Posted by Haja Mohideen
(Hajas) on 10/10/2009
|
|||
கடற்கரையோர கிராம மக்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி First Published : 10 Oct 2009 05:21:51 AM IST வள்ளியூர், அக். 9: திருநெல்வேலி மாவட்ட கடற்கரையோர மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான பயிற்சி வகுப்புகள் வள்ளியூரில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முன்னோடியாக நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புகளில் ராதாபுரம் வட்டத்திலுள்ள 181 ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். தொடக்க நிகழ்ச்சிக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் வீரராகவராவ், ராதாபுரம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் பால்துரை, தேர்தல் பணி துணை வட்டாட்சியர் விஜயா மற்றும் வருவாய்த் துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக் கணக்கெடுப்பு பணி முடிவடைந்ததும் அனைத்து மக்களுக்கும் ஸ்மார்ட் கார்டு என்ற அடையாள அட்டை வழங்கப்படும் என்றனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |