Is they follows Islam or kills Islam

Posted by S.mohamed Mohideen (stmohideen) on 9/21/2009

 

ரமலான் பெருநாள்;;

 

 

17 செப்டம்பர் 2009 தினகரன் நாளிதழில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு என்ற தலைப்பில் விளம்பரத்தை ஏர்வாடி ஜாக் வெளியிட்டிருந்தது. அவ்விளம்பரத்தில் 18 செப்டம்பர் 2009 அமாவாசை என்பதால் அதற்கு அடுத்த நாள் தான் அதாவது 19 செப்டம்பர் 2009 தினம் தான் இவ்வாண்டின் பெருநாள் தினமாகும் என விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் திருக்குர்ஆன் 55:05இ 2:189இ 10:05இ 06:96இ 14:33இ 06:104இ 03:105இ போன்ற ஆயத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் இந்த விளம்பரத்த்pல் ஹதீஸ் ஒன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது “மாதம் இருபத்தொன்பது மற்றும் முப்பது நாட்களைக் கொண்டது. நாம் அறியாத சமுதாயம். நமக்கு கணக்கிடவும், எழுதவும் தெரியாது” என நபி (ஸல்) கூறினார்கள்.

 

இந்த ஹதீஸ் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு மாதம் 29 அல்லது  30 என்பதை கணக்கிட தெரியாது என்பதால் கண்டிப்பாக நபி(ஸல்) அவர்கள் யாருக்கும் மாதத்தின் நாள் எண்ணிக்கையை கணக்கிடும் முறையை கற்பித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் ஏர்வாடி ஜாக் அமைப்பினர்கள் யார் கற்று தந்த முறையில் பிறையை கணக்கிடுகிறார்கள்

 

18 செப்டம்பர் 2009 தினகரன் நாளிதழில் ஜாக் நோன்பு பெருநாள் அறிவிப்பு என அப்துல் காதிர் மதனி மாநில பொது செயலாளர் ஜாக் அவர்களால் இரு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  அதில் இவ்வருட ரமலான் மாத முதல் நோன்பை 22.08.09 அன்று நோற்ற அடிப்படையில் 19.09.09 அன்று 29 நோன்புப் பெருநாளாகும்.

 

ஆக ஒரே அமைப்பை சார்ந்த வௌ;வேறு கிளைகளுக்கிடையே இத்தனை முரண்பாடுகள் கொண்டுள்ள இவர்கள் மற்றவர்;களை குறை கூறுவதை தவிர்த்து தங்களுக்குள்ள குறைபாடுகளை தீர்க்க முயற்சித்தால் அது அவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நன்மையாக அமையும்.

 

அமைப்புகள் தங்களுக்குள் கொண்டுள்ள மார்க்க முரண்பாடுகளை பத்திரிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் நியாயப்படுத்தும் இது போன்ற முயற்சிகள் இஸ்லாத்தில் ஏதோ தெளிவின்மை இருப்பது போன்ற மாயயை உருவாக்குவாகிறது என்பதை மறுப்பதற்கில்லை.  

 

இதே நிலையிலேயே இவர்கள் தொடர்ந்து செயல்பட்டால் குழப்பவாதிகளை இஸ்லாமிய மக்கள் இனம் கண்டு புறம் தள்ளுங்கள்.

 

திருக்குர் ஆன் வசனங்கள் 9:107இ108 தை முஸ்லிம்கள் நினைவு கூர்ந்து குழப்பவாதிகளை இனம் கண்டு அவர்களை விட்டும் விலகியிருங்கள்.

 

பிறை விஷயத்தில் இத்தனை அக்கறை காட்டும் ஏர்வாடி ஜாக் போன்ற அமைப்புகள் திருகுர் ஆன் வசனங்கள் 36:38இ40 மற்றும் 2:22இ 13:3இ 43:10இ 50:078இ 51:48இ 71:19இ 78:06இ 79:30இ 92:6 பற்றியெல்லாம் இதுவரை எந்தவொரு ஆய்வும் ஏன் மேற்கொள்ளவில்லை.

 

மேற்கண்ட ஆயத்துகளில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை நாமும் பார்ப்போம்.

 

36:38 சூரியன் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குச் செல்கிறது - இது முற்றிலும் அறிந்தவன் மிகைத்தவனின் ஏற்பாடாகும.;

 

36:40 சூரியன் - அதற்கு சந்திரனை எட்டிவிடவும் முடியாது இன்னும் இரவு பகலை முந்திவிடவும் முடியாது ஒவ்வொன்றும் (அதன்தன்) வட்டத்தில் நீந்தி செல்கின்றன.

 

உலக விஞ்ஞான கொள்கைகள், மேற்கண்ட இரு ஆயத்துக்களுக்கும் எதிர்மறையாக உள்ள போதிலும் எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் திருகுர் ஆன் வசனத்தை ஆதாரமாக வைத்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி தான்.

 

மேற்கண்ட இரு ஆயத்துகளும் சூரியன் அதன் வட்டத்தில் நீந்தி செல்கிறது என கூறுகிறது என்றால் சூரியன் சுற்றுகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் விஞ்ஞானமோ சூரியன் சுற்றவில்லை என இன்று வரை கூறியும், கற்பித்தும் வருகிறது.

 

மேலும் வசனங்கள் 2:22 மற்றும் அதனை ஒத்த வசனங்கள் புமியை விரிப்பாகவும் வானத்தை விதானமாகவும் அமைத்துள்ளதை பற்றி கூறுகிறது.

 

இதில் விரிப்பு என்பதற்கு தட்டை என்ற பொருள் தான் பொருத்தமாகிறது அப்படியென்றால் புமி கோள வடிவம் என்று கூறுவது திருகுர் ஆன் வசனங்களுக்கு எதிரானது.

 

திருகுர் ஆன் வசனம் 13:41 நிச்சயமாக நாம் புமியை நாடி, அதனுடைய அருகுகளிலிருந்து அதை நாம் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? …..

 

மேற்கண்ட வசனத்தில் புமியை அதனுடைய விளிம்புகளிலிருந்து சிறியதாக்கி வருவதான பொருளில் அல்லா கூறுகிறான்.  உலக அறிவியலின் படி புமி கோள வடிவத்தில் உள்ளது. கோளவடிவம் என்பது பந்தை போன்றது. பந்து போன்றவைகளுக்கு விளிம்பாக எதை எடுத்துக் கொள்ளவது? ஏனென்றால் கோள வடிவத்திற்கு இது தான் விளிம்பு என்று எதையும் முடிவு செய்ய முடியாது. ஆக திருகுர் ஆன் படி புமிக்கு விளிம்பு உண்டு என்பதால் கண்டிப்பாக புமி கோள வடிவிலிருக்க முடியாது என்பது தான் உண்மை.

 

இதுபோன்று பல்வேறு அரிய செய்திகளையும, விஞ்ஞான உண்மைகளையும் தன்னகத்தே கொண்ட திருக்குர் ஆன் வசனங்களுக்கு பகிரங்கமாக முரண்படும் விஷயங்களை எதிர்ப்பதில் அக்கறை காட்டாமல் அமல்களில் உள்ள சிறு சிறு வேறுபாடுகளை முன் வைத்து இஸ்லாமிய சமூதாயத்தை பல துண்டுகளாக்கிக் கொண்டிருக்கும் அமைப்புகளை இஸ்லாமியர்கள் நம்புவதை தவிர்ப்பதோடு நம் சமூதாயம் முன்னேற்றம் காண உலகிலுள்ள ஒவ்வொறு அரசு அலுவலங்களிலும் குறைந்தது இரண்டு இஸ்லாமியனாவது பணியிலிருக்க வேண்டும். இதை நிறைவேற்ற கல்வி மிகவும் முக்கியம். ஆகையால் கல்விக்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து நமது வருங்கால சந்ததிகள் அடிமைகளாக ஆகாமல் தடுக்க முயற்சியுங்கள்.

 

மேலும் லைலத்துல் கத்ரு இரவை பற்றிய தர்க்கத்தை முன் வைத்து இஸ்லாத்தை கேவலபடுத்துவதை கூட அறியாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத; ஏர்வாடி தன் பங்குக்கு பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ஹதீஸ்களை காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ரு இரவு ரமலானின் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாடுவதாய் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டு ஏதோ ஏர்வாடி தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் மட்டுமே மார்க்க சம்பந்தமான விஷயங்களை புரிந்துக் கொள்ளும் திறமைக் கொண்டவர்கள் போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

 

அவர்கள அவர்களின் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களான புகாரி(49) (2017) (20700) எல்லாருமே புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் மிகவும் எளிய நடையில் தான் உள்ளது. இதில் மற்றவர்களுக்கு புரியவில்லை என்பது இஸ்லாமியர்களை முட்டாளாக்கும் வேலையாகத் தான் தெரிகிறது.

 

ஒவ்வொரு நாளும் வௌ;வேறு விதங்களில் மார்க்க விஷயங்களை புரிந்துக் கொள்வதில் அதிக தேர்ச்சி பெற்றவர் ஜனாப் ஜைனுல் ஆப்தீன் அவர்கள், இதில் அவரை மிஞ்ச வேறு ஆளே கிடையாது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எவ்வாறென்றால் ரமலான் பிறை, பன்றி இறச்சி உண்ணுவது, தொப்பி அணிதல் போன்ற விஷயங்களில் அவ்வப்போது தன்நிலையை மாற்றிக் கொண்டவர். மார்க்க விஷயங்களில் அவ்வப்போது என்ன புரிகிறதோ அவைகளை வெளியிட்டு அவர் பங்கிற்கு இஸ்லாத்தை கேவலப்படுத்திக் கொண்டேயிருப்பவர். அமீர் எவ்விதமோ நாங்களும் அவ்விதமே என ஏர்வாடி தவ்ஹீத் ஜமாத்திரும் நிருபித்துள்ளார்கள்.

 

ஏர்வாடியை பொருத்தவரை சுன்னத் ஜமாத்தினர் ஒவ்வொரு ரமலானிலும் பிறை 27 ல் இரவு நேர இபாத்துக்களை செய்துவருகிறார்கள் என்பது உண்மை தான.; ஆனால் தவ்ஹீத் ஜமாத்தினர்கள் சொல்வது போல் லைலத்துல் கதரு இரவு அன்று தான் என்ற முடிவுடன் இந்த இபாத்துக்களை மேற்கொள்ளப்படவில்லை. மாறாக லைலதுல் கத்ரை ரமலானில் குறிப்பிட்ட நாட்கள் அனைத்திலும் தேட முயற்சிக்காதவர்கள் ரமலான் 27 வது இரவிலாவது இபாத்துக்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் என்றாவது ஒரு லைலத்துல் இரவையாவது அடையும் பேராசையில் தான் ரமலான் 27 வது இரவில் இபாத்துக்கள் செய்து வருவதற்கான நோக்கமாகும்.

 

சரி அவர்கள் செய்வதிருக்கட்டும்இ நீங்கள் அதாவது தவ்ஹீத் ஜமாத்தினர் எந்த நாட்களில் எந்த இபாதத்துகளை செய்துள்ளீர்கள். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு ரமலான் 27வது அன்றாவது இபாத்துகளை செய்வது மேலானது தான். 20 ரக்காத்தை 8 ஆக மாற்றியதுஇ தொப்பியை இல்லாமல் செய்தது போன்ற சாதனைகளோடு ரமலான் 27 நடக்கும் இந்த இபாதத்துகளையும் கெடுத்து தனது சாதனைகளில் மேலும் ஒன்றை சேர்த்துக் கொள்ளும் முயற்சியாகத் தான் இது தோன்றுகிறது.

 

அவர்கள் குறிப்பிட்டுள்ள ஹதீதுகளில் ரமலானின் கடைசி பத்தில் ஒற்றைப் படை நாட்களில்; லைலத்துல் கத்ர் “இருக்கலாம்”; என்று தான் ஹதீஸ்கள் கூறுகின்றனவோ தவிர இவர்கள் எழுதியுள்ளது போல் “மேற்கண்ட ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர் ரதலான் மாதத்தில் கடைசி பத்து இரவுகளில் 21,23,25,27,29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது” என பிரசுரம் வெளியிட்டதிலிருந்து ஹதீஸ்களை புரிந்துக் கொள்வதில் தங்கள் அமீருக்கு கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள்.

 

லைலத்துல் கத்ர் இரவை (ரமலானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல்

 

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்

நபித் தோழர்களின் சிலருக்கு (ரமலானின்) ரமலானின் ஏழு நாட்களில் வந்த கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது அப்போதுஇ நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்தளில் (லைலத்துல் கத்ர் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைதிருப்பதை காண்கிறேன். எனவே அதை தேடுபவர் (ரமலானின்) கடைசி ஏழு நாட்களில் அதை தேடட்டும்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

 

“லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது” என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

இருபத்து நான்காவது இரவில் அதை தேடுங்கள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்

;

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களின் மூலம் லைலத்துல் கத்ர் இரவு ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஏதேனுமொரு நாளில் வரும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இவர்களுடைய இன்னுமொரு பிரசுரத்தில் புகாரீ 351 முஸ்லிம்1616 குறிப்பிட்டு அதில் “மாதவிடாய் பெண்கள் பெருநாள் தொழுகை நடைபெரும் திடலுக்கு சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம்” என்று குறிபிடப்பட்டுள்ள இந்த     ஹதீஸில் வரும் “அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும்” என்ற சொற்றொடெர் மூலம் கூட்டு துவா நிருபனமாகிறது.

 

இவர்களால் மட்டும் தான் குழப்ப முடியுமா? எங்களாலும் முடியும் என்பது போல் சுன்னத் ஜமாத்தினரும் தங்களின் பங்குக்கு பிறைக் கமிட்டி மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். 7வது தெரு பள்ளியை ஏர்வாடி ஜாக் பிடித்திருந்த போது அன்றைய பொது ஜமாத் தலைவர் அவர்கள் சொந்தக் காரணங்களுக்காக தன்னுடைய பொருப்புகளை தற்போதைய பொது ஜமாத் தலைவர் அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். அன்றைய தினம் அவருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் பொருத்தமாக தெரிந்த இன்றைய ஜமாத் தலைவரை இன்று ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான காரணம் என்ன? தற்போதைய ஜமாத் தலைவர் சரியில்லை என்றால் முறையாக என்ன செய்ய வேண்டுமே அதை செய்வதை விடுத்து போட்டி பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற இவர்களின் அரசியலுக்கு இஸ்லாம் தான் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  

நமக்குளிருக்கும் முரண்பாடுகளை பகிரங்கம் செய்வதால் இஸ்லாத்தை மற்றவர்கள் கேவலமாக பேசும் வாய்ப்பை நாமே உருவாக்கிக் கொடுக்காமல, நம்மை நாமே கேவலப் படுத்துவதற்காக  செலவு செய்யும் பணங்களை கொண்டு நம் சமூதாய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கைத்தொழில் கற்பிப்பு முகாம்களை நடத்தலாம்.

 

இந்தியாவிலேயே ஏர்வாடிக்கு சமமான ஊர்களுடன் ஒப்பிடுகையில், கல்வி நிறுவனங்களுக்காக வந்து செல்லும் பேரூந்துகள் எண்ணிக்கை அடிப்படையில; ஏர்வாடிக்கு தான் அதிகமான அளவில் பேரூந்துகள் வந்து செல்கின்றன. அப்படியென்றால் மக்கள் எதிர்பார்க்கும் தரமான கல்வி நமது ஊரில் இல்லையென்பது தான் பொருள். நலத் திட்டக்களுக்காக தாராளமாக பொருள் உதவிகள் செய்து வரும் செல்வந்தர்கள் பலர் நம்மூரிலிருந்தும் தரமான கல்விக் கூடங்களோ மேல்நிலை பள்ளி படிப்பிற்கு மேல் கற்பிக்கக் கூடிய கல்வி நிறுவனம் ஒன்றைக் கூட இதுவரை ஆரம்பிக்க முடியாதது வேதனை தரும் செய்தி. இதனால் கல்வி பயணக் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரியளவில் நமது பொருளாதாரம் மாதமாதம் வீண்ணடிக்கப்பட்டு வருகிறது.

 

திருநெல்வேலி மாவட்ட வங்களில் அதிகமாக அளவில் வங்கி வர்த்தகம் நடைப்பெற்று வரும் ஊர்களில் ஏர்வாடியும் ஒன்று ஆனால் இது வரை பணம் எடுக்கும் இயந்திரம் ஒன்றைக் கூட நம்மால் ஏர்வாடிக்கு கொண்டுவர இயலவில்லை.

 

ஜீயர் மடத்திற்கும் நம்மூர் அமைப்பு ஒன்றிற்குமிடையே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஜீயர் மடம் அடவோலை போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதை ஏர்வாடியை சார்ந்த அமைப்புகள் ஏன் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

 

இதுபோன்ற விஷயங்களில் இயக்கங்கள் அக்கறை செலுத்தினால் ஊர் மேம்படும்.    

 

ஏர்வாடி அரசு ஆண்கள் பள்ளியில் 2008-09 மேல் நிலை பள்ளி தேர்வில் யுஉஉழரவெயnஉல பிரிவில் குறிப்பிட்ட ஒரு சில பாடங்களில் மட்டும் அதிகப்படியான மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளார்கள்.  அதற்கான காரணம்? ஆக நமக்குள் சண்டை போடுவதை தவிர்த்து இது போன்ற தவறுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதால் பணம் செலவு செய்து படிக்க இயலாத பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட திருப்புமுனையாக அமையும். 

 

 






Other News
1. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
2. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
3. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
4. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
5. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
6. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
7. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
8. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
9. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
10. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
11. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
12. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
13. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
14. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
15. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
16. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
17. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
18. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
19. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
20. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
21. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
22. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
23. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
24. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
25. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
26. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
28. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
29. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
30. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..