உம் அப்துல்லாஹ், இவர் பல மாதங்களாக தன்னுடைய குழந்தையை பார்க்கக் கூடிய நாளை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய குழந்தை பிறந்தவுடன் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காஸா நகரத்தின் உள்ள ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த உம் அப்துல்லாஹ்விடம் மருத்துவர்கள் அவர் பெற்றெடுத்த குழந்தையின் இதயம் நன்றாக வளர்ச்சி பெறவில்லை என்று கூறினர்.
இந்த உம் அப்துல்லாஹ் இஸ்ரேல் காஸா பகுதியின் மீது போர்தொடுத்த போது கருவுற்றிருந்தார். அவர் வசித்து வந்த கபால் அல் ரயீஸ் பகுதி இஸ்ரேலின் மிகப் பெரிய விமான தாக்குதல்களை அனுதினமும் சந்திக்கும் நகரங்களில் ஒன்று.
இஸ்ரேல் காஸா மீது தொடுத்த வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களில் 437 குழந்தைகள் உட்பட 1400 பேர் உயிரிழந்தனர். 5450 மக்கள் காயமடைந்தனர்.
ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களை ஒப்பிட்டு பார்த்தால் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதாச்சாரம் 50% உயர்ந்துள்ளதாக ஷிபா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
"பல குழந்தைகள் இருதய மற்றும் நுரையீரல் குறையுடன் பிறக்கின்றன" என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர், மருத்துவர் முவேயாஹ் ஹசானியன் தெரிவித்தார். "கை கால்கள் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளும் உண்டு" என்று அவர் கூறினார்.
இது பற்றி மருத்துவர்கள், "இது போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் இஸ்ரேலின் சட்டவிரோதமான ஆயுதங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் என்று கூறினர். மேலும் இந்த ஆயுதங்கள், குழந்தைகள் கருவாக இருக்கும் போதே அவர்களின் உடல்களை பாதித்துவிடுகிறது" என்று கூறினர்.
கருவியல் வல்லுனர்கள், "குழந்தைகளிடம் காணப்படும் இந்த குறைபாடுகள் இஸ்ரேல் காஸா மீது பயன்படுத்திவரும் சர்வதேச அளவில் தடுக்கப்பட்ட ஆயுதங்களால் தான் என்று கூறுகின்றனர். இதில் எந்த குழந்தைகளுக்கும் மரபியல் தொடர்பான குறைபாடுகள் இல்லை" என்று கூறினார்.
"இஸ்ரேல், மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய இடங்களில் பயன்படுத்திய வெள்ளை பாஸ்பரஸ் பல கருக்களின் குறைபாடுகளுக்கு காரணம்" என்று ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.
இந்த வெள்ளை பாஸ்பரஸ் மனித சதையை எலும்பு வரை சென்று எரிக்கக்கூடியது. இது காஸாவின் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது.
இந்த வெள்ளை பாஸ்பரஸ் இராணுவ நோக்கத்திற்காக கூட பயன்படுத்த கூடாது என்று 1980 களில் இருந்தே தடுக்கப்பட்டுவிட்டது.
மருத்துவர் ஹசானியன் மேலும் கூறுகையில், "இன்னும் சில குழந்தைகளில் Dense Inert Metal Explosive (DIME) என்ற ஆயுதங்களின் தடயங்கள் இருந்தன.
இந்த Dense Inert Metal Explosive (DIME) ஒரு சோதனை வகையிலான ஆயுதமாகும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஆயுதம் தாக்கிய பகுதியில் உள்ள பொருட்களுக்கு குறைந்த அளவிலான சேதங்களை ஏற்படுத்தும், மாறாக அந்த பகுதியில் உள்ள மனிதர்கள் மேல் இந்த ஆயுதங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆயுதம் மிகவும் நுண்ணிய அளவிலான துகள்களை அது வெடித்த பகுதியிலிருந்து எறியும். இந்த துகள்கள் மனித உடலின் உள்ளே சென்று எலும்புகளை கூட வெட்டும் சக்தி படைத்தவை.
இந்த ஆயுதத்தில் பயன்படுத்தப் படும் உலோகம் இந்த ஆயுதத்தின் தாக்குதலுக்கு பின்னாலும் யாரேனும் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு புற்று நோயை ஏற்படுத்தும் வகையிலானவை.
இது போல் இன்னும் பல குறைபாடுகளை நங்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றோம்" என்று ஹசானியன் கூறினார்.
நன்றி
தபால்பெட்டி
|