Posted by Haja Mohideen
(Hajas) on 10/15/2009
|
|||
என்சிசி மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சி 15 Oct 2009 03:41:30 AM IST
ராதாபுரம், ஏர்வாடி, களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்களுக்கு சைக்கிள் பேரணி, மலையேறும் பயிற்சி கமாண்டிங் அதிகாரி ராஜகோபாலன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாணவர்கள் மலையோர கிராமங்களில் சைக்கிளில் பேரணியாக சென்று பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து திருக்குறுங்குடி சென்ற அவர்க் பாலிதீன் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மலையேறும் பயிற்சி குறித்து ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். பயிற்சி தொடக்க விழாவில் ராதாபுரம் என்சிசி அலுவலர் வி. யோபுஅமலன், வனத் துறை துணை இயக்குநர் பத்ரசாமி, திருக்குறுங்குடி வனச் சரக அலுவலர் தேவசகாயம், வனவர் திரவியம், வனக் காப்பாளர் முருகன், ஆசிரியர்கள் உதயக்குமார், ஜேசுராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சியை சுபேதார் ராமையா, ஹவில்தார் மெஹதா ஆகியோர் அளித்தனர். ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்சிசி அலுவலர் எல். சுப்பிரமணியன் நன்றி கூறினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |