இஸ்ரேலிய தொழிலதிபர் ஒருவர் அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்குவதற்கு முனைப்பு காட்டிவருகிறார். அல் ஜசீரா நிறுவனம் இஸ்லாமியவாதிகளுக்கு நெருக்கமான தொலைக்காட்சி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் பிறந்த யூதரான ஹைம் சபான் என்பவர் பல கோடி ரூபாய்களுக்கு அதிபராவார். இவர் கத்தாரின் அமீரிடம் அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தின் 50% பங்குகளை வாங்க விருப்பம் காட்டியுள்ளார். இதனை எகிப்திய செய்தி நிறுவனமான அல்-மேஸ்ரியூன் தெரிவித்துள்ளது.
இது சபானின் முதல் முயற்சி அல்ல என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர் முதலில் 2004 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் அமீரக பயணத்தின் போது இந்த செய்தி நிறுவனத்தை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இவர் இஸ்ரேலின் Bezeq telephony என்ற தொலை தொடர்பு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபான் யூத கொள்கைகளை வெளியுலகத்திற்கு பரப்புவதில் பிரபலமானவர். இவர் சமீபத்தில் நடந்த டொரோண்டோ திரைப்பட விழாவில் இஸ்ரேலை புறக்கணித்தவர்களை, யூதர்களை வெறுப்பவர்கள் என்று கூறினார். இவர், "இந்த உலகம் எப்போதும் யூத எதிர்ப்பாளர்களை கொண்டுள்ளது. இன்றும் சரி இனியும் சரி. ஆனால் யூதர்கள் முன்பும் சரி இனியும் சரி வளம் பெற்று வாழ்வார்கள், யூத எதிர்ப்பாளர்களே நீங்கள் தோற்றுவிட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.
Thanks,
THAPALPETTI
|