Posted by Kashif
(sohailmamooty) on 10/2/2009
|
|||
புனித பயணிகள் யாரும் ஸ்வைன்ஃபுளுவால் மரணம் அடையவில்லை: சவூதி அறிவிப்பு! கடவுள் கிருபையாலும் சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் புனித பயணிகளிடையே எச்1 என்1 பரவுவது ஏறக்குறைய முழுவதுமாகவே கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்று அத்துறை தெரிவித்துள்ளது இது தொடர்பாக புனிதப்பயணம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய அரபுகள் மற்றும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பு செய்ததில் இதுவரை அவர்கள் யாரும் மரணம் அடைந்ததாக தகவல் இல்லை என்றும் கூறினார். மேலும் ரமலானில் மக்காவில் ஒன்பது ஸ்வைன் ஃப்ளு நோயாளிகளும் மதீனாவில் 15 நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்திருந்ததாக பதிவாகி உள்ளது நாட்டின் பிற பகுதிகளில் இரண்டு பேர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவை புனிதப்பயணம் வந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவானதுதான் என்றார். சவூதியில் புனிதப்யணிகளுக்கு மத்தியில் ஸ்வைன்ஃப்ளு வேகமாக பரவலாம் என்ற அச்சம் மக்களிடயே இருந்ததும் ஈரான் போன்ற சில நாடுகள் தங்கள் விமான சேவைகளை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. செய்தி: இந்நேரம்.காம் http://markaspost.wordpress.com/2009/10/02/% |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |