Posted by Haja Mohideen
(Hajas) on 10/10/2009
|
|||
பாளை.யில்
பாளை.யில் போலி நகையை காட்டி பணம் மோசடி செய்தததாக சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- போலி நகை மோசடி பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவரை பாளை சாந்தி நகரை சேர்ந்த மாரியப்பன் (34), கண்ணன்(32) , குமரி மாவட்டம் அருள்நாதபுரத்தை சேர்ந்த டேனியல் ஈஸ்டர்தாஸ்(33) ஆகியோர் கடந்த வாரம் சந்தித்தனர். அவர்கள் தங்களிடம் தங்க வளையல்கள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறினர். இதையடுத்து 2 வளையல்களை கொடுத்து அதற்கு முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர். 3 பேர் கைது இதன்பின்னர் அவர்கள் 3 பேரும் மீதி பணத்தை கேட்டு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன் 2 வளையல்களையும் பரிசோதனை செய்தார். அதில் அவை போலி நகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் பாளை. குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முகமது மைதீன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் இருளப்பசாமி ஆகியோர் விசாரணை நடத்தி மாரியப்பன் உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர். துணை நடிகர் இதில் டேனியல் மலÛ யாளம், தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து உள்ளார். அவர் தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தில் துணை நடிகராக நடித்து வருகிறார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |