Posted by Haja Mohideen
(Hajas) on 10/3/2009
|
|||
துபாயில் தாயகம் திரும்பும் மார்க்க அறிஞருக்கு பாராட்டு நிகழ்ச்சி
தாயகம் திரும்பும் மார்க்க அறிஞர் மவ்லவி கீழை ஜஹாங்கீர் அரூஸிக்கு பாராட்டு நிகழ்ச்சி துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் தாயகம் திரும்பும் மார்க்க அறிஞர் மவ்லவி கீழை ஜஹாங்கீர் அரூஸிக்கு பாராட்டு நிகழ்ச்சி 01.10.2009 வியாழக்கிழமை மாலை தமிழ் உண(ர்)வக காயிதெமில்லத் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவி ஏ.எஸ். சபியுல்லாஹ் ஜமாலி இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிபு, பொருளாளர் எம். அப்துல் கத்தீம், இணைச்செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத், கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லாஹ், ராமநாதபுரம் பரக்கத் அலி, முஹம்மது சர்புதீன், ரஹ்மத்துல்லாஹ், அக்பர் அலி, நைனார் முஹம்மது, முஹம்மது ரபி உள்ளிட்ட மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி அவர்களின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தனர். அவரது இத்தகைய பணிகள் தாயகம் திரும்பினாலும் தொடர வேண்டும் என தங்களது ஆவலினை தெரிவித்தனர். அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் மவ்லவி ஜஹாங்கீர் அரூஸிக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது. ஏற்புரை நிகழ்த்திய கடந்த 11 ஆண்டு காலம் அமீரகத்தில் பணிபுரிந்து வந்தாலும் தாயகம் திரும்புகிறேன் என்ற உணர்வு இல்லை. பணத்தை விட மக்களின் மனங்களை அதிகம் கொள்ளையடித்துள்ளேன். இத்தகைய உறவு தொடர வேண்டும் என்றார். இத்தகைய சிறப்புமிகு நிகழ்ச்சியில் என்னை கௌரவித்த அமீரக காயிதெமில்லத் பேரவைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |