Posted by Kashif
(sohailmamooty) on 9/17/2009
|
|||
தென்கச்சி கோ.சுவாமிநாதன் மரணமடைந்தார் சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் மரணமடைந்தார். சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார். தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார். பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |