தாமிபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் 2012ல் நிறைவடையும்* பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர் தகவல்
திருநெல்வேலி :தாமிபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் வரும் 2012ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என திட்டப்பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.தாமிரபரணி ஆற்றில் வீணாகும் தண்ணீரை ராதாபுரம் பகுதிக்கு திருப்பிவிட 369 கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப்பணிகள் நடந்துவரும் சேரன்மகாதேவி வெள்ளங்குழியில் நதிநீர் இணைப்பு பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய துணை முதல்வர், "தாமிபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் திசையன்விளை, சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் பிரச்னை தீரும். 23 ஆயிரத்து 40 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த திட்டத்திற்கு 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டு, 72 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. நதிநீர் இணைப்பு திட்டம் வரும் 2012ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்'.துணை முதல்வருடன் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, கலெக்டர் ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏக்கள் சென்றனர்.
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tirunelveli#243362
|