைபெற்ற என்கவுண்டர் போலி என்று கண்டறிந்த அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிபதி எஸ்.பி.தமாங்கின் விசாரணை அறிக்கைக்கு தடை விதித்துள்ள குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லீவ் மனுவை தாக்கல்செய்யும். நீதிவிசாரணை அறிக்கையில் கண்டறிந்துள்ள விபரங்கள் நீதிபதியின் அதிகாரத்தை மீறிய செயல் என்று சுட்டிக்காட்டி குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்ததால் நீதிமன்றம் நீதிவிசாரணை அறிக்கைக்கு தடை விதித்தது.
ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் அறிக்கையில் குழப்பம் உள்ளது என்று கூறுவதும், தடை விதிக்க கோருவதும், அடுத்த நாளே நீதிபதியை இடமாற்றம் செய்வதும் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செயல் என்று வீரப்பமொய்லி கூறினார்.
போலி என்கவுண்டர் சம்பந்தமாக மத்திய அரசு தாக்கல் செய்த அஃபிடேவிட்டில்(வாக்கு பிரமாணம்)உளவுத்துறை அறிக்கையின் விபரங்கள் மட்டுமே உள்ளது என்றும் அது நீதிமன்றத்தில் ஆதாரமாகது என்றும் வீரப்பமொய்லி கூறினார். உளவுத்துறை அறிக்கையை காரணமாக வைத்து போலி என்கவுண்டர் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா? நடத்தப்பட்ட என்கவுண்டர் போலியா? என்பதற்கப்பால் ஒரு நீதிபதியின் நீதிவிசாரணை அறிக்கையை ஸ்டே செய்வதும், அடுத்த நாளே அவரை இடமாற்றம் செய்வதும் தைரியமற்ற செயல் என்று கருதுவதாக வீரப்பமொயில் கூறினார். இவ்விஷயத்தில் எந்தவொரு அரசியல் அஜண்டாவும் இல்லை. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிப்பை ஏற்படுத்துவதுதான் குஜராத்தின் அரசின் இந்நடவடிக்கை. இது சம்பந்தமாக அட்டர்னி ஜெனரல் ஆய்வுச்செய்து சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கையைதாக்கல் செய்வார். நீதிமன்றத்தின் செயல்பாடுகள் நேர்வழியில் நடைபெற உறுதிச்செய்வது கடமை. கீழ் நீதிமன்றத்தின் அறிக்கையை மூடிவைக்க நிர்பந்தபடுத்தக்கூடாது. சட்டத்தின் வழியில் ஏதாவது ஒரு வகையில் தடை ஏற்படுத்த முயற்சி செய்வது உறுதியானால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மொய்லி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |